இளைப்பாறுவதை மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றக் கூடியதில் நாற்காலிகளுக்குப் பெரிய பங்கு இருக்கிறது. நாற்காலிகளைத் தேர்ந்தெடுப்பதும், அவற்றைப் பொருத்தமான இடத்தில் வைப்பதும்கூட ஒரு கலைதான். வீட்டின் உட்புற வடிவமைப்பிற்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை வெளிப்புற வடிவமைப்பிற்கும் கொடுக்கும் போது அது இளைப்பாறல் நேரத்தை மேலும் சுவாரஸ்மானதாக மாற்றக்கூடும். இந்த வெளிப்புற வடிவமைப்பில் இப்போது விக்கர் (Wicker furnitures) அறைக்கலன்களும், ஒளிரும் இருக்கைகளும் (Illuminated seaters) ஒளிரும் பூந்தொட்டிகளும் (Illuminated planters)பெரும்பங்கு வகிக்கின்றன.
அழகாகும் பால்கனி
விக்கர் அறைக்கலன்கள் உங்கள் வீட்டின் வெளிப்புற வடிவமைப்பிற்கு உதவிசெய்கின்றன. “பால்கனி, தோட்டம் போன்றவற்றை அழகுகாக்குவதற்கு இந்த விக்கர் அறைக்கலன்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த விக்கர் மேஜை நாற்காலிகள் வீட்டை உள்ளே மட்டுமல்லாமல் வெளியேயும் அழகுப்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நிச்சயம் உதவிகரமாக இருக்கும்”, என்கிறார் எர்த்க்குயூ இன்ட்ரியர் ஷோரூம் நிறுவனர் ஷில்பா. இந்த விக்கர் மேஜை நாற்காலிகளின் விலை முப்பதாயிரத்தில் இருந்து தொடங்குகிறது.
ஒளிரும் தோட்டம்
இரவில் தோட்டத்தில் நேரம் செலவழிக்க நினைப்பவர்களுக்கு இந்த ஒளிரும் இருக்கைகளும், ஒளிரும் தொட்டிகளும் உடனடித் தீர்வாக இருக்கும். “இந்த ஒளிரும் இருக்கைகளில் பலவிதங்கள் இருக்கின்றன. பிடித்தமான நிறம், அளவு என உங்கள் விருப்பதிற்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஒளிரும் தொட்டிகளில் எலோயைசா(Eloisa), சாய்ரா (Chiara)ஆகிய இரண்டு வகைகளும் இப்போது பிரபலமாக இருக்கின்றன”, என்று சொல்கிறார் ஷில்பா. இந்த ஒளிரும் இருக்கைகள் பதினைந்தாயிரத்தில் இருந்தும், ஒளிரும் தொட்டிகள் நான்காயிரத்திரத்தில் இருந்தும் கிடைக்கின்றன.
பரபரப்பான வாழ்க்கைமுறையில் ஓய்வெடுப்பதற்கு எங்கே நேரம் இருக்கிறது என்று பலரும் சலித்துக்கொள்வதை இப்போது அதிகமாகக் கேட்கமுடிகிறது. அப்படி ஒரேடியாக ஒய்வெடுப்பதைத் தவிர்க்காமல் இருக்கும் இடத்தை மேலும் அழகுப்படுத்திக்கொள்வதன் மூலம் உங்கள் இளைப்பாறல் நேரம் மேலும் இனிமையானதாக மாறும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago