குழாய்களின் வித்தியாசமான வடிவமைப்புகளைப் பார்த்து, குழாய்களில் பல வகைகள் இருக்கின்றன என்று நாம் நினைத்துக்கொண்டிருப்போம். ஆனால், குழாய்கள் இயங்குமுறையைப் பொருத்தவரை, அவற்றை நான்கு வகையாக மட்டுமே பிரிக்கமுடியும். பொதுவாக, வீடுகளில் ‘கம்பரஷன் வாஷர் குழாய், ‘பால்’குழாய், ‘டிஸ்க்’ குழாய், ‘கார்ட்ரிட்ஜ்’ குழாய் என நான்கு வகை குழாய்களே பயன்படுத்தப்படுகின்றன. உங்கள் வீட்டில் இவற்றில் எந்த மாதிரியான இயங்குமுறை கொண்ட குழாய் பொருத்தப்பட்டிருக்கிறது என்று தெரிந்துகொண்டால், நீர் கசிவைச் சரிசெய்வதற்கு உதவிகரமாக இருக்கும்.
கம்பரஷன் வாஷர் குழாய்
இந்தக் குழாய்தான் இருப்பதிலேயே பழமையான வகை. அத்துடன் இதுதான் வீடுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த வகை இயங்குமுறை கொண்ட குழாய்களில் நீர் கசிவு போன்ற பிரச்சினைகள் அதிகமாக ஏற்படுகின்றன. வாஷரில் இருக்கும் திருகை மேலும், கீழும் திருப்பி இது தண்ணீர் ஓட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது. இந்த வகையில், வெந்நீர், குளிர்ந்த நீர் தேவைக்கு தனித்தனி குழாய்களே இருக்கும். இந்த குழாயில் பிரச்சினை ஏற்படும்போது வாஷர், ஓ-ரிங் போன்றவற்றை மாற்றுவதன் மூலம் அதைச் சரிசெய்ய முடியும்.
‘பால்’ குழாய்
ஒற்றை நெம்புகோல் கைப்பிடி, உருண்டையான மூடியை வைத்து இந்த பால் குழாயை அடையாளம் காணமுடியும். வெந்நீர், குளிர்ந்த நீர் என இரண்டையும் இந்தக் குழாயின் ஒரே கைப்பிடியே கட்டுப்படுத்தும். குழாயின் உள்ளேயிருக்கும் ‘பால்’ சுழன்று இதைச் சாத்தியப்படுத்துகிறது. இந்தக் குழாயில் ‘பால்’, ஓ-ரிங்க் போன்றவற்றை மாற்றும் வசதி இருக்கிறது.
‘டிஸ்க்’ குழாய்
இந்த வகைக் குழாய்களை அதன் ‘சிலிண்டர்’ போன்ற தோற்றத்தை வைத்து அடையாளம் காணலாம். இரண்டு ‘சிராமிக் டிஸ்க்’களில் இருக்கும் ஓட்டையின் வழியே இது தண்ணீரை வெளியே அனுப்புகிறது. இந்த வகை குழாய்கள் நீண்ட நாட்களுக்கு உழைக்கும். ஆனால், இதன் ‘டிஸ்க்’குகள் பழுதடைந்துவிட்டால், குழாயை முழுக்க மாற்ற வேண்டியிருக்கும். அதே மாதிரி, தண்ணீரில் இருக்கும் தூசிகள் அடைத்துக்கொண்டால்கூட இந்த வகைக் குழாய் சரியாகச் செயல்படாது. அதனால், டிஸ்க்களை மாற்றுவதற்கு முன்னால், ஒருமுறை அதைச் சுத்தப்படுத்திப் பயன்படுத்திப் பார்க்கலாம்.
‘கார்ட்ரிட்ஜ்’ குழாய்
இந்த ‘கார்ட்ரிட்ஜ்’ குழாய், மற்ற மூன்று குழாய்களின் எல்லா அம்சங்களை ஒன்றாக வைத்திருக்கும். அதனால், இந்த வகைக் குழாயைப் பிரித்துப் பார்த்துதான் அது எந்த வகையைச் சேர்ந்தது என்பதைத் தெரிந்துகொள்ளமுடியும். இந்தக் குழாய்க்குள் இருக்கும் பொதியுறைதான் தண்ணீர் ஓட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது. இந்த வகைக் குழாய்களில் ஒரு கைப்பிடி, இரண்டு கைப்பிடி என எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஒரு ‘கார்ட்ரிட்ஜ்’ குழாயில் நீர் கசிவு ஏற்படுகிறது என்றால் அதற்குக் காரணம் அதன் பொதுயுறை பாதிப்பாகத்தான் இருக்கும். இதன் வாஷர், ஸ்பிரிங் போன்றவற்றையும் மாற்றிக்கொள்ளலாம்.
ஒருவேளை, குழாயை மாற்றியும் நீர் கசிவு நிற்கவில்லையென்றால், பிரச்சினை தண்ணீர் பைப்களில் இருக்கலாம். இதை ‘பிளம்பரால்’தான் சரிசெய்ய முடியும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago