இளங்காற்று உலவும் இல்லம்

By ரிஷி

ஓடியாடிச் சம்பாதிக்கும் காலத்தில் வருமானத்தின் பெரும்பகுதியைச் செலவழித்த போதும் நல்ல வீடு ஒன்றைக் கட்டிக்கொண்டால் போதும் அதில் கிடைக்கும் நிம்மதிக்கும் சந்தோஷத்துக்கும் ஈடு இணையே இல்லை என்று நினைக்கிறோம். அப்படியான வீடு வாங்கும் போதோ கட்டும்போதோ அது எப்படி அமைய வேண்டும் என்ற கற்பனையிலேயே நாள்களைக் கழிக்கிறோம்.

பொதுவாக வீடு விஷயத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எல்லா வீடுகளும் ஒன்றுபோல் தோன்றினாலும் சின்னச் சின்ன மாறுபாடுகளைக் கொண்டிருக்கும். ஒரே போல் தென்படும் வீடுகளின் விலைகளில் சிறிய வேறுபாடு காணப்படும். நாம் பணத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு செயல்பட்டால் வீட்டுக்குத் தேவையான சில அனுகூலங்களை இழந்துவிடும் ஆபத்து உண்டு. அதே சமயத்தில் அதிக விலை கொடுத்தாலும் சரியான வீட்டைத் தேர்ந்தெடுத்தால் நம்மால் சிறிது பணத்தைச் சேமிக்க இயலும்.

அதிக விலை கொடுத்து வாங்கும்போது எப்படிச் சேமிப்பு சாத்தியம் என்னும் கேள்வி எழுகிறதா? சில விஷயங்களைக் கவனித்துப் பார்த்து வீடு வாங்கினால் சேமிப்பு சாத்தியமே. என்ன விஷயத்தைக் கவனிக்க வேண்டும்?

நீங்கள் வாங்கப் போகும் வீட்டின் உள்புறத்தை நன்றாகக் கவனித்துப் பாருங்கள். வீட்டின் வெளிப் புறம் பார்ப்பதற்குப் பளிச்சென்று இருப்பது போல் உள்புறமும் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கிறதா எனக் கவனியுங்கள்.

வீட்டின் உள்புற நேர்த்தி என்றால் அழகான, வசீகரமான வண்ணம், பள பளவென்ற தரை போன்றவை மட்டுமல்ல. வீட்டுக்குள்ளே நல்ல வெளிச்சமும் காற்றும் கிடைக்கும் படி வீடு அமைக்கப்பட்டிருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். வீட்டில் வாழ்பவர்கள் புழங்கும் அறைகளில் ஆரோக்கியமான சூழல் நிலவத் தேவையான காற்று உட்புகுந்து வருவதற்கேற்ற வகையிலான ஜன்னல்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் ஆரோக்கியமாக வாழ வீட்டிற்குள் சூரிய ஒளியும் சுத்தமான காற்றும் நிறைய வர வேண்டும்.

வெளிச்சமும் காற்றும்

வீட்டின் உள்ளே உருவாகும் வெப்பம் வெளியேறப் போதுமான வெண்டிலேஷன் அமைதலும் மிக அவசியம். அத்தகைய வெண்டிலேஷன் முறையாக அமைக்கப்பட்டிருக்கும்போது நச்சுக் காற்று வெளியேற வசதியாக இருக்கும். இதனால் வீட்டில் சுகாதாரக் கேடான காற்று உலவும் வாய்ப்பு அடைபட்டுப் போகும். வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியம் பேணப்படும்.

அவசியமான ஜன்னல்கள் வீட்டில் அமைக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அநாவசியமாக விளக்கெரிக்க வேண்டிய தேவை இருக்காது. வீட்டில் அதிகப்படியான வெப்பம் உருவாகும் வாய்ப்பைக் குறைத்துவிட்டால், பகலில் அதிக நேரம் குளிர்சாதன வசதியைப் பயன்படுத்துவதைக் குறைத்துவிடலாம். அதிகமான கோடையில் மட்டுமே இத்தகைய வீட்டுக்கு ஏ.சி. தேவைப்படும். எந்நேரமும் ஏ.சி.யை இயங்கவிட வேண்டிய தேவை ஏற்படாது. அதேபோல் பகலில் விளக்கை எரிக்க வேண்டிய அவசியமும் இருக்காது. இரவில் மட்டும் விளக்குகளை ஒளிரவிட்டால் போதும்.

நமது புழக்கத்திற்குத் தேவையான இடங்களில் தண்ணீர் கிடைக்குப் போதுமான குழாய் வசதி அமைந்திருக்க வேண்டும். மின் சாதனங்களுக்குத் தேவைப்படும் மின்சாரத்தை அளிக்கும் வகையிலான சுவிட்ச் போர்டுகளும் சுவிட்சுகளும் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். இவையெல்லாவற்றையும் வீட்டில் குடிபோவதற்கு முன்னர் கவனித்துக்கொள்ள வேண்டும்.

ஒப்பந்தம் போட்டு வீடு கட்டினால் வீட்டு ஒப்பந்தத்திற்கு முன்னர் இதைப் போன்ற தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும். இவற்றை எல்லாம் கவனிக்காமல் வீட்டுக்குக் குடிபோய் விட்டால் அதிகச் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும். அப்போது நமக்குத் தேவையான வசதிகளை மேற்கொள்ள முயலும்போது அதனால் அதிக நேரமும் பணமும் செலவாகும். இவை அநாவசிய விரயங்கள். நாம் சிறிது விழிப்புணர்வுடன் நடந்து கொண்டால் இவற்றை நம்மால் தவிர்க்க முடியும்.

வீட்டின் தரைகளில் என்ன தளம் போடப்பட்டிருக்கிறது என்பதை நிச்சயம் கவனமாக இருப்போம். தளத்தில் என்ன கட்டுமானப் பொருள் பதிக்கப்பட்டிருக்கிறது, டைல்ஸா மார்பிள்ஸா கிரானைட்டா என்பதில் எல்லாம் மிகவும் விழிப்புடன் இருப்போம். ஆனால் குளிய லறையில் தேவையான வாஷ் பேசின் இருக்கிறதா, போதுமான குழாய்கள் உள்ளனவா என்பவற்றையும் நினைவில் கொள்ள வேண்டும். ஏனென்றால் இவை அனுதினமும் அவசியப்படும் வசதிகள். இவை எல்லாவற்றையும்

முறையாகப் பரிசோதித்த பின்னரே வீட்டை வாங்க வேண்டும். அதை விடுத்துச் சிறிது விலை குறைவு என்பதால் உள்புறம் முறையாக இல்லாத வீட்டை வாங்கினால் அவதி தான் வந்து சேரும். ஏனெனில் அவற்றைப் எல்லாம் புதிதாக உருவாக்க அதிகச் செலவு பிடிக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

வீடு என்பது நிம்மதியாக வாழ உதவ வேண்டும். எனவே நிதானமாக வீட்டைச் சோதித்துப் பார்த்து வீடு வாங்கினால் நிம்மதியாகக் காலத்தை அங்கே கழிக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்