சேதி தெரியுமா? - இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் கம்பீர்!

By தொகுப்பு: மிது

ஜூலை 8: நீட் தேர்வு வினாத்தான் கசிவு விவகாரத்தில் தவறிழைத்தவர்கள் கண்டறியப் படாவிட்டால் மறுதேர்வு நடத்தப்படும் என்று உள் நீதிமன்றம் தெரிவிற்றது.

ஜூலை 8: மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒரு நபர் குழுவை அமைத்துத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

ஜூலை 9: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக் காலம் நிறைவடைந்ததை அடுத்து முன்னாள் வீரர் கவதம் கம்பீரைப் புதிய தலைமைப் பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நியமித்தது.

ஜூலை 10: காலியாக இருந்த விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் 82.48% வாக்குகள் பதிவாயின.

ஜூலை 11: நீட் தேர்வில் மிகப் பெரிய அளவில் முறைகேடுகள் நடக்கவில்லை என்றும் மீண்டும் தேர்வு நடத்த அவசியம் இல்லை என்றும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

ஜூலை 12: தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் விற்றால் கடும் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்தார்.

மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி ஆர். மகாதேவனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கவும், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி கே.ஆர், ஸ்ரீராமை நியமிக்கவும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். 41 வயதான அவர், 188 டெஸ்ட் போட்டிகளில் 704 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE