ஜி.எஸ்.எஸ்.
அமெரிக்காவின் எரிசக்தித் துறை ஒவ்வொரு வருடமும் சூரிய டெகத்லான் (Solar Decathlon) எனப்படும் போட்டியை நடத்துகிறது. இது பத்துப் போட்டிகள் கொண்ட பிரிவு. கல்லூரி மாணவர்களுக்கானது. புதுப்பிக்கக்கூடிய சக்தியைக் கொண்டு சிறப்பான வீடுகளை எப்படி வடிவமைக்கலாம், உருவாக்கலாம் என்பதுதான், இதில் பங்குகொள்ளும் கல்லூரி மாணவர்களுக்கான சவால்.
இது பெருமைக்குரிய ஒரு போட்டியாகக் கருதப்படுகிறது. மாணவர்களின் எண்ணங்களையும், டிசைன்களையும் அமெரிக்க அரசு அனைவருக்கும் காட்சியாக வைக்கிறது. கட்டுமானக் கலைஞர்கள் மட்டுமல்ல; பொது மக்களும்கூட இதை ஆர்வத்துடன் வந்து பார்த்துவிட்டுச் செல்கிறார்கள். மாணவர்களின் புதிய ஐடியாக்களைச் செயல்படுத்தவும் முயல்கிறார்கள்.
2002-ல் தொடங்கிய இந்தப் போட்டி தொடர்ந்து மேலும் மேலும் அதிகப் பயிற்சியாளர்களை ஈர்த்து வருகிறது. வளரும் தொழில்நுட்பங்களைக் கொண்டு தீர்வுகளை எட்டும் முயற்சியில் மாணவர்கள் ஈடுபடுகிறார்கள்.
தொடக்கத்தில் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை என்றுதான் சூரிய டெகத்லான் போட்டிகள் நடைபெற்று வந்தன. இப்போது அதன் ஒரு பகுதி ஆண்டுக்கு ஒரு முறையாக மாற்றப்பட்டிருக்கிறது.
2019-20க்கான போட்டிப் பிரிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்து அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்யப்படும். அவை – ஆற்றல் செயல்திறன், பொறியியல், நிதிச் செயலாக்கம், புதுப்பித்துக் கொள்ளும் திறமை, கட்டுமானம், கட்டுமான நடவடிக்கைகள், சந்தைக்கான சாத்தியக்கூறு, சுற்றுச் சூழலுக்கேற்ற தரம், புதுமை மற்றும் வழங்கல் (presentation) ஆகியவை.
2019-20 ஆம் ஆண்டுக்கான டெகத்லான் போட்டியில் இருபிரிவுகளில் ஒன்றை மாணவர்கள் தேர்ந்தெடுக்கலாம். ஒன்று வடிவமைப்பு தொடர்பானது (Design Challenge), மற்றொன்று கட்டுமானம் தொடர்பானது (Build Challenge).
வடிவமைப்புப் போட்டியில் அமெரிக்காவில் வேகமாக அதிகரித்து வரும் வீடுகளின் டிசைனை மனதில் கொண்டு புதுமையாகவும், தரம் மிக்கதாகவும், பாதிப்பு ஏற்பட்டாலும் விரைவில் சரி செய்துவிட முடியும் எனும் கோணத்திலும் உள்ள வடிவமைப்புக்கு போட்டியில் முன்னுரிமை கொடுப்பார்கள். வடிவமைப்புப் போட்டி என்பது ஆண்டுதோறும் நடைபெறுகிறது.
கட்டுமானப் போட்டி என்பது இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இதில் தங்கள் ‘வீடுகளை’ கப்பலின் மூலம் ஸ்மித்சோனியன் திருவிழாவுக்கு எடுத்துச் சென்று பொது மக்கள் பர்வைக்கு வைக்க வேண்டும். இந்தத் திருவிழா ஜூன் 2020-ல் நடைபெறவுள்ளது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago