கட்டிடக் கலை தோன்றிய காலம் தொட்டு மரம் அதன் முக்கியமான கட்டுமானப் பொருளாகப் பயன்பட்டுவருகிறது. எல்லாக் கால நிலைக்கும் பொருந்தகூடிய பொருள் மரம். இப்போது வீட்டை அலங்கரிப்பதிலும் மரத்தின் பயன்பாடு பிரபலமாகியிருக்கிறது. நீண்ட காலம் உழைக்கூடிய மர அலங்காரமா? பாரம்பரியம் பேசும் மர அலங்காரமா? கவர்ச்சி தரும் மர அலங்காரமா? இல்லையென்றால் பட்ஜெட் மர அலங்காரமா? இவை எல்லாவற்றையும் மர அலங்காரத்தால் சாத்தியப்படுத்த முடியும். ஒரே வீட்டில் பலவிதமான மர வகைகளைப் பயன்படுத்தியும் அலங்காரம் செய்யமுடியும். கலவையான மர அலங்காரத்தை எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்.
மூன்று விதிகள்
ஓர் அறையில் மூன்று விதமான மர நிறங்களைப் பயன்படுத்துவது போதுமானது. இது அறைக்குத் தனித்தன்மையான தோற்றத்தைக் கொடுக்கும். தரைத் தளத்துக்கு வெளிர் நிற மரத்தையும், அலமாரிகளுக்கு அடர் நிற மரத்தையும், அறைக்கலன்களுக்கு மிதமான மர நிறத்தையும் கொடுக்கலாம். இது அறைக்கு சரியான அமைப்புகளுடன் இருக்கும் தோற்றத்தைக் கொடுக்கும்.
இந்த விதிகளை இப்படிப் பின்பற்ற பிடிக்கவில்லையென்றால் உங்கள் ரசனைக்கேற்ப மாற்றிக்கொள்ளவும் செய்யலாம். ஏனென்றால் மரத்தின் பல்வேறு நிறங்கள் எப்படிப் பயன்படுத்தினாலும் அறைக்கு அடர்த்தியான தோற்றத்தையே கொடுக்கலாம். எதிலும் ஒழுங்குமுறையைக் கையாள்பவர்கள் மேலே சொன்ன மூன்று விதிகளைப் பயன்படுத்தலாம்.
ஒரே நிறம், வேறு மரம்
பலவகையான மரப் பொருட்களை ஒரே நிறத்தில் வாங்கி அவற்றை அறையில் பயன்படுத்துவதும் மர அலங்காரத்தைப் பிரதிபலிக்கும் சிறந்த வழிதான். மரப் பொருட்களில் இருக்கும் சின்ன நிற வேறுபாடுகூட அறைக்குக் கூடுதல் அழகைக் கொடுக்கும்.
மரத்தின் அமைப்பு
மரத்தின் ‘டெக்ஸ்சரில்’ கவனம் செலுத்தினால் அறையின் தோற்றத்தில் இன்னும் புதுமையை உருவாக்கலாம். கடினமான மர மேற்பரப்பையும், மென்மையான மர மேற்பரப்பையும் ஒரே அறையில் வேறுபடுத்திக் காட்டும்படி அமைக்கலாம். உதாரணத்துக்கு, அறையில் மேற்கூரையைக் கடினமான மரத்திலும், தரைத்தளத்தை மென்மையான மரத்திலும் அமைக்கலாம்.
அதேமாதிரி, மரப் பலகைகளை வைத்து மேசை, பெஞ்சை உருவாக்கி, முனைகளை சீர்செய்யாமல் அப்படியே பயன்படுத்தலாம். இந்த மேசையும், பெஞ்சும் அறைக்கு ஓர் ஆழமான தோற்றத்தைக் கொடுக்கும். இதை மென்மையான தரைத்தளத்தில் பயன்படுத்தும்போது, கூடுதல் அழகுடன் அறை தெரியும்.
மரப் பலகைகள்
மரப் பலகைகளை பலவிதமான ‘பேட்டர்ன்களில்’ வடிவமைத்து, அதை அறையின் சுவர் அலங்காரத்துக்குப் பயன்படுத்தலாம். மரச் சுவர்கள் அறைக்குப் புதுபொலிவைக் கொடுக்கும். அத்துடன், இந்தப் பேட்டர்னுடன் தரைத்தளத்தையும், நாற்காலிகளையும் இணைக்கலாம். இந்த மரப் பலகைகளை அப்படியே பயன்படுத்தப் பிடிக்கவில்லையென்றால் வண்ணமடித்துப் பயன்படுத்தலாம்.
காட்டேஜ் ஸ்டைல்
ஒருவேளை, அறையில் எங்கு பார்த்தாலும் மர அலங்காரத்தின் தாக்கம் இருப்பதாக நீங்கள் நினைத்தால், அறையில் சிறு மாறுதல்களை செய்தால், அறையை ‘காட்டேஜ் ஸ்டைல்’ கொடுக்கலாம். உதாரணத்துக்கு, மரத் தரைத்தளத்தில் தரைவிரிப்பைப் பயன்படுத்தலாம். அந்தத் தரைவிரிப்புடன் பொருந்தும் வண்ணங்களில் அறைக்கலன்களை வடிவமைக்கலாம். இந்தக் கலவை அறைக்கு ‘காட்டேஜ்’ தோற்றத்தைக் கொடுக்கும்.
உண்மையான மரத்தைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, மரத்தின் தோற்றத்தைத் தரும் மார்பில்கள், லெதர், டெரக்கோட்டா போன்ற தரைத்தளங்களையும் அமைக்கலாம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago