கட்டிடப் பாதுகாப்பில் பெருகும் விழிப்புணர்வு

By டி.செல்வகுமார்

சென்னை அருகேயுள்ள மவுலிவாக்கத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த 11 மாடி கட்டிட விபத்தில் 61 பேர் பலியானார்கள். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம், கட்டிட பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் மத்தியில் மட்டுமல்லாமல், கட்டிடப் பொறியாளர்கள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

தனி வீடோ அல்லது குடியிருப்பில் உள்ள வீடோ அல்லது மனையோ வாங்கும்போது முன்பிருந்ததைவிட மக்களிடம் இப்போது கட்டிட பாதுகாப்பு குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வமும், எச்சரிக்கை உணர்வும் அதிகரித்திருப்பதைக் காண முடிகிறது. ஏன் பழைய வீடு வாங்குபவர்கள்கூட ஒரு தடவைக்குப் பல தடவை கட்டிடப் பொறியாளரை கேட்டுவிட்டுத்தான் வாங்குகிறார்கள்.

அதாவது, மருத்துவ சிகிச்சையில் “செகண்ட் ஒப்பினியன்” என்று சொல்வார்களே அதுபோல வீடு வாங்குவதிலும் ஒரு கட்டிடப் பொறியாளரோடு நிற்காமல் மற்றொரு பொறியாளரிடமும் பேசிக் கட்டிடப் பாதுகாப்பை முடிந்தவரை உறுதி செய்கின்றனர்.

“முன்பெல்லாம் ஒரு கட்டிடம் அல்லது குடியிருப்புக்கு வடிவமைப்பாளர் ஒருவராக இருப்பார். அதைக் கட்டி முடிப்பவர் வேறொருவராக இருப்பார். இப்போதெல்லாம் கட்டிட வடிவமைப்பாளர், ஸ்டக்சுரல் என்ஜினீயர், சிவில் என்ஜினீயர், தொழிலாளர்கள் என கட்டுமானப் பணியில் தொடர்புள்ள அனைவரும் கலந்தாலோசித்து சமரசம் செய்து கொள்ளாமல் தரத்தை உறுதி செய்வதில் கூடுதல் பொறுப்புடன் செயல்படுகிறார்கள்”என்கிறார். கிரெடெய் தமிழ்நாடு முன்னாள் தலைவர் என்.நந்தகுமார்.

மனை வாங்கும்போதோ அல்லது கட்டிய வீடு வாங்கும்போதோ பல விஷயங்களைக் கவனிக்க வேண்டியுள்ளது. லட்சக்கணக்கில் பணம் போட்டு வீடு வாங்குபவர்கள் சில ஆயிரம் செலவு செய்து கட்டிடப் பாதுகாப்பை உறுதி செய்தால்தான் தரமான வீடு வாங்கி நிம்மதியாக வாழலாம்.

மனை வாங்குவதாக இருந்தால் அப்பகுதியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக வசிப்பவர்களிடம் மழைகாலத்தில் அங்கே எந்தளவு தண்ணீர் தேங்கும் என்றும், அங்கே உள்ள நிலத்தடி நீர் குடிநீருக்கு ஏற்றதா, கட்டுமானப் பணிக்கு உகந்ததா, உப்புத்தன்மை அதிகம் இருக்கிறதா என்றும் தெரிந்து கொள்வது அவசியம். பள்ளத்தில் குப்பையைக் கொட்டி பிளாட் போட்டிருக்கிறார்களா என்பதைக் கவனிக்க வேண்டும். அப்படியிருந்தால் அங்கே மனை வாங்குவது ஆபத்து. எல்லாவற்றுக்கும் மேல் மனைக்கு அங்கீகாரம் இருக்கிறதா என்பதை முதலில் பார்க்க வேண்டும்.

இதுகுறித்து சென்னை கட்டுமானப் பொறியாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் கோ.வெங்கடாசலம் கூறுகையில், “மனை வாங்கிய பிறகு மண் பரிசோதனை (15 முதல் 20 மீட்டர் வரை) செய்தல் அவசியம். மண் பரிசோதனை அறிக்கையைப் பெற்று அதனை ஸ்டக்சுரல் இன்ஜினீயரிடம் கொடுத்துக் கட்டிட வரைபடம் வாங்க வேண்டும்.

அதில், மண்ணின் தாங்கு திறனுக்கு ஏற்ப அடித்தளம் மற்றும் தூண்கள் அமைத்தல், ஒரு சதுர அடிக்கு எவ்வளவு கம்பி இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விவரங்களை அவர் வடிவமைத்துக் கொடுப்பார்.

ஆயிரம் சதுர அடி வீட்டுக்கு, மண் பரிசோதனை, ஸ்டக்சுரல் என்ஜினீயரின் வரைபடம், பிளம்பிங் டிராயிங், எலக்ட்ரிகல் டிராயிங் உள்பட அனைத்துக்கும் ரூ.20 ஆயிரம் வரை செலவாகும். மவுலிவாக்கம் 11 மாடி கட்டிட விபத்துக்குப் பிறகு கட்டிடப் பாதுகாப்பு குறித்து பெரும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் இந்த சில ஆயிரத்தைச் செலவு செய்ய இப்போது யாரும் தயங்குவதில்லை” என்கிறார் வெங்கடாசலம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்