பல்லுயிர்ச் சூழலுக்குக் கூரைகளில் போடப்படும் தோட்டங்கள் உதவிபுரிகின்றன. அத்துடன் மழைநீர் சேகரிப்புக்கும் கட்டிடத்தின் வெப்பத்தைக் குறைபதிலும் உதவுகின்றன. கடந்த 30 ஆண்டுகளாக, வளம் குன்றாத நகர்ப்புற வளர்ச்சிக்கு அவசியமான அங்கமாகப் பசுமைக் கூரைகள் என்று சொல்லப்படும் கூரைத் தோட்டங்கள் கருதப்படுகின்றன.
சுற்றுப்புறச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்துவரும் நிலையில் பொருளாதார ரீதியாகவும், சூழலியல் ரீதியாகவும் பசுமைக் கூரைகள் பிரபலமாகவும் ஆகிவருகின்றன. சமீபகாலமாக, உலகமெங்குமுள்ள பெருநகரங்களில் பெரும்பாலான கட்டிடங்களில் அமைக்கப்படும் பசுமைக் கூரைகளும், கூரைத்தோட்டங்களும் நகர்ப்புற சுற்றுச்சூழலுக்கும் குடியிருப்போருக்கும் பயனளிக்கும் வகையில் அமைக்கப்பட்டு வருகின்றன.
நிலத்தடி நீரை அதிகரிக்கும் தோட்டம்
சென்னை, பெங்களூரு, மும்பை, ஐதராபாத் போன்ற நகரங்களில் பசுமைக் கட்டிடங்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. பசுமைக் கட்டிடங்களுக்கான விதிமுறைகளையும் மாநில அரசுகள் வகுத்துள்ளன. மழைநீர் சேமிப்பு அமைப்பு, தாவரங்கள் வளர்த்தல் போன்றவற்றை இந்த விதிமுறைகளின்படி கட்டாயமாக்கியுள்ளன. ஆற்றலைத் திறனுடன் கையாள்வது தொடர்பான கவனம் அனைவரிடமும் அதிகரித்துள்ளதால் பசுமைக் கட்டிடங்கள் கட்டப்படுவதும் அதிகரித்துள்ளது.
அவை கட்டிடங்களின் கூரைகளைக் கட்டுவதிலும் பிரதிபலிக்கிறது. ஒரு கட்டிடம் கட்டுவதில் கூரைக்கு ஆகும் செலவு அதிகமென்பதால், ஆற்றலையும் வளங்களையும் திறனுடன் பயன்படுத்துவதற்கு ஏற்ப வளம்குன்றா தொழில்நுட்பங்களைக் கூரைக்கட்டுமான நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன.
பசுமைக்கூரைகள் அல்லது கூரைத்தோட்டங்கள், பார்வைக்கு அழகாய் இருப்பதோடு, திறன்வாய்ந்த மழைநீர் சேமிப்புக்கும் வழிவகுப்பதாக உள்ளது. நிலத்தடி நீரின் அளவையும் அதிகரிக்கிறது.
தவிர்க்க முடியாத மாடித் தோட்டங்கள்
அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு வாங்குபவர்களும் கூரைகளில் தோட்டங்கள் உள்ள குடியிருப்பு களின் மீது ஆர்வம்காட்டத் தொடங்கியுள்ளனர். பெரிய பரப்பளவுள்ள மொட்டைமாடிக் கூரைகளைத் தோட்டமாக்கினால், அதில் ஒரு பகுதியில் கூரை அமைத்துக் குடியிருப்பவர்கள் அமர்ந்து இளைப் பாறலாம். மாலைகளில் விருந்துகள் மற்றும் நண்பர்கள் கூடுகைகளுக்குக் கூரைத்தோட்டங்கள் கூடுதல் கவர்ச்சியைத் தருபவை. தொங்கும் தோட்டம் போல கொடித் தாவரங்கள், சொட்டுநீர்த் தோட்டங்கள் மற்றும் சற்றே சரிந்த கூரை மேற்பரப்புகள் இருந்தால் அலாதியான பசுமை அனுபவத்தைக் கொடுக்கும்.

தற்போது அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடுகளை வாங்க விரும்புபவர்கள் வசதியான வீட்டோடு அருமையான கூரைத் தோட்டமும் இருக்கவேண்டுமென்று விரும்புகிறார்கள். விருந்தினர்களை உபசரித்து இளைப்பாறவும், நல்ல காற்றை சுவாசிக்கவும், உடற்பயிற்சி செய்யவும் இத்தோட்டங்கள் மனதுக்கு உற்சாகம் அளிப்பவையாக உள்ளன. பெருநகரங்களில் 75 லட்சம் முதல் 2 கோடி ரூபாய் விலையில் கிடைக்கும் அனைத்து அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் தவிர்க்க முடியாத அம்சமாக கூரைத்தோட்டங்கள் மாறியுள்ளன.
மேம்படவிருக்கும் தொழில்நுட்பம்
கூரைத்தோட்டங்களிலான கூரைகளுக்கு எந்தப் பாதிப்பும் இருப்பதில்லை என்று கட்டுமான நிபுணர்கள் உறுதி கூறுகிறார்கள். 50 வருடங்களுக்கு மேல் கூரை உறுதியாக இருக்கும் தோட்டங்கள் உண்டு. இந்தியா போன்ற உஷ்ணநாடுகளில், சரியாக நீர் ஊற்றிப் பராமரிக்கப்படும் பசுமைக் கூரைகளால் மின்சாரச் செலவு குறைகிறது.
செடிகள் மற்றும் புற்களை வளர்க்கும் கூரைத்தோட்டத்துக்கு, கூரை மேல்தளத்தில் இரண்டு அங்குலம் அளவுக்கு மணலைப் பரத்த வேண்டும். அதன் மேல் நீரை உறிஞ்சக்கூடிய தரை ஓடுகள் இருக்க வேண்டும். அதன்மேல் புல் பற்றை அமைத்தல் வேண்டும்.
பசுமைக் கூரைகள் எல்லா வற்றையும் தொடர்ந்து பராமரித்து வருதல் அவசியம். முறையாக நீர் ஊற்றுவதும், களையெடுப்பதும், வெட்டிவிடுதலும், உரமிடுதலும், கரையான்களைக் கண்காணிப்பதும் அவசியம். தொடர்ந்து நீர் ஊற்றிப் பராமரிப்பது கட்டிடத்தைக் குளிர்பதத்தில் வைத்திருப்பதற்கும் உதவும். நீர் வளம் குன்றாமல் இருக்க கழிவுநீரைச் சுத்திகரித்தோ, மழைநீரைச் சேமித்தோ பயன்படுத்துவது அவசியம். இதன்மூலம் நன்னீர் தட்டுப்பாடின்றி குடியிருப்புவாசிகளுக்குக் கிடைக்கும்.

தற்போதைக்குப் பசுமைக் கூரைகளை அமைப்பதும் பராமரிப்பதும் சற்று செலவுபிடிப்பதாகவே இருப்பினும், எதிர்காலத்தில் குறைவான செலவிலேயே பசுமைக்கூரைகளை அமைக்கும் தொழில்நுட்பங்கள் மேம்படும் என்பதில் சந்தேகமே இல்லை
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago