வீட்டை வாடகைக்கு விடுகிறீர்களா?

By லலிதா லட்சுமணன்

புதிதாக வீடு கட்டி குடி புகுந்திருக்கிறீர்கள். திடீரென்று ஓராண்டுக்குள்ளேயே வேறு ஊருக்கு மாற்றலாகிவிடுகிறது. அல்லது வெளிநாட்டுக்குச் செல்லும்படியான சூழல் ஏற்படுகிறது.

வீட்டை வாடகைக்கு விட்டுத்தான் ஆகவேண்டும். வெறுமனே, “இத்தனை ரூபாய் வாடகை. 5 மாசம் முன்பணம்” என்று வாய் வார்த்தையில் இப்போது பேசி வீட்டை வாடகைக்குவிட முடியாது. இருபது ரூபாய் முத்திரைத் தாளிட்ட பத்திரத்தில் இரு தரப்பும் வாடகை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது நடைமுறைக்கு வந்துவிட்டது. அதுபோன்ற ஒப்பந்தத்தில் இருக்க வேண்டிய முக்கிய அம்சங்களின் பட்டியல் இது:

*இரு தரப்பினரும் வயது, விலாசம், PAN எண் போன்றவற்றைக் குறிப்பிட வேண்டும். வாடகைதாரர் மாதச் சம்பள வேலையிலிருந்தால், நிறுவனம், பதவி இவற்றையும் குறிப்பது நலம்.

*வாடகையை மணி ஆர்டரிலோ, காசோலை மூலமாகவோ அனுப்புகிற காலம் மலையேறிவிட்டது. NEFT வழியாகத்தான் தொகை அனுப்புகிறார்கள். அதற்குத் தேவையான விவரங்களைக் கொடுத்துவிடுங்கள். (இது ஒப்பந்தத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை) ஆனால் சில வீடுகளில், வாடகையை வயதான பெற்றோர் கணக்கில் வரவு வைக்கக் கோருவார்கள். இதுபோன்ற சமயத்தில், அக்ரிமென்டிலும் இதுதொடர்பான தெளிவான விளக்கங்கள் இருக்க வேண்டும்.

*உங்களின் வீட்டில் குளிர்சாதன வசதி, மேசை, நாற்காலி, கட்டில் உள்பட எல்லா உள்கட்ட அலங்காரங்களையும் கொண்டதாகவோ அல்லது இதில் பாதி வசதிகளைக் கொண்டதாகவோ இருக்கலாம். உங்களின் வீட்டில் என்னென்ன அறையில் என்னென்ன அறைக்கலன்கள் உள்ளன என்பது ஒப்பந்தத்தின் பட்டியலில் இடம்பெற வேண்டும். அவை யாவும் இயங்கும் நிலையில் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். வாடகைக்கு வீட்டை விடும் முன், சொத்து வரி, மின் கட்டணம் போன்றவற்றைக் குறித்த காலத்தில் செலுத்துங்கள்.

*உங்கள் வீட்டில் இன்வெர்ட்டர் வசதி இல்லாமலிருக்கலாம், ஆனால் வாடகைக்கு வருபவர் இன்வெர்ட்டரைப் பயன்படுத்துபவராக இருப்பார். அப்படியிருந்தால், உங்கள் வீட்டிலுள்ள 3 ஃபேஸ் மின் வசதி, இன்வெர்ட்டருடன் சரியாக இணையுமா என்று சரிபாருங்கள். (இப்போது அனைத்துச் சாதனங்களும் நாட்பட வருவது இல்லை. மின் பழுது நேர்ந்து, டிவி வெடித்தது போன்ற செய்திகளும் வருகின்றன. ஆகையால் கூடுதல் எச்சரிக்கை தேவை).

*11 மாசத்துக்கு ஒருமுறை ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும். வாடகை உயர்த்தப்படும் போன்ற வாசகங்கள் பொதுவாக ஒப்பந்தத்தில் இடம்பெறும். இவற்றைச் சில வாடகைதாரர்கள் மறுக்கலாம். விவாதித்து முடிவு எடுங்கள்.

*வாடகைக்கு விட்ட பின்னர், ஏதாவது ஒரு சாக்கு வைத்துக் கொண்டு அடிக்கடி வீட்டைப் போய்ப் பார்ப்பது பண்பல்ல. வாடகைக்கு இருப்பவருக்கு தர்மசங்கடம் ஏற்படும். ஏதாவது சிக்கல் என்றால் மட்டும் வாடகைக்கு விட்ட வீட்டைக் கண்காணிப்பது உசிதம்.

*வீடு, குடித்தனத்துக்காகத்தான், தொழில் நோக்கத்துக்காக இல்லை என்பதை மிகத் தெளிவாக ஒப்பந்தத்தில் குறிப்பிடுங்கள். தையல், டியூஷன் போன்றவை செய்தொழிலில் வரும். ஆனால் செராக்ஸ் மெஷின் வைத்துக் கொள்வது, துணிகள் வாங்கி விற்பது போன்றவை வியாபாரமாகக் கருதப்படும் வாய்ப்புகள் உள்ளன.

*சின்னச் சின்ன பழுதுக்கான செலவை, குடித்தனக்காரரே (ரூபாய் 100 வரை ஆகும் சில்லறை வேலைகளை) ஏற்க வேண்டும். வேறு பெரிய தொகைக்கான பழுது நேர்ந்தால், வீட்டின் சொந்தக்காரரே செலவை ஏற்பதுதான் முறை.

*திருமணம் ஆகாத மூன்று, நான்கு பேர் வீட்டில் சேர்ந்து தங்குகிறார்கள் என்றால், ஒப்பந்தத்தை யார் பேரில் போட வேண்டும். யார் பொறுப்பு என்பதை கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.

*உங்கள் வீடு ஏழெட்டு பேர் இருக்கிற தளங்களில் அமைந்திருந்தால், தள உரிமையாளர்கள் சங்கத்தின் விதிப்படி குடித்தனகாரர்களின் ஒத்துழைப்பு வேண்டும்.

*வெடி மருந்து போன்ற எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்கள் ஏதுமில்லை என்பதும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட வேண்டியது அவசியம்.

*வாடகைக்கான இடம் சற்று பெரியதாக இருந்தால், ஓர் அறையை மட்டும் உள் வாடகைக்கு விட வாய்ப்பு உண்டு. இதற்கான விதியும் ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருக்க வேண்டும்.

- காலம் வேகமாக மாறிவருகிறது. அடுத்த வீட்டிலிருப்பவர்கள்கூட யாரென்று தெரியாத நிலைமை இருந்து வருகிறது. எனவே புது நபருக்கு வீட்டை வாடகைக்கு விடுவதற்கு முன்பு, எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக் கொள்வது அவசியம்.

பின்குறிப்பு: வாடகை கட்டுப்பாடுச் சட்டத்தின் கீழ் முன் பணம் பதினொரு மாத ஒப்பந்தம் இவற்றில் மாறுதல் வருமென்று தெரிகிறது. ஆனால் அது அமலாக குறைந்தது 18 மாதங்களாகுமாம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்