வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் வரும்போதே, வீட்டுக் கடன் எவ்வளவு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் சேர்ந்தே வருகிறது. வீடு வாங்குவதில் பெரும்பான்மையானோருக்கு பணத் தேவையைப் பூர்த்தி செய்வது வீட்டுக் கடன்தான். அதனால்தான் ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் (ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் பெறும் குறுகியகால கடனுக்கான வட்டி விகிதம்) குறைக்கப்படும் போதெல்லாம் வங்கிகளில் வீட்டுக் கடன் உள்ளிட்ட இதரக் கடன்கள் குறையுமா என்ற எதிர்ப்பார்ப்பும் மக்களிடம் காணப்படுகிறது.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இரண்டு முறை ரெப்போ ரேட்டை ரிசர்வ் வங்கிக் குறைத்திருக்கிறது. எனவே, வீட்டுக் கடன் உள்ளிட்ட கடனுக்கான வட்டி விகிதங்களை வங்கிகள் குறைக்குமா?
ரிசர்வ் வங்கி கடந்த 4-ம் தேதி ரெப்போ ரேட்டை 0.25 சதவீதம் குறைத்தது. அதாவது, இதற்கு முன்பு ரெப்போ ரேட் 7.75 சதவீதமாக இருந்தது. அதை 7.50 சதவீதமாகக் குறைத்துள்ளது ரிசர்வ் வங்கி. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் இந்த வட்டிக் குறைப்பை செய்திருக்கிறது ரிசர்வ் வங்கி. ஜனவரிக்கு முன்பு 2014-ம் ஆண்டு முழுவதும் ரெப்போ ரேட் குறைக்கப்படாமலேயே இருந்தது. கடந்த ஜனவரி 15-ம் தேதி அன்று நாடு முழுவதும் அறுவடைத் திருநாள் பண்டிகை விடுமுறையாக இருந்தபோது ரெப்போ ரேட் விகிதத்தை 0.25 சதவீதம் ரிசர்வ் வங்கி குறைத்தது. ஓராண்டு கழித்து இந்த வட்டிக் குறைப்பு செய்யப்பட்டது.
ரிசர்வ் வங்கி கடந்த 4-ம் தேதி ரெப்போ ரேட்டை 0.25 சதவீதம் குறைத்தது. அதாவது, இதற்கு முன்பு ரெப்போ ரேட் 7.75 சதவீதமாக இருந்தது. அதை 7.50 சதவீதமாகக் குறைத்துள்ளது ரிசர்வ் வங்கி. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் இந்த வட்டிக் குறைப்பை செய்திருக்கிறது ரிசர்வ் வங்கி. ஜனவரிக்கு முன்பு 2014-ம் ஆண்டு முழுவதும் ரெப்போ ரேட் குறைக்கப்படாமலேயே இருந்தது. கடந்த ஜனவரி 15-ம் தேதி அன்று நாடு முழுவதும் அறுவடைத் திருநாள் பண்டிகை விடுமுறையாக இருந்தபோது ரெப்போ ரேட் விகிதத்தை 0.25 சதவீதம் ரிசர்வ் வங்கி குறைத்தது. ஓராண்டு கழித்து இந்த வட்டிக் குறைப்பு செய்யப்பட்டது.
வழக்கமாக ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் வட்டி விகிதத்தைக் குறைக்குபோது, வங்கிகள் பொதுமக்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களைக் குறைக்கும் நடவடிக்கைகளும் இருக்கும். ஆனால், கடந்த ஜனவரியில் ரிசர்வ் வங்கி 0.25 சதவீதம் குறைத்த நிலையிலும் இரு வங்கிகள் தவிர பெரும்பாலான வங்கிகள் வீட்டுக் கடன், வாகனக் கடன், தனி நபர் கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்கவில்லை.
கடந்த பிப்ரவரி 3-ம் தேதி ரிசர்வ் வங்கியின் கடன் கொள்கை அறிவிக்கப்பட்டது. அப்போது மீண்டும் ரெப்போ ரேட் குறைக்கப்படும் என எதிர்ப்பார்ப்பு நிலவியது. அதற்கான சூழ்நிலைகள் நிலவியதால் எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் ரெப்போ ரேட் குறைக்கப்படவில்லை. அதேசமயம், கடன் கொள்கையில் எஸ்.எல்.ஆர் எனப்படும் வங்கிகள் கட்டாயமாக ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டிய இருப்புத் தொகையை 22 சதவீதத்திலிருந்து 21.50 சதவீதமாகக் குறைத்தது. இதன் காரணமாக ரூ. 45 ஆயிரம் கோடி அளவுக்கு வங்கிகளுக்குப் பணப்புழக்கம் அதிகரித்தது. எனவே இந்தப் பலன் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும் என்று கூறப்பட்டது. அப்போதும்கூட பல வங்கிகள் வீட்டுக் கடன் உள்ளிட்ட கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்கவேயில்லை.
இந்நிலையில் தற்போது மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை வெளியாகி சில நாட்கள் கழித்து ரெப்போ ரேட்டை 0.25 சதவீதம் குறைத்துள்ளது ரிசர்வ் வங்கி. எனவே இப்போது வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் குறையுமா? “ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின் காரணமாக வீட்டுக் கடன், வாகனக் கடன், தனி நபர் கடனுக்கான வட்டி விகிதங்கள் நிச்சயம் குறைக்கப்படலாம். ஏற்கெனவே கடந்த ஜனவரி மாதம் ரெப்போ ரேட் குறைக்கப்பட்ட போது ஒரு சில வங்கிகள் மட்டுமே வீட்டுக் கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்தன. எனவே இப்போது பெரும்பாலான வங்கிகள் வட்டி விகிதத்தைக் குறைக்கக்கூடும்” என்கிறார் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் துணைப் பொதுமேலாளர் எஸ்.கோபாலகிருஷணன்.
கடந்த இரண்டு மாதங்களுக்குள் ரிசர்வ் வங்கி 0.50 சதவீதம் ரெப்போ ரேட்டை குறைத்துள்ளதால், அதன் பலனை வாடிக்கையாளர்களுக்கும் வங்கிகள் வழங்கும் என்று நம்பலாம்.
ரெப்போ ரேட் குறைக்கப்படும் போதெல்லாம், வங்கிகள் மாறுபடும் (ஃப்ளோட்டிங் ரேட்) வட்டி விகிதத்தில் வாங்கிய கடனுக்குதான் வட்டி விகிதங்களைக் குறைக்கும். நிலையான வட்டி விகிதத்தில் (ஃபிக்ஸ்டு ரேட்) வாங்கிய கடனுக்கு வட்டியை வங்கிகள் குறைக்காது. அது அப்படியேதான் இருக்கும். ஆனால், அண்மைக் காலமாக வங்கிகள் வீட்டுக் கடனை மாறுபடும் வட்டி விகிதத்தில்தான் வழங்குகின்றன. எனவே வீட்டுக் கடன் உள்ளிட்ட இதர கடன்களை வாங்குபவர்களுக்கு இது பயனளிக்கும் என்கிறார் எஸ்.கோபாலகிருஷ்ணன்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago