வீட்டுக் கடனுக்கு அப்பால்...

By மிது கார்த்தி

வீட்டுக் கடன் வாங்க பலரும் ஒரு தொகையை முடிவு செய்து வங்கியை அணுகுவார்கள். ஆனால், வங்கிகளோ கேட்ட தொகையைவிடக் குறைவாகவே கொடுத்ததாகப் பலரும் அலுத்துக் கொள்வார்கள். வாகனக் கடனை அல்லது இதரக் கடன்களை வங்கியில் வாங்கினால், குறிப்பிட்டக் காலத்துக்குள் அதை திருப்பிச் செலுத்த வங்கிகள் நிர்ப்பந்திக்கும். ஆனால், வீட்டுக் கடனுக்கு மட்டும் பல வருடங்கள் அவகாசம் வழங்குவது ஏன் என்று வீட்டுக் கடன் வாங்கியவர்கள் என்றாவது யோசித்திருக்கிறீர்களா?

கடனைத் தீர்மானிக்கும் வருவாய்

இதற்கெல்லாம் காரணங்கள் இருக்கின்றன. யார் வீட்டுக் கடன் கேட்டாலும், வங்கிகள் கேட்கும் முதல் கேள்வியே, எங்கு வேலை செய்கிறோம், எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பதைத்தான். அதாவது, கடனைத் திருப்பிச் செலுத்தும் அளவுக்கு வருமானம் இருக்கிறதா என்பதைத்தான் வங்கிகள் முக்கியமாக ஆராயும். மாதச் சம்பளம் அல்லது மாத வருமானத்தில் இருந்து உத்தேச வீட்டுக் கடனுக்கான இ.எம்.ஐ., பி.எஃப். உள்ளிட்ட அனைத்து வகை பிடித்தங்களும் போக, சம்பளத்தில் இருந்து குறைந்தபட்சம் 35 சதவீதத் தொகையையாவது குடும்பச் செலவுகளுக்காக இருக்கிறதா என்பதை வங்கிகள் பார்க்கும். இதை உறுதி செய்த பிறகுதான் வீட்டுக் கடன் கிடைக்கும். நாம் வாங்கும் வீட்டுக் கடனைத் தீர்மானிப்பதே, நாம் சம்பாதிக்கும் சம்பளம்தான். எனவேதான் கேட்ட அளவுக்கு வீட்டுக் கடன் பலருக்கும் கிடைப்பதில்லை.

நீண்ட கால அவகாசம் ஏன்?

வங்கிக் கடன் வாங்குவதில் கவனிக்கத்தக்க பல விஷயங்கள் இருப்பது போல திருப்பிச் செலுத்துவதிலும் சில அம்சங்கள் இருக்கின்றன. இதில் முக்கியமான ஒன்று, கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு வங்கிகள் வழங்கும் காலஅவகாசம். சாதாரணமாக வீட்டுக் கடனை 5 ஆண்டுகளில் இருந்து 25 ஆண்டுகள் வரையில் திருப்பிச் செலுத்தலாம். சில நேரங்களில் 30 ஆண்டுகள் வரைகூட அவகாசம் வழங்கப்படுகிறது. இதற்கு என்ன காரணம் என்றால், வங்கிக்கு வழங்கிய பணத்துக்கு கிடைக்கக்கூடிய பாதுகாப்புதான்.

வாகனக் கடன், தொழிற்சாலை தளவாடக் கடன் உள்ளிட்ட இதரக் கடன்களை 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் கடனைத் திருப்பிச் செலுத்திவிட வேண்டும் என்று வங்கிகள் நிர்ப்பந்திக்கும். ஏனென்றால், மோட்டார் வாகனங்களையோ, மற்ற வாகனங்களையோ, தொழிற்சாலைத் தளவாடங்களையோ சில ஆண்டுகள் கழித்து விற்றால், குறைந்த விலைக்குத்தான் வாங்குவார்கள். ஆனால், வீடோ மனையோ அப்படியில்லை. இவற்றைப் பல ஆண்டுகள் கழித்து விற்றாலும், அவற்றின் மதிப்பு அதிகரித்துக்கொண்டேதான் செல்லும், எப்போதும் குறைய வாய்ப்பில்லை. இப்படி ஒரு பாதுகாப்பு அம்சம் இருப்பதால்தான் வங்கிகள் வழங்கிய கடனை திரும்ப பெற்றுக்கொள்ள அதிகபட்ச கால அவகாசத்தைத் தரப்படுகிறது.

வங்கிகளின் நிபந்தனை

அதேசமயம், கடனைத் திருப்பிச் செலுத்த காலஅவகாசம் வழங்க சில நிபந்தனைகளயும் வங்கிகள் விதிப்பதுண்டு. கடன் பெறும் நபர், பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்குள் இ.எம்.ஐ.-யைக் கட்டி முடிக்கப்பட்டுவிடுமா என்பதை வங்கிகள் முக்கியமாகப் பார்க்கின்றன. ஒருவேளை பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும், இ.எம்.ஐ. செலுத்துவதற்கான வருவாய் இருந்தால், 70 வயது வரைகூடக் கடனை அடைக்க அவகாசம் தரப்படுகிறது. 60 வயதைக் கடந்த பிறகு கடனை அடைப்பதற்கு அவகாசம் கோரினால், அவரது வாரிசுகள் இந்தக் கடனுக்கு எழுத்துபூர்வமாக உத்திரவாதம் கொடுத்தால், அவரை ‘கோ-ஃபாலோயர்’ ஏற்றுக் கொண்டு கால நீட்டிப்பு கொடுப்பதுண்டு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்