தள வீடுகளின் சவால்கள்

By லலிதா லட்சுமணன்

இருபது வீடுகளைக் (Flats) கொண்ட மூன்று அடுக்குக் கட்டிடம் ஒன்று உள்ளது. இந்தத் தளம் கட்டி முடித்து முப்பது வருடங்களாகின்றன. அப்போது வாகனம் வைத்திருப்பவர் மிகக் குறைவு. எனவே, அந்த வளாகத்தில் பன்னிரண்டு வாகன நிறுத்த இடங்களே தேவைப்பட்டன.

இன்று கேட்கவே வேண்டாம். நடுத்தரக் குடும்பத்தினர் இரண்டு வாகனங்கள் வைத்திருக்கிறார்கள். உயர் நடுத்தர வகுப்புப் பிரிவினருக்கு இரண்டு கார்கள் உள்ளன. இவற்றை எங்கே கொண்டுபோய் நிறுத்துவது? இதுதான் பெரிய பிரச்சினை.

எங்களுடைய அடுத்த குடியிருப்பில் இதனால் பெரிய சச்சரவே வந்துவிட்டது. அங்கு ஒரு நபர் காலியான இடத்தில், தன்னுடைய புதிய காரை நிறுத்திவிட செயலாருக்கும், அவருக்கும் பெரிய மோதல். இரவு ஏழரை மணிக்கு இரு தரப்பினரும் பரஸ்பரம் ஒருமையில் பேசும் அளவுக்குச் சண்டை முற்றிவிட்டது. அக்கம் பக்கத்தினர் வேடிக்கை பார்த்தார்கள்.

ஆக, தளங்களில் வாகனம் நிறுத்த இடம் இல்லாததே பிரச்சினைக்குக் காரணமானது. யாராவது ஒருவர் தனது பிடிவாதத்தை விட்டுக் கொடுத்தால்தான் சுமூகமான சூழல் நிலவும்.

குழந்தைகள்

அடுத்ததாக குழந்தைகள் விளையாடுமிடம். மேலே சொன்ன தளங்கள் உள்ள குடியிருப்பில், பொதுவாகக் கீழேயுள்ள இடமே சிறு குழந்தைகளுக்கு விளையாடுமிடமாக அமைகிறது. ஒளிந்து பிடிப்பது, பலூனைப் பிடித்து வீசுவது, டென்னிஸ் பந்து கிரிக்கெட் போன்றவை. ஒரு நாள், எங்கள் தளத்தில், குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தபோது, “சத்தம் போடாதீங்க, ஐயா தூங்கறார்” என்று ஒரு பெண்மணி கண்டிப்பான குரலில் எச்சரித்தார். எனக்கு இது ஒரு புதிராகவே தோன்றியது. சத்தமில்லாமல், அதுவும் சிறுவர்கள் எப்படி அமைதியாக விளையாடுவார்கள்? அவர்களுக்கு விடுதலை கிடைப்பது மாலைப் பொழுதுகளில்தான். இதுபோன்ற குறுக்கீடுகள் குழந்தைகளின் உற்சாகத்துக்கு அணை போடுவது போல்தான்.

காவல்காரர்

பொதுவாகத் அடுக்குமாடி குடியிருப்பில் காவல் காக்கும் ஆட்கள் வேற்றுமொழி பேசு பவர்களாகத்தான் வருகிறார்கள். ஒரு கட்டத்தில் காவல்காரனின் பார்வையே சரி இல்லை. போதாக் குறைக்குக் கீழ்த்தள வீட்டு வாசலில் நின்றுகொண்டு ஒட்டுக் கேட்டிருக்கிறார்ன். விசாரித்தால், முன் அறையிலிருந்து கேட்கும் தொலைக்காட்சி செய்தியை கேட்டுக் கொண்டிருப்பதாகப் பதில் வந்தது. வேறொரு முதிய ஆசாமி, வருகிற கடிதங்களைப் பிரித்துச் சரியான தளத்தில் கொண்டு போய்க் கொடுக்கவே தடுமாறியிருக்கிறார்.

அடுக்குமாடிக் குடியிருப்புச் சங்கச் செயலாளரிடம் முறையிட்டபோது, “எனக்கும் தெரிகிறது. சொல்லியிருக்கிறேன். முதல் தேதியிலிருந்து வேறு ஆட்கள் வருவார்கள்” என்றார். நல்ல காலம், சொன்னபடி அன்றிலிருந்து வேறு ஆட்கள் பொறுப்பு ஏற்றார்கள்.

பிற

தள வீடுகளில் வாடகைதாரர்களும், உரிமையாளர்களும் குடியிருக்கிறார்கள். இவர்களில் வாடகைதாரர்கள் பாடுதான் ரொம்பச் சிரமம். எங்கள் தளத்துக்குக் கீழே உள்ள உரிமையாளர், “பாருங்க, இது வெயில் காலம், உங்க பிளாட்டிலிருந்துதான் தண்ணீர் ஒழுகுகிறது” என்று கூறினார். அதற்குச் சாட்சியாக வராந்தாவில் வைக்கப்பட்டிருந்த சிறிய வாளியைக் காண்பித்தார். நான், உரிமையாளரிடம் சொல்லி, அவர் பிளம்பரை வரவழைத்துச் சோதனை பண்ணினார். பின்பக்க பால்கனியில் இருந்த ஸிங்கிலிருந்துதான் சொட்டுகிறது என்று பிளம்பர் கண்டுபிடித்தார். ஆனால், சரி செய்ய நிறைய செலவாகும் (ரூ.5000க்கு மேல்) பணியாளை அடுத்த மாதம் வரச் சொல்லி சரி செய்வதாக, கீழ்த்தள உரிமையாளரிடம் சொல்லிவிட்டார்.

அந்த வீட்டின் உரிமையாளர் வசிப்பது உள்ளூரில். அவர் வேறு மாநிலத்திலோ அல்லது அயல் நாட்டிலோ இருந்தால் நிலைமையை எப்படிச் சமாளிப்பது? தொடக்கத்தில் கட்டிடம் நிறுவிய ஒப்பந்தக்காரர் மீது பழியைச் சுமத்த வேண்டியதுதான். ஆனால், இது தீர்வாகாதே.

ஆக, பத்து இருபது வீடுகள் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இதுபோன்ற நிலைமை நிலவினால் நூற்றுக்கும் மேற்பட்ட தளங்களில் வசிப்பவர்கள் நிலை இன்னும் மோசம் என்று எண்ணினேன். ஆனால், விசாரித்தபோது ஆச்சரியம் காத்திருந்தது. அங்கெல்லாம் பூங்கா, விளையாடுமிடங்கள், நிறுத்த இடம் என்று தனித்தனியே உள்ளனவாம். உயர்ரக தளங்களில் நீச்சல் குளம் வேறு. காவல்காரரை நியமிப்பது, ஒப்பந்தக்காரரின் பொறுப்பு. இதற்கென்று ஆரம்பத்திலேயே தனியான தொகை பெற்று, ஒரு கணக்கு வைத்து (Corpus Funds) அதிலிருந்து பராமரிப்புச் செலவைச் சமாளிக்கிறார்களாம்.

இன்றைய சூழலில் சென்னை போன்ற மாநகரங்களில், தளங்களில் குடியிருப்பது தவிர்க்க இயலாதது. ‘எவ்வது உறைவது உலகம் உலகத்தொடு/அவ்வது உறைவது அறிவு’ என்ற வள்ளுவரின் குறளை நினைவுபடுத்திக் கொண்டு அனுசரித்துப் போவதுதான் அழகு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்