ஜீ.முருகன்
சிமெண்ட் பூசி வண்ணம் அடித்து இப்போது கட்டப்படும் கான்கிரீட் வீடுகளைப் பார்க்கும்போது எனக்கு அவையெல்லாம் பெரிய பெரிய அடுப்புகள் போல்தான் தோன்றும். அடுப்பாவது தீயை அணைத்துவிட்டால் வெப்பம் தணிந்துவிடும். ஆனால், இந்த வீடுகள்? பகல் முழுவதும் வெப்பத்தைச் சேமித்து இரவு முழுவதும் உமிழ்ந்து கொண்டிருக்கின்றன. மின்விசிறி நின்றுவிட்டால் நரகம்தான்.
அதனால் நான் விரும்பியது பகலில் வெப்பத்தைச் சேமித்து வைத்து இரவு முழுவதும் (ட்ரேகன் போல) உமிழாத ஒரு வீடு. அதற்கு வழக்கமான கான்கிரீட் ஸ்லாப்பை நாம் பயன்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். மாற்று வழி என்னென்ன எனத் தேடினேன். மஞ்சம் புல் கூரை போடவோ ஓடு வேயவோ வீட்டில் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அப்படியான தேடலில் கிடைத்ததுதான் ஃபில்லர் ஸ்லாப் ரூஃப்.
தளத்தின் மேல் 3 அங்குல இடை வெளியில் மங்களூர் ஓடுகளை மேலும் கீழும் கவிழ்த்து வைத்துப் போடும் முறை. இது லாரி பேக்கரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட சிறப்பான தொழில் நுட்பம். மண்பானை, தேங்காய் ஓடு போன்றவற்றைக்கூட இதற்குப் பயன்படுத்துகிறார்கள். பில்லர் ஸ்லாப் ரூஃபுக்கென்ற உள்ளே துளைகள் கொண்ட ஒடுகளைச் சில நிறுவனங்கள் தயாரிக்கின்றன. ஆனால், விலை அதிகம். ஆகச் சிறந்தது மங்களூர் ஓடுகளே.
கம்பி, சிமெண்ட், ஜல்லி என 30 சதவீத செலவு குறைவு. அதாவது வழக்கமான முறையில் ரூப் ஸ்லாப் போட 1 லட்சம் ரூபாய் ஆகிறது என்றால் இதற்கு 70 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவாகும். வெப்பமும் குறையும். இரண்டு ஓடுகளுக்கு மத்தியில் உள்ள காற்று இடைவெளி வெப்பத்தைத் தடுக்கும். கீழ் பகுதியில் நேர்த்தியாக பூசி வண்ணம் அடித்துவிட்டால் வித்தியாசமான ஒரு அழகையும் பெற்றுவிடும்.
இது போன்ற புதிய தொழில்நுட்பத்தைச் செயல் படுத்தும்போது நேர்கொள்ளும் பிரச்சினை, அதைத் திறம்படச் செய்யும் வேலை ஆட்கள். அவர்கள் கிடைப்பது அரிதானது என்பது முதல் பிரச்சினை. அப்படிக் கிடைத்தாலும் செலவு கூடிப்போகும் வாய்ப்பும் அதிகமாகும்.
அப்படிப் பல முயற்சிகளுக்குப் பின் உள்ளூர் மேஸ்திரிகளை வைத்தே இதைச் செய்துவிடுவது என்ற முடிவுக்கு வந்தேன். படம் போட்டு அவர்களுக்கு விளக்கினேன். ஆனால், ஓடுகளுக்கு இடையே 3 இன்ச் மட்டுமே இடைவெளி என்பதால் ஓட்டின் மேல் கால்வைத்து உடைத்துவிட வாய்ப்பிருக்கிறது. நாம் சொல்வது போல அவர்கள் கேட்க மாட்டார்கள், பொறுமையாகச் செய்ய மாட்டார்கள். அதனால் அந்த இடைவெளியை 6 இன்ச்சாக மாற்றினேன். அதனால் ஒரு கம்பி கூடுதலாகப் போட வேண்டி வந்தது.
கம்பி கட்டும் போதுகூட மேஸ்திரிகள் “சார் இந்தப் பரிசோதனை வேணாம் சார். வழக்கமா போட்ற மாதிரி சாதாரண கான்கிரீட்டே போட்ருவோம் சார்” என்றார்கள். “ஃபில்லர் ஸ்லாப் ரூஃப்தான். அத மாத்த முடியாது” என்று சொல்லிவிட்டேன். இந்த உறுதி இல்லை என்றால் வழக்கமான மேஸ்திரிகள் நம்மை வழக்கமான வீட்டைக் கட்டவைத்துவிடுவார்கள்.
இந்த ஃபில்லர் ஸ்லாப் (Filler Slab) முறை இந்தியக் கட்டிடவியல் அறிஞர் லாரி பேக்கரால் கண்டுபிடிக்கப்பட்டது. நம் நாட்டின் நிலவும் வெப்பநிலைக்கு ஏற்ற வீடுகளை உருவாக்கும் முயற்சியில் இந்த முறை கண்டுபிடிக்கப்படது எனலாம். மேலும் இதன் மூலம் கட்டுமானச் செலவையும் குறைக்க முடியும்.
அதுபோல் கூரையின் எடையைக் குறைக்க முடியும். மேலும், கான்கிரீட் கம்பிகளுக்கு இடையில் ஓடுகளைப் பயன்படுத்துவதால் வீட்டுக்குள் குளிர்ச்சி இருக்கும். லாரி பேக்கரே இந்த முறையைக் குறித்து விளக்கப் படம் ஒன்றை வரைந்துள்ளார். அதில் ஓடுகளுக்கு இடையில் இடைவெளி எவ்வளவு விட வேண்டும் என்ற பல விவரங்கள் உள்ளன.
கட்டுரையாளர்,
சிறுகதை எழுத்தாளர்
‘ஜீ.முருகன் கதைகள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்
தொடர்புக்கு:
gmuruganjeeva@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago