நீங்களே பூசலாம் வண்ணம்!

By உமா

தமிழர் திருநாளான பொங்கள் திருநாள் நெருங்கிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கலையொட்டி வீட்டுக்கு வண்ணம் பூசுபவர்கள் இருக்கவே செய்கிறார்கள். சிலர் இரண்டு அல்லது மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை வண்ணம் பூசினாலும், பொங்கலையொட்டியே பூசுவார்கள். 20 ஆண்டுகளுக்கு முன்புகூட பொங்கல் சமயத்தில் வீட்டுக்கு வண்ணம் பூசும்போது வீட்டில் உள்ளவர்களே செய்துமுடித்துவிடுவார்கள். இன்று அது குறைந்துவிட்டாலும், தாங்களே வண்ணம் பூசுபவர்கள் இருக்கவே செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் வண்ணம் பூசும்போது என்னென்ன வைத்திருக்க வேண்டும்?, வண்ணம் பூசும்போது என்னென்ன கவனிக்க வேண்டும்?

வீட்டில் வண்ணம் பூச முதலில் ஏணி கட்டாயம் இருக்க வேண்டும். டேபிள் மீது வண்ணம் பூசினாலும், குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் பூச முடியாது. எனவே ஏணி அவசியம். பெயிண்ட் மற்றும் பிரைமரை கலக்க சரியான டப்பாக்கள் வேண்டும். சுவர்களில் குழந்தைகளின் கிறுக்கல்கள் மற்றும் அழுக்குகள், மேற்கூரையில் இருக்கும் கறைகளை நீக்க உப்புத்தாள் வேண்டும். நல்ல தரமான ப்ரஷ் வகைகள். சுவர் ஓரங்களை வேறு வண்ணங்களில் அழகுப்படுத்துவதாக இருந்தால் ‘டேப்’ வகைகள் போன்றவை கண்டிப்பாக இருக்க வேண்டும்.

சிலர் வண்ணம் பூசுவது என்றால், டப்பாவில் பெயிண்டை ஊற்றி அடிக்கத் தொடங்கிவிடுவார்கள். அது தவறு. முதலில் சுவரை உப்புத்தாள் கொண்டு தேய்த்து பழைய வண்ணத்தை சுரண்ட வேண்டும். ஏனென்றால், புதிதாக பெயிண்ட் பூசும்போது வழவழப்பானதன்மை இருக்கக் கூடாது. மேலும் பழைய வண்ணத்தை முற்றிலுமாக அகற்றினால்தான் புதிய வண்ணம் சுவரில் ஒட்டும். சுவரில் விரிசல்கள் இருந்தால் அதற்கு முன்பு ‘வால்பட்டி’ பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டின் மேற்கூரைக்கும் வண்ணம் பூசுவதாக என்று முடிவு செய்திருந்தால், முதலில் மேற்கூரைக்கு வண்ணம் பூச வேண்டும். பிறகுதான் சுவர்களுக்குப் பூச வேண்டும்.

சுவரில் வண்ணம் பூசும்போது ஒரு முறை பூசினால் போதும் என்று நினைத்தால் தவறாகிவிடும். பழைய வண்ணங்களின் தாக்கம் சுவரில் இருந்தால் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது பூச்சு தரப்பட வேண்டும். அப்போதுதான் பழைய வண்ணம் நீங்குவது போக புது வண்ணமும் சுவரில் நன்றாக ஒட்டி எடுப்பாகக் காட்சித் தரும். வண்ணம் பூச தரமான பிரஷ் வகைகளையே பயன்படுத்துங்கள். தரமற்ற பிரஷ்களைக் கொண்டு பூசினால், அதன் குச்சங்கள் சுவரில் அப்படியே ஒட்டும். இது காய்ந்த பிறகு அசிங்கமாகத் தெரியும். எனவே பிரஷ் தேர்வும் மிக முக்கியம்.

மேற்கூரை மற்றும் சுவர்களுக்கு வண்ணம் பூசும்போது தரைகளை முழுவதுமாக பழைய துணிகள் அல்லது பெரிய தாள்களை கொண்டு மூடுவது நல்லது. சிதறும் பெயிண்ட் தரையில் பட்டு அதன் அழகு கெட்டு போகமல் இருக்க இதை செய்வது நல்லது. சில பெயிண்டுகள் வைகள் கறையாகப் படிந்துவிடும் வாய்ப்பும் உள்ளது. உடனே துடைப்பது அல்லது கழுவுவதன் மூலம் அதை தவிர்க்க முடியும்.

பொதுவாக வீடுகளுக்கு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறையாவது வண்ணம் பூசுவது மிகவும் அவசியம். அப்படி பராமரிக்கும்போது வீட்டின் சுவருக்கு அவசியம். சுவரில் பாதிப்பு ஏற்படாமல் அது தடுக்கும். மேலும் வண்ணம் பூசும்போது வீட்டின் விரிசல்களையும் சரி செய்ய வாய்ப்பு ஏற்படும் என்பதால், விரிசல் மேலும் அதிகமாவது தடுக்கப்படும். ஒரு வகையில் இது வீட்டுக்கும் நல்லதுதானே.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்