ஆரோக்கியமான வீட்டிற்கான டிசைன்கள்

By மைதிலி

நம் வீடு அழகாக இருக்க வேண்டும் என நினைப்போம். அதேபோல நாமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்தானே ? வீட்டின் பாதுகாப்பைப் பற்றி எந்த அளவுக்கு யோசிக்கிறோமோ, அதே அளவுக்கு வீட்டில் வசிப்பவர்களின் ஆரோக்கியத்தைப் பற்றியும் யோசிக்க வேண்டும்.

உங்கள் வீட்டை அலங்கரிக்கப்போகும் பொருட்களைத் தேர்ந்தெடுப்பதில் வீட்டில் வசிப்பவர்களின் ஆரோக்கியமும் அடங்கியிருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. ஆரோக்கியமான முறையில் வீட்டை அலங்கரிப்பதற்குச் சில வழிமுறைகள் இதோ...

சூரியனை வரவேற்போம்

வீட்டில் சூரியன் உள்ளே வருவதற்கு எந்த அளவுக்கு இடம் கொடுக்கிறோமோ, அந்த அளவுக்கு ஆரோக்கியமாக இருக்கலாம். பகலில் வீட்டில் விளக்குகளைப் பயன்படுத்தாத வகையில் வீட்டை வடிவமைக்க வேண்டும்.

இதனால் மின்சாரச் செலவும் பன்மடங்கு குறையும். உங்கள் ஜன்னல்களைத் தெற்கு நோக்கி அமைத்தால், வீட்டுக்குள் போதுமான சூரிய வெளிச்சம் வரும்.

இயற்கையிலான பொருட்களைத் தேர்ந்தெடுங்கள்

மரத்திலான அறைக்கலன்களைத் தேர்ந்தெடுப்பதால் வீட்டில் வேதிப் பொருட்களின் தாக்கம் குறைவாக இருக்கும். சூழலுக்கும், ஆரோக்கியத்திற்கும் ஏற்ற இந்த அறைக்கலன்களால் பல நன்மைகள் இருக்கின்றன.

கூடுமானவரை, பிளாஸ்டிக், பார்ட்டிக்கல் போர்டு, குரோமிய உலோகம் போன்ற பொருட்களைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. மூங்கில் அறைக்கலன்களைப் பயன்படுத்துவது ஏற்றதாக இருக்கும்.

செடிகளால் அலங்கரியுங்கள்

வீட்டிற்குள் செடிகளை வைப்பதைவிட நல்லவிஷயம் வேறு இருக்க முடியாது. செடிகள் உங்களுக்கு நல்ல காற்றை வழங்கவும், அறையில் ஆபத்தை விளைவிக்கும் வேதிப்பொருட்களை அகற்றவும் உதவும். ஆரோக்கியத்தோடு வீட்டிற்குப் பசுமையான சூழலை வழங்கக்கூடியதாகச் செடிகள் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

உங்கள் வீட்டிற்கு ஏற்ற மாதிரி செடிகளைத் தேர்ந்தெடுக்கவும். அது சிறியதாகவும் இருக்கலாம். பெரியதாகவும் இருக்கலாம். பீஸ் லில்லி, பேம்போ பாம் போன்ற செடிகள் உட்புறக் காற்றை அதிகரிக்க உதவக்கூடியவை.

திறன்மிகுந்த விளக்குகள்

ஆற்றல் திறன்மிகுந்த பல்புகளைப் பயன்படுத்துவது சூழலுக்கு மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் உதவும். பச்சை இல்ல வாயுக்களின் தாக்கத்தையும் இதனால் குறைக்கலாம். அதனால், வீட்டிற்குப் பல்புகளை வாங்கும்போது, ஆற்றல் திறன்மிகுந்த பல்புகளை வாங்குங்கள்.

வோலட்டைல் ஆர்கானிக் காம்ப்பவுண்ட்ஸ்(வஒசி) எனப்படும் கரிமச் சேர்வை நிறைந்த பொருட்களை வாங்குவதைக் குறைக்க வேண்டும். இந்த கரிமச் சேர்வைகள் சுவர்களில் அடிக்கும் பெயிண்ட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், அறைக்கலன்கள், கார்பெட்கள் போன்றவற்றில் கலந்திருக்கின்றன. இந்தப் பொருட்களை வாங்கும் அவற்றின் கரிமச் சேர்வை அளவைக் கவனித்து வாங்குவது நல்லது.

மேல்கூரைகளைக் கவனியுங்கள்

உங்களுடைய சுவர்களுக்குக் கெடுதி விளைவிக்காத பெயிண்ட்களைப் பயன் படுத்துங்கள். சுவர்களை அலங்கரிப்பதற்கு வால்பேப்பர் களையும் உபயோகிக்கலாம். மரப்பலகைகள், தக்கைகள், செராமிக் டைல்கள் போன்றவற்றையும் பயன்படுத்தலாம். இது பாதிப்பில்லாமல் இருப்பதோடு, வீட்டை அழகாகவும் மாற்றும்.

கற்களால் அழகுப்படுத்தலாம்

சுவர்கள் மட்டுமல்லாமல் உங்கள் தரைதளத்தையும் கவனிக்க வேண்டும். தரைதளத்தை அழகுப்படுத்துவதற்கு மார்பல் போன்ற கற்களைப்பயன்படுத்தலாம். அதுமட்டுமல்லாமல், மரத்தினாலான தரைத்தளம், லேமினேட் தரைத்தளம் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

வீட்டு அலங்காரம் என்பது அழகியல் தொடர்பான விஷயம் மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கு ஆபத்து விளைவிக்காத பொருட்களைப் பயன்படுத்துவதிலும் அது இருக்கவே செய்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்