வசதிகள் நிறைந்த பல்லாவரம்

By ஜெய்

சென்னையில் ரியல் எஸ்டேட் பகுதிகள் என்றதும் சட்டென நினைவுக்கு வரும் பகுதி ராஜீவ் காந்தி சாலை எனப் பெயர்பெற்ற ஓ.எம்.ஆர். சாலைதான். ஆனால் இப்போது ஓ.எம்.ஆர். சாலையை அடுத்து வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள மற்றொரு பகுதி, பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் ரிங் ரோடு. இது வளர்ச்சி மிக்க பகுதி மட்டுமல்ல; வசதிகள் நிறைந்த பகுதியும்தான். அதனால் இந்தப் பகுதியில் பல கட்டுமான நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு தங்கள் புதிய வீட்டுத் திட்டங்களைத் தொடங்கிவருகின்றன.

தென்சென்னையின் வளம் மிக்க இரு சாலைகளை இந்தச் சாலை செங்குத்து வசமாக இணைக்கிறது. ஜி.எஸ்.டி. சாலையிலுள்ள பல்லாவரம் மேம்பாலத்தில் இருந்து தொடங்கி இந்த ரிங் ரோடு, ஓ.எம்.ஆர். சாலை துரைப்பாக்கம் வரை நீண்டுள்ளது. இதன் தூரம் கிட்டத்தட்ட 10 கிலோ மீட்டர் தூரம். ஜமீன் பல்லாவரம், தர்கா ரோடு, நெமிலிச்சேரி, நன்மங்கலம், மேடவாக்கம் மெயின் ரோடு, கீழ்க்கட்டளை, கோவிலம்பாக்கம், எஸ்.கொளத்தூர் ரோடு, வேளச்சேரி மெயின் ரோடு, பள்ளிக்கரணை என நீளும் சென்னையின் ஐ.டி. தொழில் மையமான ஓ.எம்.ஆர். சாலையில் முடிகிறது.

இந்தச் சாலைக்கு இடையில் வேளச்சேரி - கிழக்குத் தாம்பரம் சாலையும் வருகிறது. இந்தச் சாலையிலும் பல முக்கியமான நிறுவனங்கள் உள்ளன. ஓ.எம்.ஆர். சாலை, வேளச்சேரி-கிழக்குத் தாம்பரம் சாலை, ஜி.எஸ்.டி சாலை ஆகிய சாலைகளைப் பயன்படுத்துவோருக்கு பல்லாவரம் ரேடியல் ரிங் சாலை வாழ்வதற்கான சிறந்த தேர்வாக இருக்கும்.

அடிப்படை வசதிகள்

இந்தப் பகுதிகளில் மக்கள் குடியேற்றத்துக்குத் தகுந்த அடிப்படை வசதிகளும் இருக்கின்றன. பள்ளிக் கல்வி வசதி, மேற்கல்வி வசதி, மருத்துவ வசதி எல்லாம் இந்தப் பகுதியில் வளர்ச்சி பெற்றுவருகிறது. இந்தப் பகுதியில் பள்ளிகளைப் பொறுத்தவரை, வேல்ஸ் வித்யாஷ்ரம் பள்ளி, ஸ்டெல்லா மாரீஸ் பள்ளி, நவபாரத் மெட்ரிகுலேஷன் பள்ளி, தாயா ஜோதி மெட்ரிகுலேஷன் பள்ளி, ரவீந்திரா பாரதி குளோபல் பள்ளி, த சைல்ட் அமெரிக்க மாண்டிசோரி பள்ளி, டி.எஸ்.ஆர். பப்ளிக் பள்ளி, கைட் பள்ளி, ஹோலி ஃபேமிலி காண்வெண்ட், வேளாங்கன்னி வெள்ளி விழா பள்ளி உள்ளிட்ட பல தனியார் பள்ளிகளும் அரசுப் பள்ளிக்கூடங்களும் உள்ளன.

கல்லூரிகளைப் பொறுத்தவரை மதி தேவ்குன்வர் நானாலால் பட் வைஷ்ணவ மகளிர் கல்லூரி, வேல்ஸ் பல்கலைக்கழகம், ஜெருசலம் பொறியியல் கல்லூரி,  பாலாஜி பிசியோதெரபி கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரிகள் உள்ளன. மருத்துவ வசதிகளைப் பொறுத்தவரை காமாட்சி மருத்துவமனை, சங்கரா சிறுசீரக மருத்துவமனை, அழகப்பா மருத்துவமனை, ரேடியல் ஆர்த்தோ கிளினிக் உள்ளிட்ட பல மருத்துவமனைகள் உள்ளன.

வளர்ந்துவரும் வீட்டுத் திட்டங்கள்

வணிகத் தலங்களும், கடைகளும் இப்போது உருவாகி வருகின்றன. வேல்ஸ் பல்கலைக் கழகத்திற்குப் பின்னால் தர்கா ரோடு பகுதிகளில் புதிய குடியிருப்புகள் உருவாகிவருகின்றன. வீட்டுக் குடியிருப்புகள் இப்போது அந்தப் பகுதியில் முழு வீச்சில் உருவாகிவருகின்றன. நாராயணபுரம் ஏரியின் பின்புறம் எஸ்.கொளத்தூர் செல்லும் சாலையில் அழகழகான புதுக்குடியிருப்புகள் உருவாகி வருகின்றன. உதாரணமாக மேக்வொர்த் நகரில் அந்த மாதிரியான குடியிருப்புகள் பலவற்றைப் பார்க்க முடிகிறது.

கீழ்க்கட்டளைப் பகுதியில், அதாவது ரேடியல் ரோடு மேடவாக்கம் சாலைப் பகுதியில் சந்திக்கும் இடத்தில் கடைகளைப் பார்க்க முடிகிறது. மேடவாக்கம் சாலையின் இருபக்கங்களிலும் புதிய நூற்றுக்கணக்கான ப்ளாட்டுகள் கட்டி முடிக்கப்பட்டு விற்பனைக்குத் தயாராக உள்ளன. ப்ளாட்டுகள் விற்பனை தொடர்பான விளம்பரங்களை ரிங் ரோடின் தொடக்கத்திலிருந்தே பார்க்க முடிகிறது. தொடர்ந்து வேளச்சேரி மெயின் ரோடு காமாட்சி மருத்துவமனை சந்திப்பு வரை இரு பக்கங்களிலும் கட்டிடங்கள் உயர்ந்து நிற்கின்றன. அடுத்துப் பசுமையான பள்ளிக்கரணை சதுப்பு நிலக்காடு இரு பக்ககளிலும் விரிந்து கிடக்கிறது. அதற்கடுத்துச் சில கிலோ மீட்டர் தூரத்தில் ரேடியல் ரிங் ரோடு துரைப்பாக்கத்தில் சென்று முடிகிறது.

RECS நிறுவனம் சென்னையின் ரியல் எஸ்டேட்டுக்கு எதிர்காலம் உள்ள பகுதிகள் எனப் பத்து இடங்களைப் பட்டியலிடுகிறது. அந்த தந்தப் பகுதிகளில் கிடைக்கும் அடிப்படை வசதிகளை வைத்து இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் அறிக்கை சொல்கிறது. அதாவது பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனை, கடைகள், கழிவுநீர் வெளியேறும் வசதி, குடிநீர் வசதி ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாகச் சொல்கிறது அந்நிறுவனம்.

அதன்படி சென்னையின் மற்ற பகுதிகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்த ரிங் ரோடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பகுதியில் எல்லா வசதிகளும் கொண்ட மல்டி ஸ்டோரேஜ் கட்டிடங்கள் இந்தப் பகுதியில் கட்டப்பட்டு வருகின்றன. ஐ.டி. மையமான ஓ.எம்.ஆர். சாலையையும் தொழில் தடமான ஜி.எஸ்.டி. சாலையையும் இணைப்பதால் இந்த இரு சாலைகளின் அபாரமான வளர்ச்சி, இந்தப் பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் ரிங் ரோடு சாலையில் பெறும் மாற்றத்தை விளைவிக்கும் என ரியல் எஸ்டேட் துறை நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்