புகழ் பெற்ற அறைக்கலன் மாதிரிகள்

By ஜே.கே

வீட்டுக்கு அழகு சேர்ப்பதில் அறைக்கலன்களுக்கு (Furnitures) முக்கியப் பங்குண்டு. ஆரம்ப காலத்தில் அறைக்கலன்கள் என்பது செல்வந்தர்கள் வீடுகளை மட்டுமே அலங்கரித்து வந்தன. இன்று பரவலாக எல்லாத் தரப்பு மக்களும் அறைக்கலன்களைப் பயன்படுத்திவருகிறார்கள். இதற்குக் காரணம் புதிய தொழில்நுட்பம். மரத்தைக் கொண்டு மட்டும்தான் முதலில் அறைக்கலன்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. புதிய அறிவியல் வளர்ச்சியால் இன்றைக்கு பிளாஸ்டிக், இரும்பு போன்ற பொருள்களைக் கொண்டும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த அறைக்கலன்கள் வடிவமைப்பில் புதுமையை உண்டாக்கிய உலக முன்னோடிகள் குறித்து அவர்கள் கண்டுபிடித்த மாதிரி அறைக்கலனுடன் சிறு அறிமுகம்:

எட்வார்ட் வாம்லி (1907-1995), அமெரிக்காவைச் சேர்ந்த இவர், உலகின் மிகப் பிரபலமான உள் அலங்கார வடிவமைப்பாளராகத் திகழ்ந்துள்ளார். இவர் அறைக்கலன்கள் வடிவமைப்பிலும் பல புதுமைகளைக் கொண்டுவந்தார். டன்பார் என்னும் அறைக்கலன் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இது இவர் வடிவமைத்த அறைக்கலன் மாதிரி.



கிரெட்டா கிராஸ்மேன் (1906-1999), சுவீடனைச் சேர்ந்த இவர், இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் சுவீடனிலிருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் நகருக்கு இடம்பெயர்ந்தார். சுவீடனில் இருக்கும்போதே அறைக்கலன் வடிவமைப்பில் பயிற்சி பெற்றிருந்தார். சிறந்த அறைக்கலன் வடிவமைப்புக்கான விருதுகளும் பெற்றிருந்தார். அதனால் அமெரிக்காவில் லாஸேஞ்சல் நகரத்தில் அறைக்கலன் வடிவமைப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். அவர் அறைக்கலன் மட்டுமல்லாது விளக்குகள் வடிவமைப்பிலும் கவனம் செலுத்தினார். அவர் வடிவமைத்த விளக்கு மாதிரிகள் இன்று உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.



போர்ஜ் மோஜென்சன் (1914-1972), டென்மார்க்கைச் சேர்ந்த வடிவமைப்பாளரான இவர், அந்நாட்டின் தனித்துவமான கலாச்சாரத்தைத் தனது அறைக்கலன் வடிவமைப்பில் செலுத்தினார். தான் வடிவமைத்த அறைக்கலன்களுக்கான கண்காட்சியை இங்கிலாந்து, ஜெர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்டப் பல நாடுகளில் நடத்தியுள்ளார். இவர் வடிவமைத்த ஸ்பானிய இருக்கை உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் அறைக்கலன் மாதிரி.



ஆர்ன் ஜேக்கப்சன் (1902-1971), டென்மார்க்கைச் சேர்ந்த இவர், இருக்கை வடிவமைப்பில் உலகப் புகழ் பெற்றவர். முட்டை வடிவ இருக்கை, அன்னப் பறவை இருக்கை இவ்விரண்டு இருக்கை மாதிரிகளின் அவருக்கு மிகப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தன.



இசமூ நொகுச்சி (1904-1988), அமெரிக்க வாழ் ஜப்பானியரான இவர் அமெரிக்காவின் நவீன அறைக்கலன் வடிவமைப்பாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர். இவரது தந்தை ஜப்பானியக் கவிஞர். இவர் ஒரு சிற்பியும்கூட. இது இவர் வடிவமைத்த அறைக்கலன் மாதிரி.



ஆல்வர் ஆல்டோ (1898-1976), பின்லாந்தைச் சேர்ந்த இவர், மிகப் புகழ்பெற்ற கட்டிட வடிவமைப்பாளரும்கூட. அமெரிக்க ராயல் இன்ஸ்டியூட், இங்கிலாந்து ராயல் இன்ஸ்டியூட் ஆகிய அமைப்புகளிடமிருந்து கட்டிட வடிவமைப்புக்காக விருதுகள் பெற்றுள்ளார்.



மார்செல் ப்ரூயர் (1902-1981), ஹங்கேரியைச் சேர்ந்த கட்டிட, அறைக்கலன் வடிவமைப்பாளர். இரும்புக் கம்பிகளையும் துணியையும் கொண்டு இவர் உருவாக்கி வாசிலி இருக்கை மாதிரி உலகப் புகழ்பெற்றது. அமெரிக்காவின் புரூக்ளின் அருங்காட்சியகத்தில் இவர் வடிவமைத்த அறைக்கலன்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.



ஜார்ஜ் நகஷிமா (1905-1990), அமெரிக்க வாழ் சீனரான இவர் கட்டிடவியலில் பட்டம் பெற்றவர். பாண்டிச்சேரி ஆஸ்ரமத்தில் குடில் கட்டும் ஆணை அவருக்குக் கிடைத்தது. அங்குதான் நகஷிமா முதன் முதலாக அறைக்கலன் ஒன்றை வடிவமைத்தார். அதற்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து அமெரிக்கா திரும்பியவர், அறைக்கலன்கள் வடிவமைப்பதில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.



சாம் மலூஃப் (1916-2009), அமெரிக்காவைச் சேர்ந்த அறைக்கலன் வடிவமைப்பாளர். படைப்புத் திறனுக்காக வழங்கப்படும் மேக் ஆர்தர் ஃபெல்லோஷ்பை தனது அறைக்கலனுக்காகப் பெற்றுள்ளார். இவரது வடிவமைத்த அறைக்கலன்கள் அமெரிக்காவின் கண்காட்சியகங்கள் பலவற்றிலும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்