ஷாகா முகமது ஹதித், கட்டிடக் கலைத் துறையின் மிக உயரிய விருதான பிரிட்ஜ்கெர் கட்டிடக்கலை விருதைப் (Pritzker Architecture Prize) பெற்ற முதல் பெண். இவர் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் 1950-ம் ஆண்டு பிறந்தவர். அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் கல்வி பயின்றவர். சிறிது காலம் கட்டிடத் துறையில் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
பிறகு கட்டிடத் துறையில் பணியாற்றினார். தற்போது லண்டனில் ஷாகா ஹதித் கட்டிடக் கலை என்னும் நிறுவனத்தை நடத்திவருகிறார். இவரது தனித்துவமான கட்டிடக் கலையால் இவர் உலகின் புகழ்பெற்ற பெண்களில் ஒருவர் எனக் கொண்டாடப்படுகிறார்.
ஐக்கிய அரபு நாடு, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரியா, ஜெர்மனி, இத்தாலி, ஸ்காட்லாந்து, சீனா, தென் கொரியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றிலும் இவர் எழுப்பியுள்ள கட்டிடங்கள் இவரது கட்டிடக் கலையைப் பறைசாற்றி வருகின்றன.
மரபை முற்றாக நிராகரிக்கும் இவரது கட்டிடங்கள் 20-ம் நூற்றாண்டின் நவீனத்துவத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளன.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago