வீட்டைப் பார்த்துப் பார்த்துக் கட்டுபவர்கள்கூட ஒரு விஷயத்தில் கோட்டை விட்டுவிடுவார்கள். அது சுகாதாரத்துக்குப் பெரிதும் துணைபோகும் கழிவுநீர் வெளியேற்ற வசதிகளைத் தகுந்த முறையில் வீட்டுக்குள் செய்வதற்கு அதிகம் சிரத்தை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதுதான்.
தகுந்த பாதுகாப்புடன் அக்கம்பக்கத்து வீடுகளில் இருப்பவர்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளையும் ஏற்படுத்தாமல் ஒரு வீட்டின் கழிவுநீர் வெளியேற்றப்பட வேண்டியது, நாம் இருக்கும் இடத்துக்கும் சுற்றுப்புறத்துக்கும் ஆரோக்கியமான நடைமுறை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இதற்கு சில நடைமுறைகளை வீட்டுக்குள் மறுபேச்சுக்கு இடமின்றி ஏற்படுத்த வேண்டியது அவசியம்.
1. வீட்டிலிருந்து கழிவுநீர் வெளியேறுவதற்கான முறையான சாதனங்களை மாநகராட்சியின் உதவியோடு பொருத்தி, அவற்றைத் தகுந்த முறையில் சாலையில் செல்லும் பிரதான கழிவுநீர் குழாய்களில் இணைப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்தக் குழாய்களில் கசிவு ஏதும் ஏற்படுகிறதா என்பதையும் அவ்வப்போது சரிபார்க்க வேண்டும். இதன்மூலம் வீட்டில் துர்நாற்றமடிக்கும் வாயுவைத் தவிர்த்துவிடலாம்.
2. வீட்டில் அமைக்கப்படும் கழிவுநீர் வெளியேற்றக் குழாய்களின் இணைப்புகள் சில சமயங்களில் ஒன்றோடொன்று சரியாகப் பொருந்தியிருக்காது. இதனால் குழாய்களில் மெலிதான கசிவும், சில நேரங்களில் துர்நாற்றமும் வெளியேறும். இதைத் தகுந்த இடைவெளிகளில் முறையான பராமரிப்பின் மூலமே தவிர்க்க முடியும்.
3. கழிவுநீர்க் குழாய்கள் ஒன்றோடொன்று சந்திக்கும் இடங்களில் செங்குத்தாக அமைக்காமல், குறைந்தபட்சம் 45 டிகிரி கோணத்தில் அமைத்தால் நல்ல பலன் இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.
4. ஒன்றுக்கு மேற்பட்ட கழிவுநீர் குழாய்கள் ஒரு இடத்தில் சந்தித்து, பின் வேறு பகுதிக்குச் செல்லும் சூழ்நிலையில், இந்தப் பகுதியில் வால்வு பொருத்திய சேம்பர் அமைப்பது நல்ல பலனைத் தரும்.
5. எந்தக் காரணத்தைக் கொண்டும், வீட்டின் பிரதானப் பகுதிகளின் வழியாகக் கழிவுநீர்க் குழாய்களைக் கொண்டு செல்லக் கூடாது. அதோடு அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியாக இருக்கும்பட்சத்தில், ஒவ்வொரு தொகுப்பு வீடுகளுக்கும் தனித்தனியாக ஒரு கழிவுநீர்த் தேக்கத்தை வீட்டின் வெளிப்பகுதியில் உண்டாக்கி, அதிலிருந்து சாலையின் பிரதானக் குழாயில் கலப்பதற்கான ஏற்பாட்டைச் செய்ய வேண்டும்.
மழை நீர் சேகரிப்பிலும் கவனம் தேவை
கழிவுநீர் வெளியேற்றுவதற்கு முறையான வழிவகை ஏற்படுத்துவது போலவே, வீட்டுக்குள் விழும் மழை நீரையும் முறையாகச் சேமிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
இரண்டு வழிகளில் மழை நீரைச் சேகரிக்கலாம். தரை வழி சேமிப்பின் மூலம் பெரிய குடியிருப்புகளில் விழும் மழை நீரை மொத்தமாக சேமிப்புப் பகுதிக்குக் கொண்டுவருவது ஒருவழி. இல்லாவிட்டால், வீட்டின் மேற்பகுதியில் விழும் மழைநீரை குழாய்கள் மூலம் சேமிப்புப் பகுதிக்குக் கொண்டுசெல்வது இன்னொரு வழி. தனி வீடுகள், சிறிய அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு ஏற்ற மழைநீர் சேகரிக்கும் வழி இது.
மேற்கூரையில், அதாவது மொட்டைமாடியில் விழும் மழை நீர் விழும் தொட்டியின் அளவு 2 மீட்டர் அகலமும் 4 மீட்டர் ஆழமும் இருக்க வேண்டும். இந்தத் தொட்டியை ரீசார்ஜ் குழிகள் என்பர். பெரிய கற்கள், ஜல்லிகள், மணல் போட வேண்டும். முதலில் கற்கள் அதன் மேல் ஜல்லி அதற்கு மேல் மணலும் போட வேண்டும். சில இடங்களில் கூழாங்கற்களும் போடுவார்கள்.
கட்டிடத்தின் கூரையில் இருந்து விழும் மழை நீரை வடிகட்டி வழியாக குழிக்குச் செல்லும்படி அமைத்தால் கழிவுகள், இலைகள், தழைகள் குழிக்குள் செல்லாமல் தடுக்க முடியும். சிறிய மண் துகள்கள் குழிக்குள் செல்லாமல் தடுப்பு அமைப்பு ஒன்றையும் அமைக்க முடியும். குழியின் மேல் உள்ள மணல் பரப்பை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago