சிக்கனத்துக்கு மறுபெயர் சி.எல்.சி.

By யுகன்

கட்டுமானத்தைப் பொறுத்தவரை இன்றைக்குப் பல விதமான நவீன மாற்றங்கள் வந்திருக்கின்றன. மரபான கட்டிடத் தொழில் நுட்பத்துக்கு மாற்றான அந்தத் தொழில்நுட்பங்கள் வீடு கட்டுவதை எளிமையாக்கியிருக்கின்றன. அந்த வகையில் ஒரு புதிய வரவுதான் சிஎல்சி எனப்படும் செல்லுலார் லைட்வெயிட் கான்கிரீட். நவீனக் கட்டுமானங்களில் இன்றைக்குப் பயன்படுத்தப்படும் பொருள்களில் சிஎல்சி பிளாக்குகளுக்குப் பெரும் பங்குள்ளது. சிஎல்சி கான்கிரீட் பிளாக்குகள் பல முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளாகக் கிடைக்கின்றன.

குறைந்த எடை நிறைந்த தரம்

கட்டுமானத்துக்குப் பெரிதும் உதவும் சிஎல்சி பிளாக்குகளைப் பயன்படுத்தி மிகப் பெரிய கட்டுமானங்களான விளையாட்டு மைதான அரங்குகள், பாலங்கள், வணிக வளாகங்கள் முதல் சிறிய தனிப்பட்ட வீடுகள் வரை கட்டுகிறார்கள் பல கட்டுநர்கள். செல்லுலார் குறைந்த எடைக் கற்களைக் கொண்டு எழுப்பப்படும் கட்டுமானங்கள் இந்தியாவைத் தாண்டி உலகத்தின் பல நாடுகளிலும் செல்வாக்கைச் செலுத்தும் தொழில்நுட்பமாக இருக்கிறது.

பசுமைக் கட்டுமானங்களுக்குக் கைகொடுக்கும் சி.எல்.சி.

இன்றைக்கு எங்கு பார்த்தாலும் பசுமைக் கட்டுமானங்களை அமைப்பதற்கான தேவை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதற்கான சுற்றுச்சூழல் அவசியமும் தற்போது ஏற்பட்டுள்ள நிலையில், இத்தகைய பசுமைக் கட்டுமானத் தொழில்நுட்பத்தின் கட்டுமானங்களை உருவாக்குவதற்கு சிஎல் கான்கிரீட் பிளாக்குகள் பெரிதும் பயன்படுகின்றன.

எடை அதிகமான செங்கல் மற்றும் கருங்கல்லால் செய்யப்பட்ட பிளாக்குகளுக்குப் பதிலாக சிஎல் கான்கிரீட் பிளாக்குகளைப் பயன்படுத்தலாம் என்னும் எண்ணம் பரவலாக இன்றைக்கு எழுந்துள்ள, குறைந்த எடையில் நிறைந்த தரத்தோடு சிஎல் கான்கிரீட் பிளாக்குகள் இருப்பதுதான் இதற்குக் காரணம் என்கின்றனர் இதைத் தொடர்ந்து தங்களின் கட்டுமானங்களில் பயன்படுத்தும் கட்டுநர்கள்.

குறையும் கார்பன் அளவு

பொதுவாக செங்கல் மற்றும் கருங்கல்லால் ஆன கட்டுமானங்கள் வெளிப்படுத்தும் கார்பன் அளவைவிட, சிஎல் குறைந்த எடைக் கற்கள் வெளிப்படுத்தும் கார்பன் அளவு குறைவு என்கின்றனர் அனுபவம் நிறைந்த கட்டுநர்கள். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாதவண்ணம் உருவாகும் இத்தகைய சிஎல்சி பிளாக்குகளால் கட்டப்படும் கட்டிடங்களின் ஆயுள் நீடிப்பதற்கும் சிஎல்சி பிளாக்குகள் காரணமாகின்றன.

சிஎல்சி பிளாக்குகள் கட்டுமானத்துக்கு எந்தவகையில் சிறப்பு சேர்க்கின்றன?

சிஎல்சி செல்லோலைட் பிளாக்குகள் நிறைந்த உறுதியுடன் செங்கல்லுக்குப் பதிலாகக் கிடைக்கும் தொழில்நுட்பமாக உருவாகிவருகின்றன. இவற்றைக் கொண்டு கட்டுமானங்களை விரைவாகக் கட்டுவதற்கும் முடிகிறது.

களிமண்ணால் செய்யப்பட்ட கற்கள், பிளாக்குகளைவிட சிஎல்சி தொழில்நுட்பத்தில் உருவான பிளாக்குகளில் உறுதித் தன்மை அதிகம் இருக்கும்.

அடர்த்தித் திறனும் அதிகம்

கட்டிடத்தின் அஸ்திவாரம் அமைப்பதிலும் தூண்கள் அமைப்பதிலும் சிஎல்சி பிளாக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம் கட்டுமானச் செலவு பெருமளவு (30 சதவீதம்) குறையும் என்கின்றனர் இந்தத் துறையில் நிபுணத்துவம் கொண்டவர்கள்.

நிலஅதிர்வைத் தாங்கும் திறன் கொண்டவையாக சிஎல்சி பிளாக்குகள் கருதப்படுகின்றன.

கையாள்வதற்கு மிகவும் எளிமையானது. இதைப் பாதுகாப்பதற்கும் பெரும் பொருட்செலவு தேவைப்படாது. எடை குறைவாக இருப்பதால் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு எளிதாகக் கொண்டு செல்ல முடியும்.

தேவைப்படும் அளவுக்கு சிஎல்சி பிளாக்குகளின் அளவைக் குறைத்துக் கொள்ள முடியும் என்பது இதன் சிறப்பு.

சிஎல்சி பிளாக்குகள் வெப்பத் தடுப்பாற்றல் கொண்டவை. கோடைக்காலத்தில் வீட்டின் உள்ளே குளிர்ச்சியையும் குளிர்காலத்தில் வீட்டினுள் மிதமான கதகதப்பையும் சிஎல்சி பிளாக்குகள் தரும்.

சிஎல்சி பிளாக்குகளின் உறிஞ்சும் திறன் குறைவு. இதனால் மழைக் காலத்தில் கட்டிடத்தின் உள்ளே நீர்க்கசிவால் ஏற்படும் பாதிப்புகள் இருக்காது.

சிஎல்சி பிளாக்குகளைப் பயன்படுத்துவதன்மூலம் வீட்டுக்குள் தேவையற்ற ஒலி நுழைவதைத் தடுக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்