கூரையிலும் புல் வளர்க்கலாம்

By வா.ரவிக்குமார்

வசதியும் வாய்ப்பும் இருந்தால் வானத்தை வில்லாக வளைக்க முடியாவிட்டாலும் கூரையிலும் புல் வளர்க்கலாம் என்பதை இன்றைய நவீனக் கட்டுமானம் சாத்தியப்படுத்தியிருக்கிறது.

கட்டுமானத் துறையில் தினம் தினம் ஏகப்பட்ட தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இதன் பலன்களும் கட்டுமானத் துறையை தாண்டி, தனி மனிதர்கள்வரை நீள்கிறது. இயற்கையையும் தன்னகத்தே கொண்ட நவீனங்களுக்கு என்றைக்குமே பிரகாசமான எதிர்காலம் இருக்கும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம், இன்றைக்கு பல நகரங்களில் மட்டுமில்லாமல் புறநகர்களில் பரவலாகிவரும் பசுமைக் கட்டிடங்கள். இந்த வரிசையில் கிராஸ் ஃபென்சிங் எனப்படும் புல்விரிப்புக் கூரையும் ஒன்று.



புதிய தொழில்நுட்பம்

புல்விரிப்புக் கூரைகளை நவீனக் கட்டுமானத்தின் தலைவாசல் என்றே கூறலாம். பசுமை வீடுகள் பெருகிவரும் இந்நாளில் இத்தகைய புல்விரிப்புக் கூரைகளை தங்களின் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் கொண்டுவரவேண்டும் என்னும் விருப்பம் நாளுக்கு நாள், குடியிருப்புவாசிகளிடையே பெருகிவருகிறது. பசுமைச் சூழலைத் தக்க வைக்கும் பெரும் பங்கை கூரைகளே ஏற்றிருப்பதால், புல்விரிப்புக் கூரைகள் கட்டுமானத் துறையில் நவீன வரப்பிரசாதமாக மாறியிருக்கின்றன.



சிமெண்ட் கரைசலுக்குப் பதில் பிளாஸ்டிக்

கிராஸ் ஃபென்சிங் என்பது புல்வெளிகளை கூரைகளாக மாற்றும் தொழில்நுட்பம். வழக்கமான சிமெண்ட் கான்கிரீட் கலவையில் மேற்கூரையை அமைப்பதற்குப் பதிலாக, கண்ணாடிகளைக் கொண்டும், இரும்பு கிராதிகளைக் கொண்டும், மிக உறுதியான பிளாஸ்டிக் சேனல்களைக் கொண்டும் கூரைகள் அமைக்கப்படுகின்றன. இரும்பு, பிளாஸ்டிக், கண்ணாடிப் பொருட்களை ஒன்று சேர்ப்பதற்கு வலுவான திருகாணிகளே பயன்படுத்தப்படுகின்றன.



இயற்கை இடர்களைத் தாங்க

அதிகமான மழை, அதிக வெயில், போன்ற பலமான இயற்கைப் பேரிடர்களைத் தாங்கும் வகையில் இரும்புப் பொருட்களைக் கொண்டும், கனமான பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டும் அமைக்கப்படும் கூரைகள் தாங்கும் வண்ணம் அமைக்கப்படுகின்றன. இரும்புக் கூரையில் துரு ஏறாமல் இருக்க அதற்குரிய வர்ணங்களும் அடிக்கப்படுகின்றன. வலுவான வகையில் அமைக்கப்படும் பிளாஸ்டிக் கூரைகளும் மழை, புயலைத் தாங்கும் திறத்துடன் அமைக்கப்படுகின்றன.



பச்சைப் பசேல் கூரை

வீட்டின் கூரையில் விதவிதமான ஓடுகளைப் பதித்து, அதன்மேலே புல்விரி மெத்தைகளை வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப அமைத்துத் தருகின்றனர். இதன்மேல் சூரிய வெளிச்சமும், நீரும் செல்வதற்கு உரிய ஏற்பாடுகளையும் செய்திருப்பர். வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கேற்ப கூரையில் மட்டுமில்லாமல், பக்கச் சுவர்களிலும் இத்தகைய வசதிகளைச் செய்துதருகின்றனர். இன்னும் சிலபேர், கூரையின் ஒரு சிறு பகுதியைத் திறந்து, மூடும் வசதியையும் செய்துகொள்கின்றனர்.

சில வெளிநாட்டுக் கார் ரகங்களின் மேற்புறம் திறந்து, மூடும் வசதியுடன் அமைக்கப்பட்டிருக்கும். இரவு நேரத்தில், மேற்கூரை மட்டும் திறந்த காரில், நட்சத்திரங்களுடன் நம்முடன் பயணிக்கும் சுகமான அனுபவத்தை, நம் வீட்டில் அமைக்கப்படும் இந்தப் புல்விரி கூரையிலும் பெறலாம். இதன்மூலம் வீட்டுக்குள் பசுமையான சூழலை உணரமுடியும். சில இடங்களில் இடைவெளிகளுடனும் இந்தப் புல்விரி கூரைகள் அமைக்கப்படுகின்றன.



வெளிச்சம் வெளியே இல்லை

இந்தப் புல்விரிகளை பிளாஸ்டிக் கூரைகளில் அமைக்கும்போது, பிளாஸ்டிக் தகடுகளின் மூலம் சூரிய ஒளியும் தாராளமாக நம் வீட்டுக்குள் புழங்கும். பகலிலேயே தேவையில்லாத மின்சார செலவு குறைக்கப்படும். சில அடுக்குமாடி குடியிருப்புகளில் திறந்துமூடும் வசதியுடன் பக்கவாட்டின் மூன்று சுவர்களையும்கூட இதைப் போன்ற புல்விரிகளாக அமைத்துக் கொள்கின்றனர். இதன்மூலம் தேவைப்படும்போது ஜன்னலைப் போன்று திறந்துவைத்துக் கொள்ளலாம். காற்றுக்கும் குறைவிருக்காது.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்