சமையலறைதான் வீட்டில் முக்கியமான அறை. மொத்தக் குடும்பத்துக்கான ஆரோக்கியமான உணவு தயாராகும் இடமும் இதுதான். அதனால் இந்த அறையை அமைப்பதில் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு சமையலறை குறைந்தபட்சம் 8-க்கு 10 அடி என்ற கணக்கிலாவது இருக்க வேண்டும். ஓரளவு இடம் பெரிதாக இருந்தால்தான் சமையல் சாமான்கள், மளிகைப் பொருட்களை அலமாரி அமைத்து வைக்க முடியும்.
பாத்திரம் கழுவும் தொட்டியை எஃக்கால் அமைப்பது நல்லது. சிமெண்ட் அல்லது கற்களால் அமைக்கப்படும் தொட்டியைவிடத் தண்ணீரை சுலபமாக வெளியேற்ற எஃகுத் தொட்டிகள் சிறப்பானவை. சமையலறை மேடையின் உயரம் 34 அங்குலம் இருப்பது நல்லது. இது காஸ் உருளையை உள்ளே வைப்பதற்கு ஏதுவாக இருக்கும். சமையலறை என்றால், நிச்சயம் வெப்பம் அதிகமாக இருக்கும். அதற்காக மின் விசிறிகளைச் சமையலறையில் வைப்பது நல்லதல்ல. புகைபோக்கி நிச்சயம் இருக்க வேண்டும். பழைய வீடுகளில் இது நிச்சயம் இருக்கலாம்.
ஆனால், இப்போது கட்டப்படும் வீடுகளில் புகைபோக்கிகளைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது. குறிப்பாக அடுக்குமாடிக் குடியிருப்புகளில் புகைபோக்கிகளை அமைப்பதும் கடினமானது. புகைபோக்கிகளுக்கு மாற்றாக, சமையலறையில் எக்ஸாஸ்ட் ஃபேன் புழக்கத்துக்கு வந்துவிட்டது. தற்போது சமையலறைகளில் சிம்னி வைப்பதைச் சிலர் வழக்கமாக வைத்துள்ளனர். இது ஒரு சிறந்த முறையும்கூட. சிம்னி உபயோகிக்கும்போது அது கார நெடியையும் எண்ணெய் பிசுக்கையும் இழுத்துக்கொள்ளும். அதை அடிக்கடி நாம் சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் இயந்திரம் கெட்டுவிடும்.
சமையலறைக்குப் பயன்படுத்தும் ‘சிம்னி ஹாப்’ எனப்படும் அடுப்பு தரமாக இருப்பது அவசியம். சமையலறை மேடைக்கு மேல் பளிங்குக் கற்களைப் பயன்படுத்துவது நல்லது. மேடைக்கு மேல் 2 அடி உயரத்துக்கு டைல்ஸ் பயன்படுத்தலாம். சமையலறையில் முக்கியமான பகுதி கப்போர்டு. உணவுப் பொருட்களை இங்கு வைத்து பாதுகாப்பார்கள். உணவுப் பொருட்கள் உள்ள இடம் என்பதால் இங்குப் பூச்சி வரவும் சாத்தியம் அதிகம். இதனால் கப்போர்டு விரைவில் பூச்சிகளால் துளைகள் இடப்பட்டுப் பாதிப்புக்குள்ளாகும். எனவே, கப்போர்டின் உள், வெளிப்புறங்களை லேமினேட் செய்வது நல்லது. கப்போர்டுகளுக்கு வண்ணம் பூசுவதன் மூலம் பராமரிப்புச் செலவுகள் அதிகமாக இருக்கும். எனவே கூடுமானவரை வண்ணம் உபயோகிப்பதை தவிர்த்து லேமினேட் செய்வது சிறந்தது.
- அனில்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago