வீட்டின் அறைக்கலன்களில் பிரதானமானதாகச் சாப்பாட்டு மேசையைச் சொல்லலாம். ஆனால், இந்தச் சாப்பாட்டு மேசையை வாங்குவதற்குப் பெரும்பாலும் நாம் மெனக்கெடுவதில்லை. சாப்பாட்டு மேசையை நாம் நினைக்கும்போதெல்லாம் மாற்ற முடியாது. பழைய வீட்டில் பொருந்திய சாப்பாட்டு மேசை, உங்கள் புதிய வீட்டில் பொருந்தாமல் போவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அதனால், சாப்பாட்டு மேசையை வாங்கும்போது உங்கள் ரசனை, வீட்டின் இடவசதி போன்றவற்றை மனதில் வைத்துக்கொண்டு தேர்ந்தெடுங்கள்.
செவ்வகத்தின் அழகு
செவ்வகச் சாப்பாட்டு மேசை வீட்டுக்குப் பாரம்பரியமான தோற்றத்தைக் கொடுக்கும். இப்போது நவீன வடிவமைப்பிலும் இந்தச் செவ்வகச் சாப்பாட்டு மேசைகள் இருக்கின்றன. இந்தச் செவ்வகச் சாப்பாட்டு மேசையை விரும்புபவர்கள் வீட்டின் இடவசதியை உறுதிசெய்து கொள்ள வேண்டும். தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, பிள்ளைகள் என குடும்ப உறுப்பினர்கள் உள்ள குடும்பத்துக்கு இந்தச் சாப்பாட்டு மேசை ஏற்றது.
இந்தச் சாப்பாட்டு மேசையை ஜன்னல் வெளிச்சம் படும் இடத்தில் அமைப்பது நல்லது. அப்படிச் செய்தால், சாப்பிடுவதற்கு மட்டுமல்லாமல் படிப்பதற்கு, லேப்டாப்பில் வேலை செய்வதற்கும் இந்த மேசையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அறை சிறிதாக இருந்தால், குறைந்த நீளத்தில் இருக்கும் சாப்பாட்டு மேசையைத் தேர்ந்தெடுக்கலாம். சாப்பாட்டு மேசையைச் சுற்றி மூன்று அடி இடைவெளி இருக்க வேண்டும். இப்படிச் செய்தால், அறையின் தோற்றம் விசாலமானதாகத் தெரியும்.
இந்தச் செவ்வகச் சாப்பாட்டு மேசைகளுக்கு நாற்காலிகளைவிட ‘பெஞ்ச்-ஸ்டைல்’ இருக்கைகளைப் பயன்படுத்தலாம்.
முட்டை வடிவத்தின் நவீனம்
முட்டை வடிவ சாப்பாட்டு மேசையிருந்தால் எதிர்பாராமல் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை எளிமையாகச் சமாளிக்கலாம். இந்த முட்டைவடிவ மேசையில் கூர்மையான முனைகள் இல்லாததால் உங்கள் வசதிக்கேற்ப அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த முட்டை வடிவ சாப்பாட்டு மேசைக்கு முக்காலிகள் (Stools) ஏற்றவை. முக்காலிகள் இப்போது பல நவீன வடிவமைப்புகளில் கிடைக்கின்றன. இவற்றைச் சாப்பிடும்போது மட்டும் பயன்படுத்திவிட்டு மற்ற நேரங்களில் வேறு அறையில் பயன்படுத்திக்கொள்ளலாம். சாப்பாட்டு மேசையின் நிறத்திலேயே இந்த முக்காலிகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
வட்டத்தின் நேசம்
உறவினர்களிடமும், நண்பர்களிடமும் நீண்ட நேரம் உரையாடுபவர்கள் வட்டச் சாப்பாட்டு மேசையைத் தேர்ந்தெடுக்கலாம். வட்டச் சாப்பாட்டு மேசையில் அமர்ந்து சாப்பிடும்போது, எல்லோரும் எல்லோரையும் பார்க்க முடியும். சாப்பாடு பதார்த்தங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்வதையும் இந்த மேசை எளிமையாக்குகிறது. இந்த வட்டச் சாப்பாட்டு மேசையை மரத்தில் தேர்ந்தெடுப்பதைவிடக் கண்ணாடியில் தேர்ந்தெடுப்பது நல்லது. கண்ணாடியிலான வட்ட மேசை குறைவான இடத்தையே எடுத்துக்கொள்ளும். அத்துடன், நவீனம், விசாலம் என இரு விதமான தோற்றத்தையும் இது அறைக்குக் கொடுக்கும்.
சதுரத்தின் பிரம்மாண்டம்
அறைக்குப் பிரம்மாண்டமான தோற்றத்தைக் கொடுக்க நினைப்பவர்கள் சதுர வடிவச் சாப்பாட்டு மேசையைத் தேர்ந்தெடுக்கலாம். வளைவான வடிவத்தில் இருக்கும் நாற்காலிகள் இந்த மேசைக்குப் பொருத்தமானதாக இருக்கும். ஆனால், இந்தச் சதுரச் சாப்பாட்டு மேசை அறையில் பெரும்பாலான இடத்தை ஆக்கிரமித்துக்கொள்ளும். அதற்கேற்றவாறு மேசையை அமைப்பது நல்லது. இந்த மேசையின் மீது வட்ட வடிவக் கிண்ணத்தை வைக்கலாம். இந்தக் கிண்ணத்தைப் பழங்கள், பூக்கள் கொண்டு அலங்கரிக்கலாம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago