வீடு கட்டுவதில் முக்கியமான பணி கான்கிரீட் போடுவது. கான்கிரீட்டால் அமையும் மேற்கூரைதான் நம்மையும் வீட்டையும் மழை, வெயிலில் இருந்து நம்மைப் பாதுகாப்பதும் இந்தக் கான்கிரீட்தான். வீட்டுக்கு கான்கிரீட் அமைக்கும் பணி என்பது ஒரு பண்டிகையைப் போல தொழிலாளர்கள் கொண்டாடுவார்கள். அன்று தொழிலாளர்களுக்கு விருந்து வைக்கும் வழக்கமும் உண்டு.
மேற்கூரை மட்டுமல்லாது அடித்தளத்திற்கும் கான்கிரீட் அவசியமானது. கான்கிரீட்டைச் சரியாக அமைக்கவில்லை என்றால் பிறகு பாதிப்புகள் உண்டாகும். வீட்டின் ஆயுளும் குறையும். அதனால் கான்கிரீட்டில் நாம் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அப்படிப்பட்ட கான்கிரீட் அமைக்கப்பட்ட பிறகு அதைப் பராமரிப்பதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டும். ஏனெனில் கான்கிரீட் பலமாக அமைந்தால்தான் வீட்டின் ஆயுள் நெடுநாள் நீடிக்கும்.
கான்கிரீட் அமைக்க கம்பி கட்டியவுடன் அதை அரிப்பிலிருந்து பாதுகாப்பது முக்கியம். இப்போது கான்கிரீட்டைப் பலப்படுத்த பல விதமான கட்டுமானப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதுபோலக் கட்டுமானக் கம்பியில் ஏற்படும் அரிப்பைத் தடுக்கவும் பல உபகரணங்கள் வந்துள்ளன. அவற்றில் ஒன்றுதான் ஜென்ட்ரிஃபிக்ஸ் (zentrifix). நாள்பட்ட கான்கிரீட் கட்டுமானத்தை பழுதுபார்க்க இது மிகப் பொருத்தமான கட்டுமானப் பொருள்.
ஜென்ட்ரிஃபிக்ஸ் தூள் போன்ற வடிவில் கிடைக்கும். இதை அப்படியே தண்ணீருடன் கலந்து பயன்படுத்தலாம். தண்ணீருடன் கலந்து நன்றாகக் கலக்க வேண்டும். நன்றாகக் கூழ் போன்ற நிலை வருமாறு கலந்துகொள்ள வேண்டும். கட்டிகள் இல்லாதவாறு காற்றுக் குமிழ்கள் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இதெல்லாம் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். அதிகமான நீர் இல்லாதவாறும் பார்த்துக்கொள்ள வேண்டும். அதே சமயம் கெட்டியாகவும் இருக்கக்கூடாது.
வீட்டிற்கு வண்ணம் பூசுவதுபோல் இந்தக் கரைசலைப் பூச வேண்டும். இரும்புக் கம்பிகளின் மேல் அவற்றின் மேல் பகுதியை மூடும்படியாக இந்த ஜென்ட்ரிஃபிக்ஸைப் பூச வேண்டும். இவ்வாறு இருமுறை அடிப்பது அவசியம். கட்டுக் கம்பிகளால் கட்டப்பட்டு கம்பிகள் அடுக்கப்பட்டிருக்கும். கம்பிகள் மற்றும் கட்டுக் கம்பிகள் மேலும் முழுமையாக இந்த ஜெண்ட்ரி பிக்ஸைப் பூச வேண்டும்.
இது ஒரு கம்பிகளின் மேல் ஒரு மேல் பூச்சாக அணிவிக்க வேண்டும். இதை ஒரு கடமையாகச் செய்யாமல் இது அரிப்பைத் தடுப்பதற்காகச் செய்யப்படுகிறது என்பதை மனத்தில் வைத்து பூச வேண்டும். இது இப்போது இந்தியாவில் பரவலாகக் கிடைக்கிறது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago