உங்கள் வீடு உங்கள் அனுபவம்: உறவால் நனவான கனவு

By பானுமதி

வட இந்தியாவில் இருந்து வேலை மாற்றலாகி சேலம் வந்த சில மாதங்களிலேயே என் மாமனார், அப்பா இருவரும் சொந்த வீடு கட்டுமாறு ஆலோசனை கூறினார்கள்.

விலைவாசி அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் இப்பொழுது நீங்கள் கட்டினால் பிற்காலத்தில் உங்களுக்கு ஒரு சொத்தாகவும் இருக்கும் என அவர்கள் கூறியதும் சரிதான் எனத் தோன்றியது. இருந்தாலும் நமக்கு இருந்த சிறு தயக்கத்தைப் பார்த்து, “மனையை மட்டும் பாருங்கள் வீட்டை அருகில் இருந்து பார்த்துக் கட்டிக் கொடுப்பது எங்கள் பொறுப்பு” எனத் தைரியம் கொடுத்தனர்.

மனை பார்க்கும் படலம்

வீடு கட்டுவது எனத் தீர்மானம் ஆன பிறகு முதலில் மனை பார்க்கத் தொடங்கினோம். ஈரோடில் திண்டல் அருகே உள்ள சக்தி நகரில் வீட்டுமனை பார்க்கச் சென்றோம்.

எங்கள் விருப்பத்துக்கு ஏற்றார்போல கார்னர் பிளாட், எதிரில் விளையாட்டு மைதானம் என அருமையான மனை கிடைத்தது. ‘தென்றல் வரும் தெற்குப் பார்த்த மனை’ என அண்ணனும் வர்ணித்துச் சென்னார். மனையை வாங்கிவிட்டோம்.

நாங்கள் வாங்கிய மனையின் அளவு 3000 சதுர அடிகள். அதில் 1200 சதுர அடிக்கு வீட்டைக் கட்டிக் கொண்டு மீதி இடத்தில் அழகான தோட்டம் அமைக்கலாம் என எண்ணிக் கொண்டு நல்ல ஆர்கிடெக்சரைப் பார்த்து வீட்டுக்கு பிளான் போட்டோம்.

எங்கள் விருப்பத்துக்கு ஏற்றார்போல பெரிய ஹால், சாப்பாட்டு அறை அதை ஒட்டி ப்ரஞ்ச் வின்டோ, அதைத் திறந்ததும் தொங்கும் பூச்சாடிகள் என எங்கள் கற்பனைக்குத் தகுந்த மாதிரி அவரும் வடிவமைத்துக் கொடுத்தார்.

நல்ல நாள் பார்த்து உறவுகள் சூழப் பாலக் கால் நட்டு, போர் போட்டு, அஸ்திவாரம் தோண்டி என வீட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது. என் அம்மா மேஸ்திரி, சித்தாள் என அவர்களுடன் நட்போடு பழகி, பொருட்கள் எதுவும் சிறிதும் வீணாகாமல் பார்த்துக்கொண்டதோடு தினமும் ப்ளாட்டுக்குச் சென்று வருவார்.

நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் என் மாமனாரும் சென்று ஆலோசனை வழங்குவார். பொருட்கள் வாங்குவது, கூலி கொடுப்பது என் அண்ணாவின் வேலை. சேலத்தில் இருந்து ஒவ்வொரு வாரம் இறுதியில் ஈரோடு சென்று எங்களது வீட்டின் வளர்சியைப் பார்த்து மகிழ்ந்தோம்.

அந்த இடத்தில் நாங்கள்தான் முதன் முதலில் வீடு கட்ட ஆரம்பித்ததால் மின்சார இணைப்புக்கான கம்பம் அமைத்தது என வித்தியாசமான அனுபவம் எங்களுக்குக் கிடைத்தது. நாங்கள் குழந்தையைப் பார்க்கச் செல்வது போல எங்கள் வீட்டைப் பார்க்கச் செல்லும் போதெல்லாம் போட்டோ எடுத்து வைத்துள்ளோம்.

வீட்டுக்குத் தேவையான கதவு, ஜன்னல் போன்ற மர வேலைகளை சேலத்தில் செய்யலாம் என நாங்கள் எடுத்துக்கொண்டு நல்ல தச்சரின் உதவியோடு டிசைன் விண்டோ,பிரன்ச் விண்டா முதலியவற்றைச் செய்து ஈரோட்டுக்கு எடுத்துச் சென்றோம். மரத்தில் இத்தனை வகைகள் உண்டா என பிரமித்துப்போனோம்.

தோழி வைத்த செங்கல்

முதல் செங்கலை மாமனார் பூஜை போட்டு எடுத்து வைத்தது , வாசக்கால் பூஜை போட்டது. கான்கிரீட் போட்டு முடித்ததும் வீட்டில் அகல் விளக்கு ஏற்றியது எனப் பசுமையான நினைவுகள் இந்த வீட்டின் வளர்சியில் உண்டு.

ஒருமுறை என் தோழி கௌசியும் எங்களோடு வீட்டைப் பார்க்க வந்தபோது என் அண்ணன் “வந்ததற்கு நினைவாக 2 செங்கலை வைத்து பூசி விடும்மா” என்றதும் கொத்தனாரின் உதவியோடு எங்கள் வீட்டு ஹாலில் அவர் வைத்த இடத்தைப் பார்க்கும்போது தோழியின் நினைவு இன்றும் வருகின்றது .

முதல் செங்கலை மாமனார் பூஜை போட்டு எடுத்து வைத்தது , வாசக்கால் பூஜை போட்டது. கான்கிரீட் போட்டு முடித்ததும் வீட்டில் அகல் விளக்கு ஏற்றியது எனப் பசுமையான நினைவுகள் இந்த வீட்டின் வளர்சியில் உண்டு.

ஒருமுறை என் தோழி கௌசியும் எங்களோடு வீட்டைப் பார்க்க வந்தபோது என் அண்ணன் “வந்ததற்கு நினைவாக 2 செங்கலை வைத்து பூசி விடும்மா” என்றதும் கொத்தனாரின் உதவியோடு எங்கள் வீட்டு ஹாலில் அவர் வைத்த இடத்தைப் பார்க்கும்போது தோழியின் நினைவு இன்றும் வருகின்றது .

ஒரு மரம் தோப்பாகாது என்பதற்கு ஏற்ப ஒரு வீடு கட்டி முடிக்க எத்தனை விதமான தொழிலாளிகளின் உதவி வேண்டும் என் அனுபவபூர்வமாக நானும் என் கணவரும் அறிந்து மனதார நன்றி தெரிவித்துக் கொண்டோம்.

கட்டி முடித்த வீட்டின் மாடியில் இருந்து பார்க்கும்போது திண்டல் முருகனின் கோவில் அருமையாகத் தெரியும். நாங்கள் கட்டியபோது அந்தப் பகுதியில் எங்கள் வீடு மட்டுமே இருந்தது.

அதற்கு வெள்ளை கலர் பிரைமர் அடித்திருந்தோம். அப்போது அதைப் பார்க்க சலவைக் கல் மாளிகைபோல் இருக்கும். அந்தக் காட்சி இன்னும் என் கண்ணுக்குள் சித்திரமாக இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

மேலும்