காம்போசிட் கட்டுமானம்

By யுகன்

கட்டுமானத்துக்கு இரு வெவ்வேறு தன்மையுள்ள பொருட்களைப் பயன்படுத்தும் போக்கு பழங்காலத்திலிருந்தே நடைமுறையில் இருந்துவரும் ஒரு அம்சம். இது காம்போசிட் கட்டுமானம் என அழைக்கப்படுகிறது.

கட்டுமானங்களில் பொதுவாக கல், மணல், சிமெண்ட் என்பது பொதுவான சேர்மானமாக இருந்தாலும், தன்மையில் வேறுபடும் இரும்புப் பட்டைகள், கம்பிகளைக் கொண்டும் கட்டுமானம் நிர்மாணிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட கட்டுமானங்களை அமெரிக்காவில் மிகப் பெரிய பாலங்களை அமைப்பதற்கும் ரயில்கள் செல்லும் வகையில் பறக்கும் பாலம் அமைப்பதற்கும், கடற்கரைத் துறைமுகங்கள் கட்டுமானப் பணிகள் அமைப்பதற்கும் பயன்படுத்தப்பட்டன.

தோற்றம்

காம்போசிட் நுட்பத்தின் தோற்றத்தை ஆராய்ந்தால் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாகவே கிரேக்க நாகரிகத்திலேயே இதன் சுவடுகள் காணப்படுகின்றன. எகிப்தியர்களும், மெசபெட்டோமியர்களும் காம்போசிட் நுட்பத்தில் திறன் பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். அந்தக் காலத்தில் மண்ணும் வைக்கோல் சேர்மானமே உறுதியான கட்டுமானங்களை உருவாக்கப் போதுமானதாக இருந்திருக்கின்றது.

இப்படிப் பல பொருட்களை ஒன்றிணைத்து அவற்றை ஒன்றாக்கும் தொழில்நுட்பம் அன்றைக்கே இருந்திருக்கின்றது. பலம் குறைந்த கட்டுமானப் பொருளையும் பலமுள்ளதாக்கும் இத்தகைய யோசனை பல காலங்களுக்கு முன்பே மனிதர்களிடம் இருந்திருக்கிறது என்பதற்கு சில உதாரணங்கள்தான் இவை.

பலவும் ஒன்றாகும் நிலை

கட்டுமானங்களில் அடிப்படையில் மாறுபட்ட குணங்களை உடைய பொருட்களை ஒருங்கிணைப்பதை காம்போசிட் என்பார்கள். இப்படி மாறுபட்ட பொருள்கள் ஒருங்கிணையும் போது, ஒவ்வொரு பொருளுக்கென இருக்கும் தனிப்பட்ட தன்மைகள் இணைந்து முற்றிலும் மாறான பிரிக்கமுடியாத தனித் தன்மையுடையதாக அவை மாறுகின்றன. இந்த மாற்றம் கட்டுமானத்துக்கு மிகவும் தேவைப்படும் ஒன்றாக இருக்கிறது. இந்த இணைப்பிற்குப் பின் அவை தனித்தனியாக நகர வழி இருக்காது. பலவும் ஒன்றாகிவிடும் இந்தத் தன்மையால், கட்டுமானத்துக்கு மிகப் பெரிய அளவில் பலம் கிடைக்கிறது.

காம்போசிட் கட்டுமானத்தில் பயன்படும் பொருட்கள்

நாளடைவில் இத்தகைய காம்போசிட் கட்டுமானம் வீடுகள் அமைப்பதிலும் செல்வாக்கை செலுத்த ஆரம்பித்தது. வீட்டின் காம்போசிட் கட்டுமானங்களில் இரும்பு போன்ற உலோகங்களைப் போன்றே மரத்தையும் பயன்படுத்தும் போக்கு அதிகரித்தது. அதோடு ஃபைபர்கிளாஸ் ரீஇன்போர்ஸ்டு பிளாஸ்டிக், அழுத்தத்தைத் தாங்கக் கூடிய மரங்களும் பல்வேறு அளவுகளில் பயன்படுத்தப்படுகின்றன.

சிமெண்ட் – பாலிமர் கம்போசிட்

சிமெண்ட் – பாலிமரைச் சேர்த்து உருவாக்கப்படும் கம்போசிட் சேர்மானம் பல சோதனைகளுக்குப் பின், பாரம் பரியமான சிமெண் உபயோகத்துக்கு மாற்றாகப் கட்டுமானங்களில் பயன்படுத்தப் படும் நிலையை எட்டியுள்ளது. பாரம்பரியமான சிமெண்ட் உபயோகிக்கும் முறையில் விரிசல்கள் விடுவதை தவிர்க்கமுடியாது. ஆனால் இத்தகைய நிலை சிமெண்ட் – பாலிமர் கம்போசிட்டைப் பயன்படுத்தும்போது தவிர்க்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் உறுதித் தன்மையை அமெரிக்கன் சொசைட்டி ஃபார் டெஸ்டிங் அண்ட் மெட்டீரியல்ஸ் சர்வதேச நிறுவனம் தரப்படுத்தி உள்ளது.

காம்போசிட் கட்டுமானத்தின் தன்மை

பொருட்களை இணைப்பது எப்படி, ஒவ்வொரு பொருளின் பிடிமானம் எத்தகையதாக இருக்கும், ஒவ்வொரு பொருளின் விறைப்பும் உறுதியும் கொண்டு எத்தகைய பொருளுடன் இதனைச் சேர்த்தால் அதனால் எப்படிப்பட்ட உறுதித் தன்மையுள்ள ஒரு சேர்மானம் கிடைக்கும் என்பதைப் பற்றிய தெளிவுடன் காம்போசிட் உருவாக்கப்பட வேண்டும். கட்டுமானத் துறையில் நிபுணத்துவம் அதிகம் இருப்பவர்களுக்கு இதைப் பற்றிய புரிதல்கள் இருக்கும்.

காம்போசிட் கட்டுமானத்தால் விளையும் நன்மைகள்

காம்போசிட் பயன்பாடு கட்டுமானத்தின் வலிமையை அதிகரிக்கும். இதற்கு மாறாக, மிகவும் குறைந்த எடை கொண்டவை. வெப்பம் மற்றும் மின்சாரப் பயன்பாடுகளுக்கு ஏற்றவை. காம்போசிட் கட்டுமானப் பொருட்களால் உருவாக்கப்படும் வடிவமைப்புகள் நீண்ட காலத்திற்கு வடிவம் மாறாமல் இருக்கும்.

தீ விபத்துகளால் அதிகம் சேதம் ஆகாது. பராமரிப்பதற்கு எளிமையானது. அதிகம் செலவு பிடிக்காது. குறைந்த விலையில் காம்போசிட் கட்டுமானப் பொருட்களை உருவாக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்