சென்னையில் அதிகரிக்கும் மலிவு வீட்டு விலை

By செய்திப்பிரிவு

ஜே.கே. 

மலிவு விலை வீடுகளின் எண்ணிக்கை கடந்த நான்காண்டுகளில் குறைந்து வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2019-ம் ஆண்டின் முதலாம் காலாண்டுவரை உள்ள புள்ளிவிவரங்கள் அடிப்படையில் ரிசர்வ் வங்கி மேற்கொண்ட இந்த ஆய்வு முடிவு இப்போது வெளியாகியுள்ளது. அதனடிப்படையில் இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் மலிவு வீட்டு விலை கடந்த 2016 முதலாம் ஆண்டிலிருந்து அதிகரித்துவருவதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

மும்பை, சென்னை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, புனே, ஜெய்ப்பூர், சத்தீஸ்கர், அகமதாபாத், லக்னோ, போபால், புவனேஸ்வர் ஆகிய 13 நகரங்களை ரிசர்வ் வங்கி ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது. இந்த நகரங்களில் வழங்கப்பட்டுள்ள வீட்டுக் கடன் அடிப்படையில் இந்த ஆய்வை ரிசர்வ் வங்கி மேற்கொண்டது. தனிநபர்களின் வருமானத்தைக் கணக்கில் கொண்டு மலிவு வீடுகளின் விலை தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
கடந்த சில ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் துறை மோசமான பின்னடைவைச் சந்தித்தது. ஆனால், தற்போது அதிலிருந்து ரியல் எஸ்டேட் துறை மீண்டு வந்துகொண்டிருக்கிறது.

அதன் காரணமாக இந்தியாவின் ரியல் எஸ்டேட் வளம் மிக்க நகரங்களின் புறநகர்ப் பகுதிகளில் மலிவு விலை வீடுகள் அதிகமாக உருவாக்கப்பட்டுவருகின்றன. உதாரணமாக சென்னையில் கூடுவாஞ்சேரி, பொத்தேரி பகுதிகளில் பல அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகள் நடுத்தர மக்கள் வாங்கக்கூடிய விலையில் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் நடுத்தர மக்கள் பலர் பயனடைந்து வருகிறார்கள். அதேநேரம் மேலே குறிப்பிடப்பட்டுள்ள நகரங்களின் எல்லைக்குள் நடுத்தர மக்களுக்கான மலிவு விலை வீடுகள் கிடைப்பது சாத்தியம் அல்ல. உதாரணமாக சென்னையில் நகரப் பகுதியான கோடம்பாக்கம், மாம்பலம், கே.கே.நகர் போன்ற பகுதிகளில் மலிவு விலை வீடுகள் உருவாக்கப்படவில்லை.

அதற்கான வாய்ப்பும் இல்லை. மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட நிதிநிலை அறிக்கையில் மலிவு விலை வீடுகளுக்காகச் சில சலுகைகளை அறிவித்துள்ளது. அதில் மலிவு விலை வீடுகளுக்கான வரையறையாக ரூ.45 லட்சம் எனக் குறிப்பிட்டுள்ளது. இந்தக் கணக்கின்படி பார்த்தால் பெரு நகரங்களின் எல்லைக்குள் மலிவு விலை வீடு என்பது கேள்விக்குறிதான். ரிசர்வ் வங்கியின் இந்த அறிக்கையின்படி இந்தியாவின் முதல் நிலை நகரங்களில் மலிவு விலை வீடுகளின் எண்ணிக்கை குறைந்துவருகின்றது. ஒட்டுமொத்த இந்தியாவில் மலிவு வீடுகளின் விலை (தனி நபர் வருமானத்துக்கு எதிராக) 61.5 ஆக இருக்கிறது. 2015 முதலாம் காலாண்டில் இந்தப் புள்ளி 56.1 ஆக இருந்தது. 

இந்திய அளவில் மும்பையில் மலிவு வீடுகளின் விலை (தனி நபர் வருமானத்துக்கு எதிராக) 74.4 புள்ளியாக இருக்கிறது. 2015 முதலாம் காலாண்டில் இந்தப் புள்ளி 64.1 ஆக இருந்தது. இந்த நான்காண்டுகளில் 10.3 புள்ளி அளவுக்கு மலிவு விலை வீடுகள் அதிகரித்துள்ளது. ஆனால், 2018-ன் இறுதிக் காலாண்டை ஒப்பிடும்போது 2.5 புள்ளிகள் குறைவு. மும்பைக்கு அடுத்தபடியாக மலிவு வீடுகளின் விலை அகமதாபாத்தில் 70.4 புள்ளியாக இருக்கிறது. 2015 முதலாம் காலாண்டில் அகமதாபாத்தின் விலைப் புள்ளி 59.5 ஆக இருந்தது. இந்த நான்காண்டுகளில் அகமதாபாத்தின் மலிவு வீடுகளின் விலை 10.9 புள்ளிகள் அதிகரித்துள்ளன. அதேநேரம் 2018-ன் இறுதிக் காலாண்டை ஒப்பிடும்போது இது 1.3 புள்ளி குறைவு. 

இந்திய அளவில் புவனேஸ்வரில்தான் மலிவு வீடுகளின் விலைப் புள்ளி குறைவாக உள்ளதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. 2019 முதலாம் காலாண்டில் புவனேஸ்வரின் மலிவு வீடுகளின் விலைப் புள்ளி 54.3. ஆனால், 2015 முதலாம் காலாண்டுண்டன் ஒப்பிடும்போது இது 7.1 புள்ளிகள் அதிகம். புவனேஸ்வருக்கு அடுத்தபடியாக ஜெய்ப்பூர் மலிவு வீடுகளின் விலைப் புள்ளியில் (55.9) இரண்டாம் இடம் பிடித்துள்ளது. சென்னையின் மலிவு விலை வீடுகளின் விலைப் புள்ளியைப் பொறுத்தமட்டில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் இருக்கிறது. 2019 முதலாம் காலாண்டில் சென்னையின் மலிவு வீட்டு விலைப் புள்ளி 58.6. இந்திய அளவில் சென்னை 6-ம் இடம் வகிக்கிறது.

டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு ஆகிய பெரு நகரங்களுடன் ஒப்பிடும்போது சென்னையின் மலிவு வீட்டு விலை அதிகரித்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. 2015 முதலாம் காலாண்டுடன் ஒப்பிடும்போது இந்தக் காலாண்டின் விலைப் புள்ளி 7.3 புள்ளி அதிகம். அதேநேரம் 2018 இறுதிக் காலாண்டின் விலைப் புள்ளியைவிடவும் இது அதிகம். ஆனால்மற்ற பெரும்பாலான நகரங்களில் 2018 இறுதிக் காலாண்டின் விலைப் புள்ளிகளைவிட இந்தக் காலாண்டின் விலைப் புள்ளிகள் குறைந்திருக்கின்றன. இதிலிருந்து சென்னையில் வீட்டு விலை அதிகரித்திருப்பதை உணர முடியும். சென்னையின் வீட்டு விலை வீழ்ச்சி அடைந்திருப்பதாக இரு வாரங்களுக்கு முன்பு வெளியான ஜே.எல்.எல். அறிக்கை தெரிவித்ததை கணக்கில் கொண்டால், இந்த விலைப் புள்ளி வருங்காலங்களில் குறையும் என எதிர்பார்க்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்