டிஜிட்டல் டைரி 2: தமிழுக்கும் ‘த்ரெட்ஸ் லோகோ’வுக்கும் தொடர்பு உண்டா?

By சைபர் சிம்மன்

சமூக ஊடகப் போட்டியில் ‘த்ரெட்ஸ்’ பிடித்திருக்கும் இடம் என்ன, அது தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்துமா போன்ற கேள்விகளுக்கு மத்தியில், அதன் ‘லோகோ’ உருவாக்கம் தொடர்பான சுவாரசியமான தகவல்கள் தெரிய வந்துள்ளன. முக்கியமாக ‘த்ரெட்ஸ் லோகோ’ எந்த அர்த்தத்தைக் குறிக்கிறது என்பதும் வெளியாகியுள்ளது.

இந்தச் சேவை அறிமுகமானபோதே, அதன் ‘லோகோவும்’ விவாதப்பொருளானது. அதாவது, தமிழ் எழுத்தான ‘கு’வைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது எனப் பேசப்பட்டது. இந்நிலையில், இன்ஸ்டகிராம் நிறுவனத் தலைவர் ஆடம் மோசரி, மெட்டாவின் சித்திரக் கலைஞர் ஜெஸ் பரோஸ் ஆகியோர் லோகோ உருவாக்கம் தொடர்பான காணொளியைப் பகிர்ந்துள்ளனர். இந்த லோகோவைத் தேர்வு செய்யும் முன், 40க்கும் மேற்பட்ட லோகோ வடிவங்களைப் பரிசீலனை செய்ததாகத் தெரிவித்துள்ளனர்.
நிராகரிக்கப்பட்ட லோகோக்களைப் பார்த்து இணைய வாசிகள் பலர் கருத்துகளையும் தெரிவித்துள்ளனர்.

Post by @mosseri
View on Threads

எல்லாம் சரி, ‘த்ரெட்ஸ்’ லோகோ உணர்த்துவது என்ன? இணையத்தில் பெரும்பாலானோர் நன்கறிந்த மின்னஞ்சல் என்பதன் குறியீடான ‘@’ எனும் வடிவத்தை ஒட்டி ‘த்ரெட்ஸ்’ லோகோ உருவாக்கப்பட்டதாம். இந்த வடிவத்தை ஏற்று, வளையமாக நீளும் உடையாத கோடாக உருவகப்படுத்திக்கொண்டு லோகோ உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு நூலின் இழை போலவும், கருத்துகளின் தொடர்ச்சியைக் குறிப்பதாலும் ‘த்ரெட்ஸ்’ என்கிற பெயரைக் கொண்டுள்ளது.

நிற்க, ‘த்ரெட்ஸ்’ லோகோ மட்டுமல்ல, அந்தப் பெயருக்கு முன் பல பெயர்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன. ‘எபிகிராம்’, ‘டெக்ஸ்ட்கிராம்’ போன்ற பெயர்களை வைக்கப் பரிசீலனை செய்தார்களாம்!

முந்தைய அத்தியாயம் > டிஜிட்டல் டைரி 1: ‘மைஸ்பேஸ்’ சேவையை நினைவூட்டும் புது செயலி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE