குழந்தைகளைக் கவரும் கருப்பொருள்கள்

By கனி

குழந்தைகள் அறையை அலங்காரம் செய்வதற்கு இன்று எண்ணற்ற கருப்பொருள்கள் வந்துவிட்டன. ‘சூப்பர்ஹீரோ’, ‘மினியன்ஸ்’, ‘காடுகள்’ ‘கார்டூன் கதாபாத்திரங்கள்’ போன்ற கருப்பொருள்கள் இன்று பிரபலமாகிக்கொண்டிருக்கின்றன. இந்தக் கருப்பொருள்களில் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுப்பது என்பது பெற்றோர்கள், குழந்தைகள் என இருதரப்புக்கும் சவாலான ஒன்றாகத்தான் இருக்கிறது. குழந்தைகள் அறையை வடிவமைக்கத் திட்டமிட்டிருப்பவர்கள் இந்தக் கருப்பொருள்களைப் பரிசீலிக்கலாம்.

‘ரோபோட்ஸ்’

தொழில்நுட்ப உலகத்தை விரும்பும் குழந்தைகளுக்கு இந்த ‘ரோபோட்’ கருப்பொருள் மிகவும் பிடிக்கும். ‘ரோபோட்ஸ்’ அச்சடிக்கப்பட்ட குஷன்கள், படுக்கை விரிப்புகள், சுவரொட்டிகள், திரைச்சீலைகள், தரைவிரிப்புகள் போன்றவற்றால் உங்களுடைய குழந்தையின் அறையை ரோபோட்களால் அலங்கரிக்க முடியும். அலமாரிகளிலும் ரோபோட் கடிகாரம், ரோபோட் புத்தகங்கள் என அறையை முழுமையாக ரோபோக்களால் நிரப்பிவிடலாம்.

விண்வெளி

விண்வெளியைப் பற்றித் தேடித் தேடிப் படித்துத் தெரிந்துகொள்ளும் குழந்தைகள் இன்று அதிகம். அப்படிப்பட்ட குழந்தைகளின் விண்வெளி கருப்பொருளில் அலங்கரித்தால் பொருத்தமானதாக இருக்கும். இந்தக் கருப்பொருளைத் தேர்ந்தெடுப்பவர்கள் அறையின் சுவர் வண்ணத்துக்குக் கருநீல நிறத்தை அடிக்கலாம். விண்வெளி வீரர்களும், ஏவுகணைகளும் சுவரொட்டியை அறையின் பிரதான சுவரில் ஒட்டலாம். அறையின் மேற்கூரையில் சூரியக்குடும்பம் இருக்கும்படியும் வடிவமைக்கலாம்.

பூக்கள்

வண்ணங்களை விரும்பாத குழந்தைகள் இருக்க முடியாது. அதனால், குழந்தைகள் அறையை எளிமையான பட்ஜெட்டுக்குள் வடிவமைக்கத் திட்டமிடுபவர்கள் இந்தப் பூக்கள் அலங்காரத்தைத் தேர்ந்தெடுக்கலாம். அடர்த்தியான, பிரகாசமான பூக்கள் நிரம்பிய சுவரொட்டிகளால் குழந்தைகள் அறையில் ஒட்டலாம். அந்தச் சுவரொட்டிகளுடன் பொருந்தும்படியான படுக்கை விரிப்பு அறையை மொத்தமாகப் பூக்களால் நிரம்பிய அறையாக மாற்றிவிடும்.

கடல்

ஆழ்கடல் அதிசயங்களை விரும்பும் குழந்தைகளின் அறையை இந்தக் கடல் கருப்பொருளில் வடிவமைக்கலாம். நீலம், வெள்ளை, சிவப்பு போன்ற வண்ணங்களை இதற்காகப் பயன்படுத்தலாம். குழந்தைகளின் படுக்கையைக் கப்பலைப் போன்று வடிவமைக்கலாம். அத்துடன், அறையைக் கடல் வாழ் உயிரினங்களின் பொம்மைகளையும் வைத்தும் அலங்கரிக்கலாம்.

புவியியல்

ஒரு பெரிய உலக வரைபடத்தைக் குழந்தைகளின் அறையில் மாட்டலாம். இதை வைத்து குழந்தைகள் தனியாகவும் நண்பர்களுடனும் நாடுகளின் பெயர்களைக் கண்டுபிடித்து விளையாடும் விளையாட்டுகளைக் கற்றுக்கொடுக்கலாம். அத்துடன், புவியியல் கருப்பொருளை இன்னும் அழுத்தமாகப் பதிவுசெய்ய நினைத்தால் உலக உருண்டைகளை வைத்து அறைகளை அலங்கரிக்கலாம்.

சூப்பர் ஹீரோவும் மினியன்ஸும்

‘சூப்பர் ஹீரோ’, ‘மினியன்ஸ்’, ‘மிக்கி மவுஸ்’ ‘டாம் அண்ட் ஜெர்ரி’, ‘டோரா’, போன்ற கதாபாத்திரங்கள் குழந்தைகளுக்கு எப்போதும் பிடிக்காது. அதனால், உங்கள் குழந்தைக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரத்தை வைத்து அவர்கள் அறைக்குப் பிரம்மாண்ட தோற்றத்தைக் கொடுக்க முடியும். இப்போது மிகவும் பிரபலமாக இருப்பது ‘மினியன்ஸ்’ கருப்பொருள்தான். அதுவும் இந்த ‘மினியன்ஸ்’ கருப்பொருளில் அறையை வடிவமைக்க வெளியே தேடி அலைய வேண்டியதில்லை. இந்தக் கருப்பொருளில் ஓர் அறைக்குத் தேவைப்படும் பொருள்களை ஆன்லைன் தளங்களில் வாங்கிவிடலாம்.

காடுகள்

குழந்தைகளுக்குப் பிடித்தமான விஷயங்களில் விலங்குகளுக்கு எப்போதும் இடமுண்டு. அதனால், அவர்களுடைய அறையைத் தைரியமாக காடுகளைக் கருப்பொருளாக வைத்து வடிவமைக்கலாம். விலங்குகளின் அழகான ஸ்டிக்கர்களை வைத்தே ஓர் அறைக்குள் எளிமையாகக் காட்டைக் கொண்டுவந்துவிடலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

மேலும்