வீ
ட்டுக்கு முகத்தைப் போன்றவை கதவுகள். அதன் லட்சணத்தை வைத்து வீட்டின் கம்பீரத்தை விருந்தினர்கள் அறிந்துகொள்வார்கள். அதனால் வீட்டின் கதவை வடிவமைப்பதில் மிகுந்த அக்கறை கொள்ளப்படுவதுண்டு. கோயில் கட்டிடக் கலைக்கு நிகரான வேலைப்பாடுகளுடன் கதவுகள் வடிவமைக்கப்படுவதுண்டு. கதவுகள் தயாரிக்கப் பயன்படுத்தும் பொருள்களின் அடிப்படையிலும் பயன்பாடு அடிப்படையிலும் வடிவ அடிப்படையிலும் பல வகை உள்ளன.
கதவுகள் முதலில் மரத்தால் மட்டுமே செய்யப்பட்டு வந்தன. பிறகு இரும்பு, கண்ணாடி போன்ற பொருட்களும் பயன்படுத்தப்பட்டன. கதவுகள் வடிவமைப்பதில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு முறை உள்ளது. அதைப் போல வீட்டின் முகப்புக் கதவு ஒரு மாதிரியாகவும், உள்ளறைகளுக்கு ஒரு மாதிரியாகவும் தயாரிக்கப்படுகின்றன. இந்த முறையில் ஐந்து வகை உள்ளன.
கீல் கதவு
16jkr_Hinged Patio100
நிலையில் கீலால் இணைக்கப்பட்டு இயங்கக்கூடிய கதவுகள் கீல் கதவுகள் என அழைக்கப்படுகின்றன. பொதுவாகப் பெரும்பான்மையாக இம்மாதிரிக் கதவுகள்தான் அதிகம் பயன்பாட்டில் இருக்கின்றன.
பக்கவாட்டில் நகரும் கதவு
16jkr_sliding100
இம்மாதிரிக் கதவுகள் பெரும்பாலும் அலுவலகங்களில்தான் பயன்படுத்தப்படுவதுண்டு. வீட்டில் வரவேற்பறையில் பயன்படுத்தப்படுவதுண்டு. கதவு நகரும் வகையில் மேலும் கீழும் சிறிய தண்டவாளங்கள் அமைக்கப்படும். இந்தத் தண்டவாளத்தில் கதவுகளைப் பொருத்தி இயக்க வேண்டும். இந்த வகைக் கதவுகளைப் பராமரிப்பு சிரமம். தூசி ஏதாவது தண்டவாளத்தின் துளைகளை அடைத்துக்கொண்டால் கதவு நகராது.
காட்சிக்கான கதவு
16jkr_Scenescapedoor100
இம்மாதிரிக் கதவு மிகப் பெரிய பால்கனி உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இப்போது பயன்படுத்தப்படுகிறது. தனி வீடுகளில் தோட்டத்தைப் பார்த்தவாறு ஒரு பக்கம் முழுவதும் கண்ணாடிக் கதவுகளை அமைப்பதன் மூலம் அந்தக் காட்சியை அறையிலிருந்தே காணலாம். இந்தக் கதவுகள் கீல் அல்லது நகரும் கதவுகளைக் கொண்டு வடிவமைக்கப்படுகின்றன.
முகப்புக் கதவு
16jkr_entry100
இந்தக் கதவு வீட்டின் நுழைவு வாயிலாக அமைக்கப்படுவது. இவை பெரும்பாலும் முழுவதும் அடைக்கும்படியாக மரத்தைக் கொண்டு வடிவமைக்கப்படும். இதில் கீல் தொழில்நுட்பத்தில்தான் தயாரிக்கப்படுகிறது.
வெளிச்சக் கதவு
16jkr_stromDoor100
வீட்டின் முகப்புக் கதவுக்கும் மேல் வடிவமைக்கப்படும் ஒரு கண்ணாடிக் கதவு இது. பகல் நேரங்களில் வீட்டின் முகப்பை வெளிச்சத்துக்காகத் திறந்து வைத்து, பாதுகாப்புக்காக இந்த வெளிச்சக் கதவை மூடிவைக்கலாம். அதனால் வெளிச்சமும் வரும். பாதுகாப்பும் கிடைக்கும்.
தானாக மூடும் கதவு
16jkr_flush100
இந்த வகைக் கதவு பொதுவாகவே அலுவலகங்களில்தான் பயன்பட்டு வந்தன. இப்போது வீடுகளிலும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இதை திறந்து விட்டால் அதுவாக மூடிக்கொள்ளும். வீட்டின் உள்ளறைகளுக்கு இவை ஏற்றவை. ஏசி பயன்படுத்தும் அறையில் கதவு சரியாக அடைக்கப்படாதபோது வெளி வெப்பம் நுழைந்து மின்பயன்பாட்டை அதிகப்படுத்தும். இந்த வகைக் கதவுகள் தானாக கதவை இறுக்கமாக அடைத்துக்கொள்ளும் தன்மை கொண்டது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago