என் கணவருடைய நண்பர் ஒருவர் கடந்த நான்கு ஆண்டுகளாகச் சென்னையிலுள்ள தன் வீட்டை விற்பதற்கு வந்து போய்க் கொண்டிருந்தார். அவர் வசிப்பது ஹைதராபாத்தில். வீடு சென்னை புரசைவாக்கத்தில். மேலும் நண்பருடைய பையனும் பெண்ணும் துபாயிலிருப்பதால் அடிக்கடி அங்கு சென்றுவிடுவார்.
“என்ன ஆயிற்று சென்னை வீடு?” என என் கணவர் கேட்கும்போதெல்லாம் “நிறைய பிரச்சினை இருக்கு” என்று பட்டும்படாமலும் பதிலளிப்பார். பிறகு மெல்ல விசாரித்த பிறகுதான் பல விஷயங்கள் தெரிந்தன:
குறிப்பிட்ட மனை நண்பருக்கும் அவர் தம்பிக்கும் சொந்தமானது. பாகம் பிரித்துத் தனித் தனியே வீடு கட்டிக் கொண்டனர். மனையின் பரப்பளவு மூன்று கிரவுண்ட் இருக்கலாம். இருந்தாலும் வீட்டின் பிளிந்த் ஏரியா 1,200 சதுர அடி. முன்பக்கம் காலி மனை.
கோயில் நிலத்தின் அனுபவப் பாத்தியதை
இருந்தும் விற்பதற்கு ஏன் இத்தனை சிக்கல்? உண்மை என்னவென்றால் நிலம் கோயிலுக்குச் சொந்தமானது. அண்ணன், தம்பி இருவரும் மனைக்கு வாடகை மாத்திரம் செலுத்தி, அந்த மனையில் வீடு கட்டிப் பல வருடங்களாக அனுபவித்து வந்திருக்கிறார்கள்.
மேலும் தகப்பனாரிடமிருந்து நண்பர் பெயருக்குச் சொத்து மாற்றப்பட்டதற்கான அத்தாட்சிகள் பல இருக்கின்றன. மூலப் பத்திரம், விற்பனைப் பத்திரம், வில்லங்கச் சான்றிதழ் எல்லாம் இருக்கின்றன. ஆனால், பட்டா இல்லை.
மனையும் வீடும் வட சென்னையின் முக்கியமான இடத்தில் அமைந்திருப்பதால் நிறைய விலை போவதற்கான வாய்ப்புகள் அதிகம். வங்கியிலிருந்து கடன் பெற்றுத்தான் வீட்டை வாங்குவார்கள். ஆனால், பட்டா உரிமையாளர் பெயரில் இல்லாதபோது தயக்கம் காட்டுவார்கள். கடனும் கிடைக்காது.
சொந்தப் பணம் போட்டு வீட்டை வாங்கலாம்தான். ஆனால், அந்த அளவுக்கு விபரீத முயற்சி எடுத்து அதிகத் தொகையை முதலீடுசெய்ய யார் முன்வருவார்கள்?
மற்றொரு விஷயம் இங்கு கவனிக்கத்தக்கது. 2016-லிருந்து இந்து சமய அற நிலையத் துறை, மனை வாடகையை எக்கச்சக்கமாக உயர்த்திவிட்டது. கிட்டத்தட்ட மூன்று மடங்காக உயர்த்திவிட்டதாக நண்பர் சொன்னார். குறைக்கச் சொல்லி வழக்கறிஞர் மூலமாகக் கோரிக்கை வைத்துப் பார்த்திருக்கிறார். ஆனால், சாதகமான பதில் கிடைக்கவில்லை.
ஆக, வீட்டை விற்கவே முடியாதா என்றால் பட்டா கோயில் பெயரில் இருக்கும்போது மாற்றுவதற்கான பத்திரம் (transfer deed) மட்டும்தான் எழுத முடியும். அப்படியும் அரசு அனுமதி கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்.
என்ன தீர்வு?
வெளியூரில் இருக்கும் பட்சத்தில் வர்த்தக நிறுவனங்களுக்கு மொத்தமாகக் குத்தகைக்கு விடலாம். புரசைவாக்கத்தில் முக்கியமான இடத்தில் உள்ளதால் நிறுவனங்கள் இதை குத்தகைக்கு எடுக்க ஆர்வம் காட்டும் வாய்ப்புகள் அதிகம். ஆனால், நண்பர் என்ன செய்யப்போகிறாரோ?
இந்த நண்பர் மட்டுமல்ல மயிலாப்பூர், திருவல்லிக்கேணி போன்ற பல இடங்களில் கோயில் இடங்களில் வீடு கட்டிப் பலர் அனுபவித்துவருகிறார்கள். ஸ்ரீரங்கத்திலும் இதேபோல் கோயில் நிலத்தில் வீடு கட்டி அனுபவித்துவருகிறார்கள். வழி வழியாக வாரிசுகளுக்குத்தான் இந்த அனுபவப் பாத்தியதை கைமாறும். வேறு ஒருவருக்கு விற்க முடியாது. மேலும் கோயில் நிலத்தை அனுபவிப்பது தொடர்பான விதிகள் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago