பட்டா, சிட்டா அடங்கல்

By செய்திப்பிரிவு

தீபன்

மனை தொடர்பான ஆவணங்களில் பட்டா, சிட்டா, அடங்கல் ஆகிய சொற்களை அடிக்கடிக் கேள்விப்பட்டிருப்போம். அதன் பொருள் நம்மில் சிலருக்குத் தெரியாமால் இருக்க வாய்ப்புள்ளது. அதைப் பற்றிப் பார்ப்போம்.

பட்டா

நிலத்தின் உரிமை யாருக்கு என்பதைக் காட்டுவது பட்டா. இதில் மாவட்டத்தின் பெயர், ஊரின் பெயர், பட்டா எண், உரிமையாளர் பெயர் போன்ற விவரங்களுடன், சர்வே எண்ணும் உட்பிரிவும் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்நிலம் நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா என்னும் விவரமும், நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வையின் விவரங்களும் இருக்கும்.

சிட்டா

ஒருவருக்குக் குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறது என்பதைக் குறிக்கும் அரசாங்கப் பதிவேடுதான் சிட்டா. சிட்டாவில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், என்ன வகையான நிலம் அதாவது நன்செய் அல்லது புன்செய் பயன்பாட்டில் இருக்கிறதா என்ற விவரமும் நிலத்திற்கான தீர்வை கட்டிய விவரமும் சிட்டாவில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

அடங்கல்

ஊரில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடுதான் ‘அடங்கல்'. அடங்கலில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா எண், நிலத்தின் பயன்பாடு என்ன போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்