உலக ஒளிப்பட நாள்: இந்தியக் கட்டிட ஒளிப்படக் கலைஞர்கள்

By விபின்

ஒளிப்படக் கருவி கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலேயே கட்டிட ஒளிப்படக் கலை உருவாகிவிட்டது. இந்தியாவைப் பொறுத்தவரை கட்டிட ஒளிப்படக் கலை பிரபலமடையவில்லை. ஆனால், மேற்குலக நாடுகளில் இது மிகப் பெரிய கலையாக உருவாகியுள்ளது. கட்டிட வடிவமைப்புகளுக்கு முன்மாதிரியாக இந்த ஒளிப்படங்கள் உதவுகின்றன. மேலும் முழுமையாக்கப்பட்ட கட்டிடங்களைப் பதிவுசெய்யவும் இந்தக் கலை உதவுகிறது.

கட்டிட ஒளிப்படங்கள் அதன் அழகையும் வடிவமைப்பையும் பிரநிதித்துவப்படுத்தும் வகையில் எடுக்கப்படுகின்றன. பிரெஞ்சு ஒளிப்படக் கலைஞரான யுஜீன் அஜே 19-ம் நூற்றாண்டில் உலக அளவில் பிரபலமான கட்டிட ஒளிப்படக் கலைஞராகத் திகழ்ந்தார். தற்போது ஸ்பெயின் ஒளிப்படக் கலைஞரான விட்டோரியோ என்ரிச், இங்கிலாந்து ஒளிப்படக் கலைஞரான டென்னிஸ் கில்பெட்ர் உள்ளிட்ட பலர் இந்தத் துறையில் பிரகாசித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தியாவைச் சேர்ந்த ஒளிப்படக் கலைஞர்கள் சிலரும் இந்தக் கட்டிட ஒளிப்படக் கலையில் இயங்கிவருகிறார்கள். பரத் ராமாமிர்தம், ராஜேஷ் வோரா, ஹர்ஷன் தாம்ஸன், மிதுல் தேசாய், டினா நந்தி, ரந்தீர் சிங், சுலைமான் மெர்சண்ட் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். இந்த எழுவர்கள் எடுத்த ஒளிப்படத் தொகுப்பு இது:

பரத் ராமாமிர்தம்

சென்னையைச் சேர்ந்த பரத் ராமாமிர்தம் 25 வருட கால அனுபவம் உள்ளவர். இவரது ஒளிப்படங்கள் பல முன்னணிப் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. கட்டிடங்கள் மட்டுமல்லாது கோயில்களையும் இவர் படம் எடுத்துள்ளார். இவரது ஒளிப்படங்கள் இந்தியச் சுற்றுலாத் துறை விளம்பரத்துக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. மட்டுமல்லாது மொரீசியஸ், செஷல்ஸ் ஆகிய நாடுகளின் சுற்றுலாத் துறை பிரச்சாரத்துக்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ராஜேஷ் வோரா

புனேயைச் சேர்ந்த ராஜேஷ் வோரா 25 வருட காலம் அனுபவம் உள்ளவர். நகரக் கட்டிட வடிவமைப்பைப் பதிவுசெய்வதில் இவரது பங்கு முக்கியமானது. இவரது ஒளிப்படங்கள் தனிக் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.

ஹர்ஷன் தாம்ஸன்

இந்தியா, சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளிலிருந்து இயங்கக்கூடிய ஒளிப்படக் கலைஞர் இவர். 15 ஆண்டு கால அனுபவம் உள்ளவர். கட்டிடக் கலைஞராகவும் பயிற்சிபெற்றவர். உலகின் மிக முக்கியமான கட்டிடங்களை ஒளிப்படம் எடுத்திருக்கிறார்.

மிதுல் தேசாய்

மும்பையைச் சேர்ந்த கட்டிட ஒளிப்படக் கலைஞரான முதுல் தேசாய், கட்டிடக் கலைஞராகப் பயிற்சிபெற்றவர். இவர் ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். நவீனக் கட்டிடக் கலையை ஒளிப்படங்கள் எடுப்பதில் பிரசித்திபெற்றவர் இவர்.

டினா நந்தி

டினா நந்தி கொல்கத்தா, ஊட்டி, மும்பை ஆகிய நகரங்களில் மாறி மாறி வாழும் சுயாதீன ஒளிப்படக் கலைஞர். இவையல்லாமல் இடையிடையே ஜாம்பியாவிலும் வசித்துவருகிறார். இவர் கட்டிடங்கள் மட்டுமல்லாது திருமணங்கள், குழந்தைகள் பிறப்பையும் படம் எடுத்துவருகிறார்.

ரந்தீர் சிங்

ரந்தீர் சிங் நியூயார்க்கில் கட்டுமானக் கலையைப் பயின்றவர். கட்டிடக் கலைஞராக 15 வருட அனுபவம் கொண்டவர். ஒளிப்படக் கலை மீதான ஆர்வத்தால் இந்தத் துறைக்கு வந்தவர், கடந்த 8 வருடங்களாகக் கட்டிட ஒளிப்படக் கலைஞராக இருந்துவருகிறார்.

சுலைமான் மெர்சண்ட்

மும்பையைச் சேர்ந்த இவர் இந்தத் துறையில் 8 வருட அனுபவம் கொண்டவர். கட்டிடங்களை மட்டுமல்லாமல் நகரத்தை அதன் வாழ்க்கையுடன் பதிவுசெய்து வருபவர். மும்பை தெரு வாழ்வை ஒளிப்படங்களின் வாயிலாகப் பதிவுசெய்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்