ஒளிப்படங்களால் வசீகரிக்கலாம்!

By கனி

வீ

ட்டை ஒளிப்படங்களால் அலங்கரிப்பது பெரும்பாலானோருக்குப் பிடிக்கும். ஒளிப்படங்களால் அலங்கரிக்கலாம் என்று முடிவெடுத்த பின்னர், அவற்றை எப்படிக் காட்சிப்படுத்தப் போகிறீர்கள் என்பதில்தான் எல்லாமே அடங்கியிருக்கின்றன. குடும்ப உறுப்பினர்களின் ஒளிப்படங்கள் மட்டுமல்லாமல் பொதுவான உங்கள் ரசனையை வெளிப்படுத்தும் ஒளிப்படங்களாலும் வீட்டை அலங்கரிக்கலாம். இந்த ஒளிப்பட அலங்காரம் வீட்டுக்கு ஒரு புத்துணர்வான தோற்றத்தைக் கொடுக்கும். ஒளிப்படங்களால் வீட்டை அலங்கரிப்பதற்கான சில வழிகள்…

ஒரே ஒரு படம்

ஒளிப்படங்களால் அலங்கரிக்க வேண்டும் என்றவுடன், நிறைய ஒளிப்படங்களைச் சேகரிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஒரே ஒரு ஒளிப்படத்தால்கூட அறையின் தோற்றத்தை மாற்ற முடியும். உதாரணமாக, உங்களுடைய அறைச் சுவரில் மென்மையான வண்ணத்தைப் பயன்படுத்தியிருந்தால், இயற்கைக் காட்சி, உருவப்படம் என ஏதாவது ஒன்றைப் பெரிய ஒளிப்படமாக மாட்டலாம். அந்த ஒளிப்படத்தில் போதுமான வண்ணங்கள் இருக்குமாறு பார்த்துகொள்ளுங்கள். இந்த ஒளிப்படம் அறையின் கவனத்தைக் குவிப்பதாக அமைந்திருக்கும்.

கருப்பொருள் தேர்ந்தெடுக்கலாம்

ஒளிப்படங்களைத் தேர்ந்தெடுக்க கருப்பொருளைப் பயன்படுத்துவதைப் பலரும் விரும்புகின்றனர். அதில் ஒரு கருப்பொருளில் மூன்று ஒளிப்படங்களை வைத்து ஒரு ‘டிரைடிக்’கை (triptych) ஒளிப்படத்தை உருவாக்கலாம். ஒரே விதமான சட்டகத்தில், இந்த மூன்று ஒளிப்படங்களும் இருக்க வேண்டும். உங்களுக்கு வரலாற்றில் ஆர்வம் இருந்தால், உங்கள் மனதுக்குப் பிடித்த வரலாற்று நிகழ்வை மூன்று ஒளிப்படங்களாக அறையில் மாட்டி வைக்கலாம். அப்படியில்லாவிட்டால் உங்களுடைய குடும்ப ஒளிப்படத்தைக் கூட இந்த ‘டிரைடிக்’ முறையைப் பயன்படுத்தி மாட்டிவைக்கலாம்.

சிறிய ஒளிப்படங்கள்

ஒருவேளை, உங்களுடைய அறை சிறியதாக இருந்தால், அதற்கேற்ற மாதிரி சிறிய ஒளிப்படங்களால் அறையை அலங்கரிக்கலாம். உங்கள் அறையின் சுவர் அடர் நிறத்தில் இருந்தால், இந்தச் சிறிய ஒளிப்படங்களின் சட்டகங்களைக் கறுப்பு வெள்ளையில் அமைக்கலாம். ஒளிப்படங்கள் எந்தக் கருப்பொருளில் இருந்தாலும், அவற்றை வித்தியாசமாக அடுக்கிவைக்க முடியும். ஓர் ஒளிப்படத்தைக் கிடைமட்டமாகவும், மற்றொன்றைச் செங்குத்தாகவும் தொங்கவிடலாம். இப்படி ஒளிப்படங்களை மாறுபட்ட வரிசையில் அடுக்கினால் அறைக்கு வித்தியாசமான தோற்றம் கிடைக்கும்.

ஒளிப்படக்காட்சிச் சுவர்

உங்களுடைய அறை நீளமாக இருந்தால், சுவரில் ஒளிப்படங்களை ஒரு காட்சிக்கு வைப்பது போல அடுக்கிவைக்கலாம். வசதியிருந்தால், இந்த ஒளிப்படங்களுக்கு மேலே சிறிய விளக்குகளைப் பொருத்தலாம். உங்களுடைய அறை நீளமாக இல்லாமல், வீட்டின் கூரை உயரமாக இருந்தால் ஒளிப்படங்களைச் செங்குத்தாக மாட்டலாம். இப்படி ஒளிப்படங்களை மாட்டுவது அறையின் நீளத்தையும் உயரத்தையும் அழகாகப் பிரித்துக் காட்டும்.

ஒளிப்படங்களால் ஒரு ரயில்

உங்களிடம் கைவசம், நிறைய ஒளிப்படங்கள் இருந்தால், அறையில் ஒரு ஒளிப்படங்களாலான ரயிலை உருவாக்கலாம். இந்த ரயிலை எளிமையாக அமைக்க முடியும். சுவரில் சட்டகங்களை இரண்டு புறமும் பொருத்தி, அதில் ஒளிப்படங்களை வரிசையாக அடுக்கினால், ஒளிப்பட ரயில் தயார்.

எங்கும் மாட்டலாம்

சுவரில் மட்டுமே ஒளிப்படங்களை மாட்ட வேண்டும் என்ற யோசிக்கத் தேவையில்லை. வீட்டில் சுவரைத் தவிர ஒளிப்படங்களைப் பொருத்தகூடிய இடங்களையெல்லாம் தேர்ந்தெடுங்கள். அந்த இடங்களிலும் ஒளிப்படங்களைப் பொருத்தலாம். உதாரணமாக, உங்கள் வீட்டின் ஜன்னல், கண்ணாடித் தடுப்புகளால் அமைக்கப்பட்டிருந்தால் அதில் ஒளிப்படங்களைப் பொருத்தலாம். அத்துடன், ஒளிப்படங்களைக் கொடி போல அமைத்து ஜன்னலில் தொங்க விடலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 mins ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்