இந்தியாவில் சுமார் 95 சதவீத வீடுகள் மற்றும் கட்டடங்களுக்கு பூகம்பத்தை தாங்கும் திறன் இல்லை. இதை சொன்னது வேறு யாருமல்ல, தேசிய பேரழிவு நிர்வாக ஆணையம்தான். அண்மையில் இந்த அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில், பூகம்ப அபாயம் அதிகமுள்ள பட்டியலில் குஜராத், பீஹார், காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், பூகம்பத்தைத் தாங்கக்கூடியவை அல்ல. தற்போது இந்தியா முழுவதும் 30 கோடி வீடுகள் இருப்பதாகவும், அவற்றில் 95 சதவீத வீடுகள், பூகம்பத்தைத் தாங்கும் திறன் அற்றவை என்றும் தேசிய பேரழிவு நிர்வாக ஆணையம் தெரிவித்துள்ளது.
பூகம்பச் சரிவுகள்
இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்குமே பூகம்ப பாதிப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. பூகம்பங்களில் வீடுகள் பாதிக்கப்படாமல் இருக்கவும், பூகம்பத்தைத் தாங்கும் அளவுக்கும் ஜப்பான் போன்ற சில நாடுகளில் வீடுகள் கட்டப்படுகின்றன. பூகம்பத்தின்போது வீடுகள் அப்படியே தரைமட்டமாகி விழுந்துவிடுவதில்லை. பக்கவாட்டில் சரிந்தே வீடுகள் பாதிக்கப்படுகின்றன. அதாவது, பூகம்பத்தின்போது கட்டடங்கள் பக்கவாட்டு அதிர்வுகளால் அதிகம் பாதிக்கப்பட்டு, கட்டடத்தின் பக்கங்கள் குவியலாகச் சரிகின்றன. இப்படிச் சரியாமல் இருக்கவும், பூகம்பத்தைத் தாங்கும் அளவுக்கும் வீடு இருக்க வேண்டுமென்றால், வலுவான கான்கீரிட்டைக் கொண்டு மட்டும் வீட்டை கட்டினால் போதும் என்று நினைக்க வேண்டாம்.
பரிந்துரைகள்
பூகம்பத்தால் வீடுகள் சரியாமல் தடுக்க உலகெங்கும் சில பரிந்துரைகள் முன் வைக்கப்படுகின்றன. சில வீடுகளில் பக்கவாட்டுத் தாங்கும் திறன் ஒவ்வொரு பக்கவாட்டிலும் ஒவ்வொரு விதமாக இருக்கும். கட்டடத்தில் இப்படி எந்த வேறுபாடும் இருக்கக் கூடாது. கட்டடம் பக்கவாட்டு அழுத்ததைத் தாங்கும் திறனை அனைத்துத் திசைகளிலும் சமமாகப் பெற்றிருக்க வேண்டும். அதோடு பக்கவாட்டு அழுத்தத்தைப் பூமிக்குச் செலுத்தும் தன்மையையும் பெற்றிருக்க வேண்டும். ஆனால், இந்தியாவில் பெரும்பாலான கட்டிடங்களில் பக்கவாட்டு அழுத்தத்தைத் தாங்கும் திறன் நிச்சயமாக இந்த முறைகளில் இருப்பதில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
எனவே தற்போதைய முறைகளுக்கு மாற்றான பக்கவாட்டு அழுத்ததைத் தாங்கும் உத்தியைக் கட்டுமானத்தில் புகுத்த வேண்டும் இதுவும்கூட பூகம்பம் வரப் பாதிப்புள்ள பகுதி என்று வரையறுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு ஏற்பவும், சூழலுக்கு ஏற்பவும் உத்திகளை வகுக்க வேண்டும் என்ற கருத்தும் வேகம் பெற்றுள்ளது. கட்டத்தின் அனைத்து பாகங்களும், அமைப்புகளும் சுமைகளைத் தாங்கும் திறனை சமமாக நிச்சயம் பெற்றிருக்க வேண்டும், கட்டத்தின் அனைத்து அடிபாகங்களும், அமைப்புகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தத் தொழில்நுட்பங்களோடு மிக முக்கியமாக, கட்டுமானம் எக்காரணம் கொண்டும் பலவீனம் இல்லாதவாறு அமைக்கப்பட வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
கட்டுமானம் கவனம்
மிகச் சுலபமாக உடையும் தன்மையுள்ள கட்டுமானப் பொருட்களைக் கட்டுமானத்தில் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பூகம்ப மண்டலத்தைப் பொறுத்தும், மண்ணின் தன்மைக்கு ஏற்பவும் அஸ்திவாரத்தையும் அமைக்க வேண்டும். அஸ்திவாரம் அமைப்பதில் எக்காரணம் கொண்டும் சமரசம் செய்துக்கொள்ளக் கூடாது. கட்டமைப்பில் உறுதியைத் தரும் சுவர்களை அமைக்க வேண்டும். கட்டடம் திடீரென ஏற்படும் முடுக்கங்களைத் தாங்கும் திறனையும், அதற்கு இசைந்து கொடுக்கும் திறனையும் பெற்றிருக்க வேண்டும்.
ஏனென்றால், இது அழுத்தத்தையும், நெருக்கத்தையும், எதிர்கொள்ளும் வகையில் இருந்தால்தான், பூகம்பத்தின்போது ஏற்படும் பக்கவாட்டு அதிர்வு, எதிர் முடுக்க அதிர்வு ஆகியவற்றைத் தடுக்க முடியும். இதன்மூலம் கட்டடத்தின் மொத்த அமைப்பும் உடையாமலும், சிதறாமலும், சுவர்கள் சரியாமலும் காப்பாற்ற முடியும். இதுபோன்ற பரிந்துரைகள் பூகம்ப ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுகின்றன.
பூகம்பத்தைத் தாங்கும் அளவுக்கு இன்னும் சில பரிந்துரைகள்கூட உலக அளவில் தொடர்ந்து முன் வைக்கப்படுகின்றன. கட்டடங்களுக்கான கம்பிகளை அதிகரிப்பதன் மூலம் அதிர்வைத் தாங்கும் வடிவமைப்புகளை உருவாக்க முடியும் என்று சொல்கிறார்கள். கட்டுமானப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தேவையைத் தாண்டி யாரும் கட்டுமான கம்பிகளைப் பொறுத்த முன்வருவதில்லை. அண்மைக் காலமாகக் கட்டத்தின் அடித்தளத்தில் ரப்பர் மெத்தைகள் வைக்கும் யோசனையும் ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுகிறது.
இந்தியத் தர நிர்ணயக் கழகமும் பூகம்பத்தைத் தாங்கும் கட்டுமானத்துக்கான நெறிமுறைகளை வகுத்துள்ளது. ஆனால், அதைக் கட்டுமானத் துறையில் உள்ளவர்கள் பின்பற்றுகிறார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago