வீட்டுக் கட்டுமானம்: எளிதாக்க ஏழு விஷயங்கள்

By சுந்தர பாரதிதாசன்

திட்டமிடல்

சுயபயன்பாடு வீடுகள் (முற்றிலும் சொந்த பயன்பாடு), சுய பயன்பாட்டுடன் கூடிய வாடகை வீடுகள், வணிகப் பகுதியுடன் இணைந்த குடியிருப்புகள் (சாலை கடைகள், மருத்துவமனை ஆகியவை அமைந்த இடங்கள் சிறந்தது) இதில் எத்தகைய வீட்டை நாம் கட்டப் போகிறோம் என்பதைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

வடிவமைப்பும் வரைபடமும்

அறைகளின் எண்ணிக்கை, அறை களின் அமைவிடங்கள், முற்றம், கழிவறைகள், அலமாரி, பரண் போன்றவை எங்கே அமைய வேண்டும். வீட்டின் உறுப்பினர்களின் தேவை எனென்ன என்பதை முதலிலேயே ஆலோசித்துக்கொள்ள வேண்டும். உங்கள் குடும்பத்தினர் விருப்பத்தைப் பொறியாளரிடம் தெரிவித்து முதலில் வரைபடத்தை வாங்கிக்கொள்ள வேண்டும்.

அதன் பிறகு மண்ணின் தன்மையையும் நல்ல மண் பரிசோதனை நிபுணர்களிடம் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். மேலும் மழை, வெயிலுக்குத் தகுந்தாற்போல் தேவையான பாதுகாப்பையும் முன்பே தீர்மானித்து அதற்கான ஏற்பாடுகளையும் திட்டமிட வேண்டும்.

மதிப்பீடு

வீடு கட்டுவதற்கான செலவு என்பது வீட்டின் நிலப் பரப்பையும், கட்டுமான முறைகளையும் பொறுத்தது. கதவு, ஜன்னல், தரை போன்ற ஒவ்வொரு விஷயத்திலும் நம்முடைய தேர்வு என்ன என்பதையும் முன்பே தீர்மானித்துவிட்டால் செலவை ஓரளவு திட்டமிட முடியும். மேலும் ஒவ்வொரு விஷயத்துக்கும் நாமே விலைகளைத் தெரிந்துகொண்டு ஒரு குறிப்பிட்ட தொகையை வரையறுத்துக்கொள்ள வேண்டும். பட்ஜெட் இடாது கட்டுமானம் தொடங்கினால் அதிகமாகச் செலவு ஆகி நம்மால் சமாளிக்க முடியாமல் போகும் நிலை வரும்.

உள்ளாட்சி அனுமதி

கட்டிடப் பணிகளைத் துவக்கும் முன் மின்சார வாரியத்தில் வீட்டு மனை பத்திரத்தின் நகல் பிரதியையும், மின்சார வாரிய விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்வதாக உறுதி அளிக்கும் ஆவணங்களையும் தாக்கல் செய்து மின்சார இணைப்புப் பெற வேண்டும். உள்ளாட்சி அனுமதி, மின்சார இணைப்பு ஆகியவற்றைப் பணிகளைத் தொடங்கும் முன்பே பெறுவது சிறந்தது. இலையெனில் பணிகளில் தொய்வும் அதிக அலைச்சலும் செலவும் செய்ய நேரிடும்.

பணிமுறை

வீடு கட்டுவதன் முன்பு பணிமுறையைத் தீர்மானிக்க வேண்டும். எம்மாதிரியான பணிமுறையைத் தீர்மானிக்கிறோம் என்பதைப் பொறுத்துப் பல விஷயங் களை நாம் முன்பே தீர்மானிக்க முடியும். அதாவது பணியாட்கள், கட்டுமானப் பொருள் எல்லாம் சேர்த்து முழுக் கட்டிடத்துக்கான ஒப்பந்தத் தையே இப்போதும் எல்லோரும் தேர்வுசெய்கிறார்கள். ஏனெனில் வேலைக்குச் செல்வோர் பெரும்பாலும் கட்டுமானப் பணிகளை மேற்பார்வை பார்க்க இயலாது.

நகரப் பகுதியில் வீடுகட்டும் பெரும்பாலானவர்களின் தேர்வாக இது இருக்கிறது. சிலர் வேலையாட்களை மட்டும் ஒப்பந்தம் செய்துகொள்கிறவர்களும் இருக் கிறார்கள். கட்டுமானப் பொருள்களை அவர்களே மொத்த விலைக்கு வாங்கிக் கொள்வார்கள். இதில் ஓரளவு பொருள் செலவைக் குறைக்க முடியும். கூலியாட்கள், கட்டுமானப் பொருள் இரண்டையும் தாமே ஏற்பாடு செய்துகொள்பவர்களும் இருக்கிறார்கள். பெரும்பாலும் கிராமப் பகுதியில் இருப்பவர்கள் இதைத் தேர்வுசெய்கிறார்கள்.

வழிகாட்டல்

கட்டிடத்துக்கு பொறியாளரின் வழிகாட்டல் அவசியமான ஒன்று. முழுப் பணிக்கும் தேவையில்லை என நினைப் போர் பொறியாளாரை ஆலோசனையின் பேரில் செயல்படுவது நல்லது. அடித்தளம், மேல்தளம் அமைக்கும்போது பொறியாளர் உடன் இருப்பது அவசியமான ஒன்று.

ஒழுங்குகள்

கட்டுமானப் பணிகளில் முக்கியமானது ஒழுங்கு. அதாவது நேர ஒழுங்கு, பணியாளர் ஒழுங்கு, கட்டுமானப் பொருள்கள் ஒழுங்கு இவை மூன்றும் முக்கியமானவை. திறமையான பணியாளர்களைத் தேர்வுசெய்ய வேண்டும். குறித்த நேரத்தில் வேலைக்கு கட்டுமானப் பணிகளை அந்தந்த காலகட்டத்தில் வேலைகளை முடிக்க வேண்டும்.

வேலைகளை முன்பே திட்டமிட வேண்டியதும் அவசியம். மூலப் பொருள்களை வாங்கிக் குவிக்கக் கூடாது. அதே சமயம் கட்டுமானப் பொருள்கள் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொண்டால் நேர விரயத்தைத் தவிர்க்கலாம்.

இனிய இல்லம் அனைவரும் அமைக்கலாம். நிர்வாகவியல் மந்திரங்களான திட்டமிடல் ஒருங்கிணைப்பு, பணியமர்த்தல், வழிகாட்டல், ஒழுங்கு படுத்துதல் ஆகிய மேலாண்மை செயல் கூறுகளைப் பயன்படுத்துவதன் மூலம் வீடு கட்டும் பணி எளிதாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

மேலும்