சேதி தெரியுமா?

By Guest Author

ஜூன் 2: உலகின் மிகப் பெரிய தானிய சேமிப்புத் திட்டத்துக்காக ரூ. 1 லட்சம் கோடியை கூட்டுறவுத் துறையில் முதலீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

ஜூன் 3: சூரிய குடும்பத்துக்குள் பூமியைத் தவிர சனி கிரகத்தின் நிலவு ஒன்றில் தண்ணீர் இருப்பதை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி உறுதி செய்தது.

ஜூன் 3: மங்களூரில் நடைபெற்ற இந்திய சர்ஃபிங் ஓபன் போட்டியின் ஆடவர் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிஷோர் குமாரும்; மகளிர் பிரிவில் கமலி மூர்த்தியும் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினர்.

ஜூன் 4: மணிப்பூர் இனக்கலவரம் தொடர்பாக விசாரிக்க குவஹாட்டி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி அஜய் லம்பா தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை ஆணையத்தை மத்திய அரசு நியமித்தது.

ஜூன் 5: தேசிய கல்வி மைய தரவரிசை கட்டமைப்பின் (என்.ஐ.ஆர்.எஃப்.) தரவரிசைப் பட்டியலில் ஐந்தாவது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடம் பிடித்தது. நாட்டின் சிறந்த கல்லூரிகள் பட்டியலில் சென்னை மாநிலக் கல்லூரி மூன்றாமிடத்தையும், லயோலா கல்லூரி ஏழாம் இடத்தையும் பிடித்தன.

ஜூன் 6: தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறையில் இயக்குநர் பதவி மீண்டும் கொண்டுவரப்பட்ட நிலையில், அந்தப் பதவிக்கு அறிவொளி நியமிக்கப் பட்டார். ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளராக ராமேஸ்வர முருகன் நியமிக்கப்பட்டார்.

ஜூன் 7: தமிழ்நாட்டு சிறைச்சாலைகளில் உள்ள சிறைவாசிகளின் உணவு முறையை மாற்றியமைக்கும் திட்டம் அறிமுகமானது.

ஜூன் 8: அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் அதிநவீன ‘அக்னி ப்ரைம்’ ஏவுகணை ஒடிஷா மாநிலம் பாலசோரில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப் பட்டது.


தொகுப்பு: மிது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

2 mins ago

சிறப்புப் பக்கம்

8 mins ago

சிறப்புப் பக்கம்

40 mins ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

மேலும்