உங்கள் வீடு உங்கள் அனுபவம்: கருத்தில் வளர்ந்த கனவு இல்லம்

By உஷா முத்துராமன்

நாங்கள் 2006-ல் மதுரைக்குக் குடிவந்தோம். திருநகரில் லயன் சிட்டியில் ஒரு வாடகை வீட்டில் குடியேறினோம். நாங்கள் இருந்த இடத்தில் நெருக்கமாக அதிக வீடுகள் இல்லை. இருந்தாலும் அமைதியான சூழல் எங்களுக்குப் பிடித்துப் போய்விட்டது. பள்ளி, கல்லூரி செல்லும் பிள்ளைகள் இல்லாததால் ஒதுக்குப் புறமாக இருந்த அந்த பெரிய வீட்டில் இருப்பதில் எங்களுக்குப் பிரச்சினை இல்லை.

அந்த வீட்டுக்கு வந்த பிறகு எங்கள் மன மகிழ்ச்சி கூடியது. காரணம்அந்த வீட்டுக்கு வந்த பிறகு எங்கள் சொந்தத் தொழில் ஓஹோ என்று உயர்ந்தது. பொருளாதார ரீதியாக நாங்கள் ஓர் உயர் நிலைக்கு வந்தோம். என் கணவர், மாமனார், மாமியார் என எல்லோருடன் நானும் பெரும் மகிழ்ச்சியில் அந்த வீட்டில் வாழ்ந்திருந்தோம். அந்த நேரத்தில் அந்த வீட்டுச் சொந்தக்காரர், வீட்டைக் காலி செய்யச் சொல்லிவிட்டார். எங்கு தேடியும் வயதான மாமனார் மாமியாருக்கு வசதியாக திருநகரில் வீடே கிடைக்கவில்லை. இதுவே நாங்கள் இந்த வீடு கட்டக் காரணம்.

இந்த நேரத்தில் லைன் சிட்டிக்கு அடுத்துள்ள சௌபாக்கியா நகரில் ஒரு மனை காலியாக இருப்பதாகக் கேள்விப்பட்டோம். நானும் என் கணவரும் சென்று பார்த்தோம். எங்களுக்குப் பிடித்த மாதிரி கார்னர் பிளாட்டாக இருந்ததது. இரண்டு புறம் வீடு, இரண்டு புறம் தெருவாக அமையும். அதனால் காற்று, வெளிச்சம் நன்றாக வரும் என்பது என் கணவரின் எண்ணம். மதுரையில் (வேறு ஊர்களில் எப்படியோ தெரியாது) சாலையில் பாதிக்கு நாம் காசு கொடுக்க வேண்டும். 20 அடி ரோடு என்றால், 10 அடிக்கு நாமும், மீதி 10 அடிக்கு எதிர் வீட்டுச் சொந்தக்காரரும் அரசாங்கத்திற்குப் பணம் கொடுக்க வேண்டும்.

எங்களுக்குப் பிடித்துப் போய்விட்டதால் எங்கள் கனவு இல்லத்தை அங்கேயே கட்டத் தீர்மானித்தோம். இரண்டு கிரவுண்ட் வாங்கினோம். அதாவது 11 செண்ட் நிலம். இதில் இரு பக்கம் ரோடுக்கும் 3 சென்ட் போக மீதி 8 சென்டில் வீடு கட்டினோம். நாங்கள் வாடகைக்குக் குடியிருந்த வீட்டின் அமைப்புப் பிடித்துப் பழகி விட்டதால் அதே போல் திட்டமிட்டுக் கட்டினோம். அந்த வீடு கிழக்குப் பார்த்த வீடு. இந்த வீடு வடக்குப் பார்த்த வீடு.

மனையை வாங்கி வீடு கட்டப் படம் போடுவது, அதற்கு அப்ரூவல் வாங்குவது என ஒவ்வொரு வேலையையும் நானும் என் கணவரும் சேர்ந்து செய்தோம். இப்போது நினைத்துப் பார்த்தால் மலைப்பாக உள்ளது. எங்கும் எதிலும் காசுதான் பேசியது வேதனைக்குரிய விஷயம். ஆனால் எங்களின் கொத்தனார் இனிமை, பொறுமை உள்ள நல்ல மனிதர். நியாயத்தின் மறு உருவம். முகம் சுளிக்காமல் நாங்கள் சொல்வதைக் கேட்டு மாற்றம் இருப்பின் அதை எங்களுக்குப் பொறுமையாக விளக்கிப் புரியவைத்து அதன் பிறகுதான் வேலைகளைத் தொடர்வார்.

காலை, மாலை என இரு நேரமும் வந்து பார்த்து, விரும்பிய விதத்தில் வீடு காட்டினோம். என் கணவர் எப்போதும் “எனக்கு திருச்சியில் உள்ள என் தாத்தா வீடு பெரியது. நகரத்தின் மையப் பகுதியில் உள்ளது. இருந்தாலும் உனக்காக மதுரையில் இந்த வீட்டைக் கட்டினேன். உன் விருப்பத்திற்காக நான் எழுப்பிய தாஜ்மஹால்” எனச் சொல்வார். எனக்கு அதைக் கேட்க மகிழ்ச்சியாக இருக்கும்.

ஒவ்வொரு பொருளையும் பார்த்துப் பார்த்து வாங்கி, கொத்தனார், எலக்ட்ரிசியன், சுண்ணாம்பு அடிப்பவர், மரவேலை செய்பவர் என அனைவரிடமும் முகம் கோணாமல் பேசி வேலை வாங்கி நம் வீட்டை உருவாக்கிய பிறகு கிடைக்கும் நிம்மதிப் பெருமூச்சு விட்டவர்களால் மட்டுமே அதன் சுகத்தை அனுபவிக்க முடியும்.

என் சமையல் அறையை நானே முன் நின்று யோசனைகள் சொல்லி வடிவமைத்தேன். அங்கு நின்று சமைக்கும்போது மனதிற்கு நிறைவாகவும், சந்தோஷமாகவும் இருக்கும். அமெரிக்காவில் இருக்கும் என் மகள் வீட்டிற்குச் சென்றாலும், இங்கு எங்கள் வீட்டிற்கு வந்து எங்கள் வீட்டில் சமைத்து சாப்பிட்டு, எங்கள் படுக்கை அறையில் உறங்கும்போது கிடைக்கும் நிம்மதியும், சந்தோஷமும் எங்கு போனாலும் கிடைக்காது. எங்கள் சிந்தனையாக, சித்தமாக எழும்பி நிற்கும் இந்த வீடு எங்கள் மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கான வடிவம் எனலாம்.

வீடு வாங்குவது, கட்டுவது தொடர்பாக உங்களுக்குப் பல விதமான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். அதிலுள்ள சிரமங்களையும் சுவாரசியங்களையும் எங்களுக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி:

sonthaveedu@thehindutamil.co.in

கடிதத் தொடர்புக்கு:

சொந்த வீடு, தி இந்து

கஸ்தூரி மையம்,

124, வாலாஜா சாலை, சென்னை- 600 002.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்