சென்னையின் மத்திய பகுதிகளில் வீடோ அல்லது மனையோ வாங்குவது லேசுபட்ட காரியமல்ல. அதைவிட வீடு, மனையின் விலையை விசாரித்தால் யானை விலை, குதிரை விலையில் சொல்லுவார்கள். அதற்காக வீடோ மனையோ வாங்காமலா இருக்க முடியும். அதான் இருக்கிறதே புறநகர்ப் பகுதிகள்.
சென்னையில் இன்று மிகப் பிரம்மண்டமான அடுக்கு மாடி வீடுகள் எல்லாம் புறநகர்ப் பகுதிகளில்தான் கட்டப்படுகின்றன. அதேபோல புறநகர்ப் பகுதிகளில் மனை வாங்கி வீடு கட்டவும் பலர் விரும்புகிறார்கள். சரி, தற்போதைய நிலையில் சென்னையில் எந்தெந்த இடங்களில் கட்டுமான நிறுவனங்களால் வீட்டுத் திட்டங்கள் அதிகம் மேற்கொள்ளப்படுகின்றன? அதற்கான காரணங்கள் என்ன?
வேளச்சேரி :
கிண்டிக்கு அருகில் அமைந்துள்ள பகுதி வேளச்சேரி. திருவான்மியூர், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, மேடவாக்கம், ஓ.எம்.ஆர். இணைப்புச் சாலை எனப் பல பகுதிகளையும் இணைக்கும் பகுதி வேளச்சேரி. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகமுள்ள சோழிங்கநல்லூர், சிறுசேரி, கேளம்பாக்கத்துக்கும் அருகே உள்ள பெரிய வர்த்தகப் பகுதியாகவும் வேளச்சேரி உள்ளது.
ஜி.எஸ்.டி. சாலைக்கு அரை மணி நேரத்தில் வேளச்சேரியிலிருந்து சென்றுவிடலாம். எனவே கட்டுமான நிறுவங்கள் வேளச்சேரியில் தொடர்ந்து கட்டுமான திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. எனவே இங்கு அடுக்கு மாடி வீடுகளின் விலையும் அதிகமாக உள்ளது.
போரூர்:
கட்டுமான நிறுவங்கள் வீட்டுத் திட்டங்களை விரும்பிச் செயல்படுத்தும் இடங்களில் ஒன்று போரூர். மாநகராட்சியின் எல்லைகள் போரூர் வரை நீண்டுள்ளது. பரங்கிமலைக்கும் பூந்தமல்லிக்கும் இடையே உள்ள மிக முக்கியமான பகுதி. ரசாயன நிறுவனங்கள், உற்பத்தி நிறுவனங்கள், வீட்டுக் குடியிருப்புகள், சந்தைகள் அதிகம் உள்ள பகுதி. கட்டுமான நிறுவனங்கள் இங்கே போட்டி போட்டுக்கொண்டு வீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.
பள்ளிக்கரணை/மேடவாக்கம்:
வேளச்சேரி மற்றும் சோழிங்க நல்லூருக்கு மிக அருகில் அமைந்துள்ள பகுதி. தென் சென்னையில் வேகமாக வளர்ந்து வரும் பகுதியும்கூட. தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் பலர் இந்தப் பகுதிகளில் அதிகமாக உள்ளார்கள். இந்தப் பகுதிகள் வழியாக விமான நிலையத்தில் மிக விரைவாகச் சென்றுவிட முடியும். கட்டுமான நிறுவனங்கள் தொடர்ச்சியாக இங்கே வீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்திய வண்ணம் உள்ளார்கள். வேளச்சேரிக்கு அருகில் இருந்தாலும், அங்கே விற்கப்படும் வீடு, மனையின் விலையைவிட இங்கே விலை குறைவுதான்.
பெரும்பாக்கம்:
மேடவாக்கத்தில் இருந்து சோழிங்கநல்லூரை இணைக்கும் முக்கியமான பகுதி. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை இணைக்கும் ஓ.எம்.ஆர். சாலையையும் இணைக்கிறது பெரும்பாக்கம். இங்கே வயல்வெளியாக இருந்த பகுதிகள் எல்லாம் அண்மைக் காலங்களில் வீடுகளாகக் காட்சியளிக்கின்றன. சென்னையிலேயே ரியல் எஸ்டேட் திட்டங்கள் மிக அதிகமாக இங்கே செயல்படுத்தப்பட்டுள்ளன. மேடவாக்கம், சோழிங்கநல்லூரில் என்ன விலையில் வீடுகள், மனைகள் விற்கப்படுகின்றனவோ அதே விலையில் இங்கேயும் விற்கப்படுகின்றன.
கூடுவாஞ்சேரி:
வீடு, மனை பற்றிய விளம்பரங்கள் அதிகமாக வரும் பகுதிகளில் ஒன்று ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள கூடுவாஞ்சேரி. ரயில், பேருந்து வசதிகள் நிறைவாக உள்ள ஒரு பகுதி. ஏராளமான கல்வி நிறுவனங்கள் ஜி.எஸ்.டி. சாலையில் இருப்பதால் கூடுவாஞ்சேரியில் வீட்டுத் திட்டங்களும் அதிகமாகவே உள்ளன. கொஞ்சம் குறைந்த விலையில் வீடு வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்குக் கூடுவாஞ்சேரி நல்ல தேர்வாக இருக்கும்.
வீடு விற்பனை மந்தம்
வேளச்சேரி, பெரும்பாக்கம், கூடுவாஞ்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம், போரூர் பகுதிகளில் ரியல் எஸ்டேட் நிலவரம் பற்றி சென்னைப் புறநகர் கட்டுமான சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பிரிட்டோ ஃபிரான்சிஸ் என்ன சொல்கிறார்? “இந்த இடங்களில் வீடுகள் அதிகம் கட்டப்படுகின்றன என்பது உண்மைதான்.
ஆனால், தற்போது பெரிய கட்டுமான நிறுவனங்கள் எந்தத் திட்டங்களையும் இங்கே செயல்படுத்தவில்லை. சிறிய கட்டுமான நிறுவனங்கள்தான் வீடுகளைக் கட்டுகிறார்கள். இங்கேயும்கூட வீடுகள் விற்பனை மந்தமாகவே உள்ளன. இந்தப் பகுதிகளின் சுற்று வட்டாரங்களில் உள்ள வசதிகளைக் காட்டியே சிறிய கட்டுமான நிறுவனங்களும் வீடுகளை விற்கின்றன” என்கிறார் பிரிட்டோ ஃபிரான்சிஸ்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
28 mins ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago