கனி
வீட்டைப் புத்தம்புதிதாக மாற்ற நினைக்கும்போது, அதற்கான வண்ணத்தைத் தேர்ந்தெடுப்பது கடினமான விஷயங்களில் ஒன்று. அதிலும் குறிப்பாக, சுவரின் வண்ணம் மிகவும் முக்கியம். இந்த வண்ணம்தான் வீட்டின் வடிவமைப்பு உள்ளிட்ட எல்லாவற்றையும் தீர்மானிக்கும். வீட்டின் சுவர்களுக்கு எந்த வண்ணத்தைப் பயன்படுத்தியிருக்கிறோம் என்பதைப் பொறுத்துதான், மற்ற வடிவமைப்பு அம்சங்களை நம்மால் தீர்மானிக்க முடியும்.
வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்திருக்க வேண்டுமென்பதுதான் அனைவரின் விருப்பம். மகிழ்ச்சியை அள்ளித்தரும் வண்ணங்களைச் சுவர்களுக்குத் தேர்ந்தெடுப்பது வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்திருக்க உதவும். மகிழ்ச்சியை அளிக்கும் வண்ணங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான சில ஆலோசனைகள்…
உற்சாகத்தை அளிக்கக்கூடிய வண்ணங்களில் மஞ்சள் நிறத்துக்கு எப்போதும் இடம் உண்டு. சூரியனின் நிறமான இது, கோடைக்கால அலங்காரத்துக்கு ஏற்றது. வீட்டில் எந்த அறைக்கு வேண்டுமானாலும் மஞ்சளைப் பயன்படுத்தலாம். முழுக்க முழுக்க மஞ்சள் நிறத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று நினைப்பவர்கள், வரவேற்பறையின் முதன்மைச் சுவருக்கு மட்டும் மஞ்சளைப் பயன்படுத்தலாம்.
லாவெண்டர்
லாவெண்டர் வண்ணம் பெரும்பாலும் படுக்கையறைக்குப் பொருத்தமானதாக இருக்கும். அமைதி, மகிழ்ச்சி என இரண்டையும் வழங்குவதில் இந்த வண்ணம் சிறந்தது. நவீனத்தை விரும்புபவர்கள் இந்த வண்ணத்தை வீட்டுக்குப் பயன்படுத்தலாம். சமநிலையைப் பேணுவதிலும் இந்த வண்ணம் பெரும் பங்காற்றுகிறது.
இளஞ்சிவப்பு
மகிழ்ச்சியை வழங்குவதில் இளஞ்சிவப்பு மற்றொரு முக்கியமான வண்ணம். இந்த வண்ணத்துக்கு ஆற்றல் அதிகம் என்பதால், முழுக்க முழுக்க இந்த வண்ணத்தைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, வீட்டில் ஏதாவது ஒரு பகுதிக்கு இளஞ்சிவப்பைப் பயன்படுத்தலாம். இளஞ்சிவப்பு, வெள்ளை ஆகிய இரண்டு வண்ணங்களையும் இணைத்து பயன்படுத்தலாம்.
பசுநீலம்
புத்துணர்ச்சி அளிக்கும் வண்ணங்களில் பசுநீலத்துக்கு (Turquoise) எப்போதும் இடமுண்டு. இந்த வண்ணத்தை வெள்ளையுடன் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கும். அத்துடன், இந்த வண்ணத்தை வீட்டில் எந்த அறைக்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். பேஸ்டல் வண்ணங்களுடன் பயன்படுத்துவதற்கு இந்த வண்ணம் ஏற்றது.
மென் பச்சை
வலிமையான வண்ணங்களில் ஒன்று பச்சை. அதனால், இதை வீட்டின் வடிவமைப்புக்குப் பயன்படுத்துவது சற்று கடினமான விஷயம். ஆனால், மென் பச்சை நிறத்தைப் படுக்கையறை, மற்றும் பிற இடங்களுக்கும் பயன்படுத்தலாம். சுவர்களுக்கு மென் பச்சை நிறம், கூரைக்கு வெள்ளை நிறம் எனப் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கும். இந்த மென் பச்சை நிறத்தை பேஸ்டல் வண்ணங்களுடன் இணைத்து பயன்படுத்தலாம்.
வெள்ளை
சார்பற்ற நிறம் என்றாலும், எளிமையான வண்ணங்களில் வெள்ளைக்கு நிகரில்லை. வீட்டில் வெள்ளை நிறத்தைப் பயன்படுத்துவது எப்போதும் வெளிச்சம் இருப்பதை உறுதிப்படுத்தும். அத்துடன், எந்த வண்ணத்துடன் இணைத்தும் வெள்ளை நிறத்தைப் பயன்படுத்தலாம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago