கல்வி தருவதுடன் பள்ளியின் வேலை முடிந்ததா?

By சுகிர்தராணி

ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம், சாதி, வர்க்கம், பொருளாதார ஏற்றத் தாழ்வு, பாலினச் சமத்துவமின்மை போன்றவை நிறைந்திருக்கும் சமூகத்தின் மிகச்சிறிய அலகாகத்தான் குடும்ப அமைப்பு இருக்கிறது. குடும்பத்தின் பெரிதாக்கப்பட்ட வடிவமாகச் சமூகம் இருக்கிறது. இந்தக் குடும்ப அமைப்பிலிருந்து வெளிவரக்கூடிய குழந்தைகள்தாம் சமூகத்தில் உள்ள பள்ளிகளில் நுழைகிறார்கள். குடும்பமும், அவர்கள் வசிக்கும் தெருவும், ஊரும், மாணவர்களின் புழங்குகிற வெளி யாக இருக்கின்றன.

இங்கெல்லாம்தான் அவர்கள் அதிக நேரம் செலவிடுகின்றனர். பள்ளியில் அவர்கள் கற்கும் நேரம் ஐந்திலிருந்து ஆறு மணி நேரமே. இங்குக் கற்பித்தலோடு, நீதிபோதனை, நன்னெறிக் கல்வி, நூலக வாசிப்பு என்று விழுமியங்களை ஆசிரியர்கள் கற்பித்தாலும், வீட்டுச் சூழலின் தாக்கமே மாணவர்களிடத்தில் மிகுந்து காணப்படுகிறது. ‘ஆண் பெண் சமம்’, ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று கற்பித்தாலும் அதைப் பழகுகிற இடமாக வீடும் ஊரும் இல்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE