முகேஷ்
வீட்டுக் கட்டுமானத்துக்கு முன்பெல்லாம் செங்கற்களையே அதிகமாகப் பயன்படுத்திவந்தோம். ஆனால், இப்போது சுற்றுச்சூழல் பாதிப்பு, தட்டுப்பாடு போன்ற காரணங்களால் செங்கற்களின் பயன்பாடு குறைந்து வருகிறது. செங்கற்களுக்கு மாற்றாகப் பல கட்டுமானக் கற்கள் இப்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன. அவற்றில் ஒன்று செல்லுலர் லைட் வெயிட் கான்கிரீட் ப்ளாக் (Cellular Lightweight Concrete Blocks).
இந்த வகைக் கட்டுமானக் கல்லைப் பயன்படுத்துவதால் பல நன்மைகள் இருக்கின்றன. எடை குறைவாக இருப்பதால் இந்தக் கற்கள் கையாள்வதற்கு எளிமையானவை. செங்கற்களைவிட அகலம் கூடுதலாக இருப்பதால் கட்டுமானப் பணிகள் விரைவாக முடிப்பதற்கும் ஏதுவானதாக இருக்கும்.
இந்தக் கற்கள் மற்ற மாற்றுச் செங்கற்களைக் காட்டிலும் மிகுந்த பயன்பாடு கொண்டவை. இது அதிகப் பளு தாங்கும் திறன் கொண்டது. அதுபோல வெப்பத்தைக் கடத்தும் திறனும் மிகக் குறைவு. அதனால் வீட்டுக்குக் கோடைக்காலத்திலும் குளுமையைத் தரும். தீயைக் கடத்தும் பண்பும் மற்ற மாற்றுக் கட்டுமானக் கற்களுடன் ஒப்பிடும்போது குறைவு. இன்னொரு முக்கியமான பயன் இது அளவில் பெரியது. ஆனால், உறுதியானது.
எடையும் குறைவு. மேலும், இந்தக் கற்களைக் கட்டுமானப் பணிகளுக்கு உபயோகிக்கும்போது கட்டுமானப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். கட்டுமானத்தின் மொத்தச் செலவுகளில் 20 சதவீதம்வரை மிச்சமாகும்.
மேலும், இந்தக் கற்களை கட்டு மானப் பணி நடைபெறும் இடத்திலே தயாரிக்க முடியும். பெரிய கட்டிடப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள், செல்லுலர் லைட் வெயிட் கான்கிரீட் ப்ளாக் உற்பத்தி இயந்திரங்களைத் தனியாக வாங்கித் தயாரிக்கும்.
இதன் தயாரிப்பில் பயன்படும் பிரதான இயந்திரங்கள் மிக்ஸர் கிரைண்டரும் ஃபோம் ஜெனரேட்டரும் ப்ளை ஆஷ், சிமெண்ட், ஃபோமிங் ஏஜண்ட் (இது தாவர எண்ணெய்யிலிருந்து தயாரிக்கப்படுகிறது) ஆகியவை இந்தக் கற்கள் தயாரிப்பில் முக்கியமான பகுதிப் பொருள்கள். ஃபோமிங் ஜெனரேட்டரில் உருவாக்கப்பட்ட ஃபோமிங் உடன் ப்ளை ஆஷ், சிமெண்ட் ஆகியவற்றை மிக்ஸர் கிரைண்டரில் நன்றாக அரைக்க வேண்டும். சில மணி நேரத்துக்குப் பிறகு கடினமான இந்தக் கலவை உருவாகும். இப்படி உருவாகும் இந்தக் கலவையை அச்சுகளில் ஊற்றி உலர்த்தவிட வேண்டும். போதுமான நேரம் உலர்ந்த பிறகு கற்களை அச்சுகளில் இருந்து பிரிக்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 mins ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago