முன்பெல்லாம் வீட்டைக் கட்டும்போது, ஜன்னல்கள் குறித்து யாரும் பெரிதாகக் கவலைப்பட்டதில்லை. வெளிச்சமும் காற்றும் வருவதற்கான ஒரு ஏற்பாடு என்ற எண்ணமே இருந்தது. ஆனால் தற்போது வீடு கட்டுபவர்கள் ஜன்னல்களின் வடிவமைப்பிலும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.
ஒரு வீட்டின் நுரையீரல்களைப் போல ஜன்னல்கள் இருக்கின்றன. ஒவ்வோர் அறையும் ஜன்னல் வழியாகவே சுவாசிக்கிறது. அதேவேளையில் ஒரு அறையை வடிவமைப்பதில் மட்டுமின்றி, ஒரு அறையில் அறைகலன்களை (Furnitures) எங்கே வைப்பது என்று முடிவு செய்வதிலும் ஒளியமைப்பை நிர்ணயிப்பதிலும் ஜன்னல்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஒரு வீட்டின் பாதுகாப்பு, வாழ்பவர்களின் அந்தரங்கம் ஆகியவற்றையும் ஜன்னல்களைச் சரியாக அமைப்பதன் மூலம் உறுதிசெய்ய இயலும்.
ஜன்னல்களைத் தேர்ந்தெடுக்கும் முறை
ஒவ்வொரு வீடும், இடமும் வெவ்வேறு தேவைகளைக் கொண்டது. யார் பயன்படுத்தப் போகிறார்களோ, அவரது விருப்பங்களைப் பொறுத்துதான் வீட்டை வடிவமைக்க வேண்டும். ஒளி வரும் திசை, வெளித்தோற்றம், ஆற்றல் சேமிப்பு, போக்குவரத்து, குழந்தைகள் மற்றும் வளர்ப்புப் பிராணிகளுக்கு எட்டாத உயரம் போன்றவை ஜன்னலை வடிவமைப்பதில் முக்கியமானவை.
திரைச்சீலைகள் மற்றும் கண்ணாடிக்குள் ஒளிவிடாத திரையமைப்பு ஆகியவை பண்ணை வீடுகள் போன்ற வற்றுக்குப் பொருத்தமாக இருக்கும். நேரடியாக சூரிய ஒளி படும் இடங்களுக்கு ஈரடுக்கு ஜன்னல்கள் தேவைப்படும். அத்துடன் புறஊதாக் கதிரியக் கத்தைத் தடுத்து உஷ்ணத்தைக் குறைக்க, பூச்சுள்ள கண்ணாடி ஜன்னல்களையும் பயன்படுத்தலாம்.
தோற்றத்தை மாற்றும் அலங்கரிப்பு
ஒரு ஜன்னலை அலங்கரிப்பதன் வழியாக அந்த அறையின் தோற்றத்தையே மாற்றிவிடலாம். பெரிய திரைகளை ஜன்னல்களில் போட்டால் அந்த அறை பெரியது போன்ற தோற்றத்தைக் கொடுக்கும். ஜன்னல் திரைகளை அறையின் கூரையைத் தொடுமாறு அமைத்து, தரைவரை தவழவிட்டால் பெரிய தோற்றம் கிடைக்கும்.
அதிகம் அலங்கரிக்கப்பட்ட ஜன்னல் சட்டங்களும் அடர்நிற முள்ள ஜன்னல் சீலைகளும் அறையை இருட்டாக்கி, சிறியதாகவும் தோன்ற வைக்கும்.
ஆற்றல் சேமிப்பு
ஈரடுக்குக் கண்ணாடி ஜன்னல் வடிவமைப்புகள் அறையின் தட்பவெப்பநிலையைச் சீராக வைத்திருக்கும். அத்துடன் புறஊதாக் கதிரியக்கப் பாதிப்பையும் கட்டுப்படுத்தும். ஜன்னல் சட்டகங்கள் மரம், உலோகத்தில் இருந்தால் அறையின் கூரை வழியாக குளிரோ, சூடோ போகாமல் தடுக்க இயலும். கண்ணாடி ஜன்னல்களில் டின்ட் பூசுவதால் திரைச்சீலைகள் சாயமிழக்காமல் இருக்கும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago