‘என்னுடைய இன்றைய நாளின் பகலில் சூரியன் ஒளிராது/மஞ்சள் வண்ண முழுமதியும் என்னுடன் ஆடாது/என் ஒளியை இருள் சூழ்ந்துவிட்டது/என் பகலே இருளாய் மாறிவிட்டது…’ `கான்கிரீட் காடு’ என்னும் பாடலில் தொழிலாளர் வர்க்கத்துக்கு ஆதரவாக இப்படிப் பாடியிருப்பார் பாப் மர்லி. பாடலின் உணர்வு வேறுதான்.
ஆனால் நாம் எல்லோரும் கான்கிரீட் காடுகளில்தான் ஒளியின்றிக் கிடக்கிறோம். இந்த கான்கிரீட் சுவர்கள் இன்றி நமது வாழ்க்கை இல்லை இன்று. அதனால் ஒளியை உள்ளே அனுமதிக்கும் சுவர்கள் இருந்தால், நிலவின் வெளிச்சமும் வீட்டுக்குள் வரும். இப்படி ஒளியை ஊடுருவ வைக்கும் சுவர்களை டிரான்ஸ்பரன்ட் கான்கிரீட் கொண்டு உருவாக்கலாம்.
ஒளியை ஊடுருவ வைக்கும் சில பொருட்களை உள்ளடக்கிய கான்கிரீட் கலவையே டிரான்ஸ்பரன்ட் கான்கிரீட் என அழைக்கப்படுகிறது. OFC எனப்படும் ஆப்டிக் ஃபைபர் கேபிள்களின் ஒருமுறையில் செலுத்தப்படும் ஒளிக்கற்றை கேபிள் வழியாக ஊடுருவிச் சென்று மறுமுனையை அடையும்.
இந்தத் தொழில்நுட்பம் இந்த வகையான கான்கிரீட்டில் கையாளப்படுகிறது. கலவையில் பயன்படுத்தப்படும் ஃபைபர் இழைகளைக் கொண்ட சுவர்களின் வெளிப்பக்கத்தில் பாய்ச்சப்படும் ஒளி கணிசமாக மறுபக்கத்தில் தெரியுமாறு இந்தச் சுவர்கள் அமையும். இந்தவகையான டிரான்ஸ்பரன்ட் கான்கிரீட்டைக் கொண்டு வெளிநாடுகளில் மட்டுமே தற்போது அதிகமாகக் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன.
டிரான்ஸ்லுசென்ட் எனவும் வழங்கப்படும் டிரான்ஸ்பரன்ட் கான்கிரீட் பயன்பாடு குறித்த செயல் விளக்கங்கள், பரிசோதனை முயற்சிகள் ஜெர்மனி போன்ற நாடுகளில் அடிக்கடி நடக்கின்றன. டிரான்ஸ்பரன்ட் கான்கிரீட்டைப் பயன்படுத்தி செய்யப்பட்டிருக்கும் பல்வேறு வடிவங்களும் கண்காட்சிக்கு வைக்கப்படுகின்றன.
பலமுறைகளில் டிரான்ஸ்பரன் கான்கிரீட்டின் உருவாக்கம் நிகழ்கின்றது. பொதுவாக 95 சதவீதம் சாதாரண கான்கிரீட்டுடன் 5 சதவீதம் ஒளி ஊடுருவும் தன்மையுள்ள பொருட்களின் சேர்மானத்தில் அச்சுகளில் உருவாக்கப்படுகிறது. பயன்படுத்த வேண்டிய தன்மைக்கேற்ப அச்சில் வார்க்கப்படும் வடிவங்களில், தேவைக்கேற்ப மாற்றங்கள் உருவாக்கப்படுகின்றன.
டிரான்ஸ்லுசன்ஸ் கான்கிரீட் முதன்முதலாக 1935-ல் கனடா நாட்டின் காப்புரிமையோடு தயாரிக்கப்பட்டது. அன்றிலிருந்து கண்ணாடி இழைகள் மற்றும் பாலிமர் ஃபைபர் இழைகள் என தற்போது டிரான்ஸ்லுசன்ஸ் கான்கிரீடின் வளர்ச்சி அபரிமிதமாக வளர்ந்துள்ளன. தொடக்கத்தில் டிரான்ஸ்லுசன்ஸ் கான்கிரீட்டாக அறிமுகமாகி இன்றைக்கு நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் கூடிய தொழில்நுட்பங்களும் இதில் சாத்தியமாகி உள்ளன. டிரான்ஸ்லுசன்ட் கான்கிரீட் தயாரிப்பில் ஜெர்மனி, ஹங்கேரி, ஆஸ்ட்ரியா, செக் குடியரசு போன்ற நாடுகள் ஈடுபட்டுள்ளன.
ஃபைன் ஃபேப்ரிக் தவிர ஆப்டிக் ஃபைபர் மற்றும் டெக்ஸ்டைல்ஸ் நுட்பங்களைக் கொண்டும் டிரான்ஸ்லுசன்ஸ் கான்கிரீட் உருவாக்கப்பட்டது. மிகப் பெரிய சுவர்களை ஒளி ஊடுருவும் வகையில் அமைப்பதற்கு இத்தகைய நுட்பங்கள் பெரும்பாலும் கைகொடுப்பவைகளாக இருந்தன.
முதன்முதலாக 2001-04 ஆண்டுகளில் முதல் ஆப்டிக் ஃபைபர் மற்றும் கான்கிரீட் கலவையைக் கொண்டு டிரான்ஸ்பரன்ட் கான்கிரீட்டை பயன்பாட்டுக்கு கொண்டுவந்த பெருமைக்கு உரியவர் ஹங்கேரியைச் சேர்ந்த கட்டிடக் கலை நிபுணரான அரான் லெஸான்ஸி.
சின்னச் சின்ன ஃபைபர்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக கான்கிரீட் கலவையோடு கலந்து கட்டிடங்களை உருவாக்குவதற்கான பிளாக்குகளாகத் தயாரித்தார். டிரான்ஸ்பரன்ட் கான்கிரீடில் கண்ணாடியும் சிமென்ட் கலவையும் சேர்ந்திருக்கிறது என்னும் நிலையிலிருந்து அதன் வடிவத்தை தீர்மானிப்பதற்கான அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது முக்கியமான ஒரு நிகழ்வாகக் கருதப்பட்டது.
ஒளி ஊடுருவும் இத்தகைய சுவர்கள் இயற்கை மற்றும் செயற்கை வெளிச்சங்களை ஈர்க்கும். இதன்மூலம் வெளியிலிருந்து பார்க்கும் ஒருவருக்குச் சுவருக்கு உள்ளே இருப்பவரின் உருவ விளிம்பு நன்றாகத் தெரியும். ஒளி ஊடுருவலைத் தவிர, சுவர்களில் விரிசல் விழாமல் தடு்ப்பது, சுவரின் தாங்கும் திறன் போன்றவற்றுக்கும் சிறப்பு வாய்ந்தவையாக டிரான்ஸ்பரன்ட் கான்கிரீட் உள்ளது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago