சவுந்தர்யம் தரும் சுவர் அலங்காரம்

சு

வர்கள் நம் வீட்டுக்கு சவுந்தரியத்தையும் தரக்கூடியவை. சுவர்கள், வெறும் சுவர்களாக இருந்தால் உம்மண்ணா மூஞ்சிக் குழந்தையாக இருக்கும். அதனால் அவற்றைக் கலகலப்பான சுட்டிக் குழந்தையாக மாற்ற வேண்டும். அதற்காக அதிகமாக அலங்காரங்கள் செய்தால் சேட்டைக்காரக் குழந்தையாக ஆகிவிடும். அளவாக அலங்கரித்தால் அழகு கூடும்.

வீட்டுச் சுவர்களில், அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி போன்ற குடும்ப உறுப்பினர்களின ஒளிப்படங்களை ஃப்ரேம் செய்து மாட்டிவைக்கும் பழக்கம் முன்பு வழக்கத்தில் இருந்தது. திருமணம், வளைகாப்பு, காதுகுத்து விழா போன்ற அவர்களது வாழ்வின் முக்கியச் சம்பவங்களை ஒளிப்படங்களாகப் பார்க்கும்போது அந்த நிகழ்வுடன் நாமும் தொடர்புபடுத்திப் பார்த்துக்கொள்ள முடியும். ஆனால், இடையில் அந்தப் பழக்கம் வழக்கொழிந்தது.

இப்போது அப்படி ஒளிப்படங்களை மாட்டிவைப்பது இல்லை. ஆகவே, சுவர்களில் விதவிதமான ஓவியங்களை மாட்டி வைக்கும் வழக்கம் உருவானது. இந்தியாவின் புகழ்பெற்ற ஓவியங்களை ஃப்ரேம் செய்து மாட்டும் வழக்கம் வந்தது. இயற்கைக் காட்சிகளைச் சுவரில் மாட்டி வைக்கும் பழக்கமும் வந்தது. ஓவியங்களை ஸ்டிக்கர்களாக ஒட்டும் பழக்கம் உள்ளது. அதற்குத் தேர்ந்த உள் அலங்கார நிபுணர்கள் இருக்கிறார்கள். இவை மட்டுமல்லாது சுவரில் அழகான கடிகாரங்களை மாட்டிவைக்கும் வழக்கமும் உண்டானது.

shutterstock_223385854

அழகழகாக ஆயிரம் மாடல்களில் சுவர்க் கடிகாரங்கள் கிடைக்கின்றன. அவற்றை மாட்டி வைக்கும்போது நேரத்தையும் அறிந்துகொள்ளலாம். மனதுக்கும் சந்தோஷம் அளிக்கலாம். வீடு என்பது எல்லா வகையிலும் சந்தோஷம் தரக்கூடிய வகையில் இருக்க வேண்டியது அவசியம்.

புதிய புதிய விஷயங்கள் மீது மனிதருக்கு எப்போதுமே ஆவல் அதிகமாக இருக்கும். எனவே, வீட்டின் சுவரலங்காரத்தை அடிக்கடி மாற்றிக்கொண்டேயிருப்பதன் மூலம் புத்துணர்ச்சி கிடைக்கும். ஆகவே, ஒரே அலங்காரத்தையே எப்போதும் பராமரிப்பதை விடுத்து வெவ்வேறு அலங்காரங்களை வீட்டில் பராமரிக்கலாம்.

கற்பனை வளத்துடன் அழகான சுவரலங்காரப் பொருள்களை உருவாக்கி அவற்றை வீட்டில் மாட்டலாம். அவை அதிக செலவு வைப்பதுமில்லை. நமது சந்தோஷத்தையும் அதிகரிக்கும். வீட்டில் நாம் மேற்கொள்ளும் சிறுசிறு மாற்றங்கள்கூட நமது மன இறுக்கத்தைப் பெருமளவில் குறைக்க உதவும்.

பல்வேறு பணிகளின் நிமித்தம் அலைந்து திரிந்து வீட்டுக்குள் வரும் நமக்கு வீட்டின் ஒவ்வொரு அம்சமும் ஆறுதலையும் ஆசுவாசத்தையும் தர வேண்டியது நல்லது என்பதைக் கவனித்தில் கொண்டு வீட்டின் அலங்காரங்களை மேற்கொள்ளலாம்.

வீட்டுச் சுவர் அலங்காரத்தை அடிக்கடி மாற்றிக்கொள்ளலாம். அது குறித்து மனச் சோர்வு கொள்ளக் கூடாது. எவ்வளவுக்கு எவ்வளவு நம் வீடு புதிதாக இருக்கிறதோ அவ்வளவு நாமும் உற்சாகமாக இருக்கிறோம் என்றும் அர்த்தம். அகத்தின் அழகு இனி முகத்தில் அல்ல உங்கள் வீட்டில் தெரியும் எனலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்