சிமெண்ட்டுகளில் பல வகை உள்ளன. அதன் பகுதிப் பொருள்களைப் பொறுத்து அது பல வகைப்படுகிறது. பண்டைய காலத்தில் இருந்தே சிமெண்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது. சுண்ணாம்பு, சாம்பல், செங்கல் ஆகியவற்றைக் கலந்து சிமெண்ட் தயாரித்துள்ளனர். இந்த சிமெண்டை நீருடன் கலக்கும்போது அவை குழைந்து சிறந்த கட்டிட இணைப்புப் பொருளாகும்.
சிமெண்டின் பல வகை
சல்பேட் ரெசிஸ்டிங் போர்ட்லேண்ட் சிமெண்ட், ராபிட் ஹார்டனிங் போர்ட்லேண்ட் சிமெண்ட், லோ ஹீட் போர்ட் லேண்ட் சிமெண்ட், போர்ட்லேண்ட் சிலாக் சிமெண்ட் எனப் பல வகை சிமெண்ட்டுகள் கிடைக்கின்றன. இதில் சல்பேட் ரெசிஸ்டிங் சிமெண்ட் கழிவு நீரேற்றும் இடங்களில் பயன்படுகிறது.
அம்மாதிரியான உப்பு அரிப்பு கொண்ட இடங்களில் இந்த வகை சிமெண்ட் உகந்தது. இதில் உள்ள டிரை கால்சியம் அரிப்பைத் தடுக்கும் தன்மை கொண்டது. உனடியான கட்டிடப் பணிகளுக்கு ராபிட் ஹார்டனிங் சிமெண்ட் சிறந்தது. இது உடனடியாக உலர்ந்துவிடக் கூடியதாக இருக்கும். இது ஜிப்சம், சுண்ணாம்புக்கல், கற்கரி, மாக்கல் போன்றவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
சிலாக் சிமெண்ட்
இதே போன்ற ஒன்றுதான் சிலாக் சிமெண்ட். அதாவது கசடு சிமெண்ட் எனலாம். இரும்பு உருக்காலைகளில் இரும்பை உருக்கில் இரும்பைப் பிரித்தெடுப்பார்கள். திரவ நிலையில் உருக்கப்பட்ட தாது, குளிர்விக்கப்படும்போது கசடுகள் எஞ்சும். இதை மறு சுழற்சியாக சிமெண்ட் தயாரிக்கப் பயன்படுத்தலாம்.
இதனுடன் கால்சியம் சல்பேட் சேர்க்கப்படும். இந்த வகையில் தயாரிக்கப்படும் சிமெண்டில் 80 சதவீதம் இரும்பு ஆலைக் கழிவுகள் இருக்கும். கடினமான ஜிப்சம் 5 சதவீதம் சேர்க்கப்படும். 15 சதவீதம் போர்ட்லேண்ட் சிமெண்ட் சேர்க்கப்படும்.
இவை பெரும்பாலும் கான்கிரீட் பணிகளுக்குப் பயன்படுகின்றன. அமெரிக்கா போன்ற நாடுகளில் 90 சதவீதத்திற்கும் மேல் இந்த சிமெண்டைப் பயன்படுத்துகிறார்கள். மறுசுழற்சி முறையில் தயாரிக்கப்படுவதால் சுற்றுச் சூழலுக்கும் உகந்தது. மேலும் இவை கட்டிடத்திற்கு உறுதியை அளிக்கின்றன. ரசாயன அரிப்புகளில் இருந்தும் கட்டிடத்தைக் காக்கின்றன.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago