இப்போது இந்தியாவில் உள்ள மாநிலத் தலைநகரங்கள் எப்படி உருவாயின, எப்படி கட்டமைக்கப்பட்டன என்பது பலருக்கும் தெரியாது. ஹரியானா, பஞ்சாப் என இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகரமாக இப்போது இருக்கும் சண்டிகர் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டது.
இந்தியாவில் முதன்முதலாகத் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட நகரமும் இதுதான். அதுவும் இது 50 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வு. ஒரு தலைநகரம் எப்படி உருவாகிறது என்பதைத் தெரிந்துகொள்ள இந்தத் தலைமுறையினருக்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகராக உருவாக உள்ள அமராவதி அதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது. ஆந்திராவின் மையப் பகுதியான விஜயவாடாவில் அமைய உள்ள புதிய தலைநகரை நிர்மாணிக்கும் பொறுப்பை சிங்கப்பூரின் பிரதான கட்டுமான நிறுவனமான சுபர்னா இண்டர்நேஷனல் கன்சல்டன்ட் நிறுவனம் ஏற்றிருக்கிறது.
இந்தப் புதிய தலைநகர் எட்டு பிரதான புறநகர்களாகப் பிரிக்கப்பட இருக்கிறது. ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது அதன் பொருளாதார வளர்ச்சியைச் சார்ந்தது. பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தொழில் துறைக்குப் புதிய தலைநகரில் முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளது. எட்டு புறநகர்ப் பகுதிகளிலும் ஏராளமான தொழிற்சாலைகளை உருவாக்க இப்போதே திட்டங்கள் தயாராக உள்ளன.
அதிவேக ரயில் வசதிகள்
தலைநகர் நிர்மாணத்தின் போதே அதிவேக ரயில்களுக்கான திட்டங்களும் இறுதி செய்யப்பட்டுள்ளன. விஜயவாடா-விசாகப்பட்டினம்-சென்னையை இணைக்கும் ஒரு ரயில் பாதை, விஜயவாடா-ஹைதராபாத்தை இணைக்கும் ஒருw திட்டமும், ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதியையும் கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூரையும் இணைக்கும் ஒரு ரயில் பாதை திட்டமும் தயாராகிவருகின்றன.
கப்பல் தடங்கள்
சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்துக்காக அதிக அளவில் கப்பல் போக்குவரத்தையும் இந்தத் தலைநகரில் ஏற்படுத்தும் யோசனைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. விசாகப்பட்டினம், குடிவாடா, தெனாலி, குண்டூர் மற்றும் சென்னை போன்ற துறைமுக நகரங்களை இணைக்கும் ஒரு திட்டமும் உள்ளது.
விமான வசதி
தலைநகரில் அதிநவீன விமான நிலையத்தை ஏற்படுத்துவதற்காக 5 ஆயிரம் ஏக்கர் நிலம் கன்னாவரத்தில் தயாராக உள்ளது.
சாலை வசதிகள்
தலைநகரத்திலிருந்து புறநகரங்களுக்கு பிரதான ரயில் நிலையங்கள் போன்றவற்றைத் தவிர்த்து இணைக்கும் சாலைகள் பரிசீலனையில் உள்ளன. கிருஷ்ணா ஆற்றை ஒட்டிச் செல்லும் சாலைகள் விஜயவாடா ரயில் நிலையத்தைத் தொடாமல், நெரிசலை ஏற்படுத்தாமல் செல்லும் வகையில் உருவாக இருக்கின்றன.
127 கி.மீ. தொலைவுக்கு உலகத் தரமான அதிவேகச் சாலைகள் புறநகர்ப் பகுதிகளைத் தலைநகரோடு இணைக்கும் திட்டங்களும் தயாராக உள்ளன. சைக்கிள் ஓட்டுபவர்களுக்கும், நடப்பவர்களுக்கும் தனித் தனியாகப் பாதைகள் தலைநகரம் முழுவதும் அமைக்கப்பட உள்ளன.
பிரம்மாண்டமான தலைநகர்
ஆந்திராவின் புதிய தலைநகர் அமராவதியின் பரப்பளவு 7,420 சதுர கிலோமீட்டராக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிரதான நகர் மட்டும் 217 சதுரகிலோமீட்டரில் உருவாக உள்ளது. இப்படி ஒவ்வொரு பகுதியும் வசதியும் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட உள்ளது இந்தப் புதிய தலைநகரில்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago