அறைக்கலன்களைத் தேர்வுசெய்வது எப்படி?

By செய்திப்பிரிவு

முகேஷ்

அறைக்கலன் வாங்குவதற்குச் செல்லும்போது சில விஷயங்களை முன்பே தீர்மானிக்க வேண்டும். அதாவது, பட்ஜெட், அளவு, நிறம், தரம், வடிவம் மற்றும் தேவை ஆகியவற்றை முன்கூட்டியே செய்துகொள்ள வேண்டும். விலையைப் பொறுத்து அறைக்கலனை மரத்தில் வாங்குவதா அல்லது உலோகத்தில் வாங்குவதா என திட்டமிட்டுக் கொள்ளுங்கள். இன்றைய சூழலில், அறைக்கலன்களுக்கென்றே பிரத்யேகமாகக் கடைகள் சந்தையில் உள்ளன. அங்கு சென்று வாங்குவது, நமக்கு பணத்தை மிச்சப்படுத்தும் என்று நினைப்பவர்கள் உண்டு.

ஆனால், கடையின் பிரம்மாண்டத்துக்கு முன்பு, அங்கு வைக்கப்பட்டுள்ள அறைக்கலன்கள், பார்ப்பவர்களுக்குச் சிறிதாக தோன்றக் கூடும். ஆனால், வீட்டின் அளவைக் கொண்டு பார்க்கும்போது அவை போதுமானதாக இருக்கும் என்பதை அறைக்கலன்கள் வாங்குபவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம், அறைக்கலன்கள், அறையின் நீள, அகலத்துக்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும். விலை மலிவாக கிடைத்தாலும் பெரிய அளவிலான சோபா அல்லது இருக்கைகளை வாங்க முன்வரக் கூடாது. ஏனென்றால், அவை அறையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக்கொள்ளும். பயன் பாட்டுக்கான இடம் வெகுவாகக் குறைந்து விடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதேபோல், கட்டில் வாங்குவதிலும் கூடுதல் கவனம் தேவை. எத்தனை பேருக்காக அதனை வாங்குகிறீர்கள் என்பதையும், எந்த அறையில் அதனை உபயோகப்படுத்த திட்டமிட்டுள்ளீர்கள் என்பதையும் கருத்தில் கொண்டே அதன் அளவை முடிவு செய்ய வேண்டும். சிறு குழந்தைகள் உள்ள வீட்டுக்குக் கட்டில் அல்லது அறைக்கலன் வாங்கும்போது கூடுதல் பாதுகாப்பு அம்சங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும், குழந்தைகள் கத்தி, ஊசி போன்ற பொருட்களைக் கொண்டு கட்டில் அல்லது அறைக்கலன்களை சேதப்படுத்தக் கூடும் என்பதால், அதிக விலை கொடுத்தோ அல்லது தோல் பொருட்களில் செய்யப்பட்ட இருக்கைகளையோ வாங்கும் போது ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துக் கொள்ள வேண்டும்.

சோபா செட்களை வாங்கும்போது, கண்ணைப் பறிக்கும் நிறத்தில் இருக்கிறது என்பதற்காகவோ அல்லது பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது என்பதற்காகவே அவற்றை வாங்குவதால் எந்தப் பயனும் கிடைக்கப் போவது இல்லை. அறையின் வண்ணம், அறையின் இடத்தை நினைவில் கொண்டு வாங்குங்கள்.

இந்த விஷயங்களுடன், அறைக்கலன்களின் ஆயுள் காலத்தையும் கவனத்தில் கொள்வதும் அவசியம். பொதுவாக, நீண்ட காலம் உழைக்கக்கூடிய அறைக்கலன்களை வாங்குவது பணத்தை மிச்சப்படுத்தும். அதிலும், பராமரிக்கக் கூடுதல் செலவாகாத வகையில் உள்ள ஃபர்னிச்சகளை வாங்குவதே சிறந்தது. விலை குறைவாக இருக்கிறது என்பதற்காக, தரத்தில் சமரசம் செய்து கொள்ளாதீர்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்