வேலை ரெடி: போக்குவரத்துத் துறையில் ஊதியத்துடன் பயிற்சி

By செய்திப்பிரிவு

சென்னை, விழுப்புரம், கோவை, சேலம், தருமபுரி, திருநெல்வேலி, நாகர்கோவில் என மாநிலத்தின் பல்வேறு இடங்களில் உள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலகங்களில் வெவ்வேறு பணிகளுக்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதில் காலியாக உள்ள 417 பயிற்சி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்களில் தகுதியானவர்கள் பயிற்சிக்காகத் தேர்வு செய்யப்படுவார்கள்.

தகுதி: 2019, 2020, 2021, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் ஏதாவது ஒரு பொறியியல் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள். இதே காலகட்டத்தில் டிப்ளமோ பட்டயப் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள். கலை, அறிவியல், வணிகவியல் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு: பயிற்சிக்கான விதிகளின்படி வயது வரம்பு பின்பற்றப்படும்.
பயிற்சி காலம்: ஒரு வருடம்
பயிற்சி பணியிடம் விவரம்: பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூ. 9,000 ஊதியமும், பட்டயப் படிப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூ. 8,000 ஊதியமும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு https://shorturl.at/yCHKT என்கிற இணைப்பைப் பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை: http://boat-srp.com/tnstc2023/ என்கிற தளத்தில் இணைய வழியில் மட்டும் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு பயிற்சிப் பணியிடங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.10.2023. தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரம் http://www.boat-srp.com/ என்கிற தளத்தில் 20.10.2023 அன்று வெளியிடப்படும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்