வீட்டுக் கடன் வட்டி கணக்கிடுவது எப்படி?

By ப.முகைதீன் சேக் தாவூது

அரசுப் பணியாளர் வீட்டுக் கடன் மீதான முதல் தவணை பிடித்தம் என்பது அவருக்கு கடன் தொகை வழங்கிய மாதம் முதல் பதினெட்டாவது மாதம் அல்லது அவர் புது வீட்டில் குடியேறும் முதல் மாதம் தொடங்கும். இவற்றுள் எந்த மாதம் முன்பு வருமோ அந்த மாதம் தொடங்கும்.

வட்டி கணக்கீடு என்பது அவர் முதல் தவணை பெற்ற நாளில் தொடங்கும். அதிக பட்ச கடன் தவணை பதினைந்து ஆண்டு. அதிகபட்ச வட்டித் தவணை ஐந்தாண்டு. அதாவது 180 + 60 தவணைகள். பணிக் காலம் குறைவாக உள்ளோரும் குறுகிய காலத்தில் கடனைச் செலுத்தி வட்டியைக் குறைத்துக்கொள்ள விரும்புவோரும் தவணைக் காலத்தைச் சுருக்கிக் கொள்ளலாம்.

ஒரு பணியாளர் பத்து லட்சம் ரூபாய் கடன் பெறுவதாக வைத்துக் கொள்வோம். இவருக்கு முதல் தவணையாக ரூபாய் ஐந்து லட்சம் ஜனவரி 2014-ல் வழங்கப்படுகிறது. இரண்டாவது தவணை அக்டோபர் 2014-ல் வழங்கப்படுவதாகவும் கொள்வோம். கடன் பிடித்தம் ஜூலையில் தொடங்கும். மாதத் தவணை ரூபாய் 10 ஆயிரம்.

கடன் தொகை, தவணை எண் மற்றும் வட்டி வீதம் ஆகியவை மாறும்போது தக்க மாற்றங்களுடன் மேற்கண்ட முறையில் வட்டியைக் கணக்கிடலாம். அதிகபட்சமாக அறுபது தவணைகளில் வட்டி பிடித்தம் செய்யப்படும். பணிக்காலம் குறைவாக உள்ளவர்களுக்கு வட்டியை அவர்களது பணிக்கொடையில் (Death cum Retirement Gratuity) பிடித்தவும் செய்யவும் கூடும். வட்டியைச் செலுத்திய பின் வீட்டுப் பத்திரம் முதலானவற்றைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். கடன் தொகைப் பிடித்தம் முடியும்வரை, கடன் மற்றும் வட்டித் தொகைக்குக் காப்புறுதி செய்து பிரீமியத் தொகை செலுத்தி வர வேண்டும்.

- கட்டுரையாளர், ஓய்வுபெற்ற அரசு அதிகாரி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்